நகரசூரக்குடி





	


	



























	




 




	








 




8:55:44 PM         Thursday, April 30, 2026

நகரசூரக்குடி

நகரசூரக்குடி
நகரசூரக்குடி நகரசூரக்குடி நகரசூரக்குடி நகரசூரக்குடி நகரசூரக்குடி நகரசூரக்குடி
Product Code: நகரசூரக்குடி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                           நகரசூரக்குடி, தேசிகநாதர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் கழனிவாசல் வழியாக காணடுகாத்தான் சாலையில் 10 கி.மீ தொலைவில்  உள்ளது.

இறைவன் : தேசிகநாதர் 

இறைவி  :  ஆவுடைநாயகி

தல தீர்த்தம் : பைரவர் 

தல விருட்சம் : மாமரம்

தல சிறப்புகள் : கோவில் கருவறையில் லிங்கத் திருமேனியில், தேசிகநாதர் அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் மீது பிரம்ம ரேகைகள் காணப்படுகிறது. கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னிதி, இரண்டு சிம்மங்களை தாங்கியவாறு இருக்கிறது. அவர் அமர்ந்திருக்கும் கல்லால மரம், அதன் கிளைகள், அதிலுள்ள இலைகள், மலர்கள் என எல்லாப் பகுதிகளுமே ஒரே கல்லில் செதுக்கப்பட்டவையாகும். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடன் காணப்படுவார். ஆனால் இங்கு கதாயத்துடன் காணப்படுவது சிறப்பு.

கோவில் அமைப்பு : பழமை வாய்ந்த இந்த ஆலயம், நான்கு நிலை கொண்ட சிறிய கோபுரத்துடன் கம்பீரம் காட்டுகிறது. இத்தலம் முன்னர் தேசிகநாதபுரம் என்றழைக்கப்பட்டது. காசி விசுவநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி, சரசுவதி, ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், நாவுக்கரசர் உள்ளிட்ட அறுபத்து மூவர், காவல் தெய்வமான முனீசுவரர் ஆகியோர் உள்ளனர். கையில் சூலத்துடன் பொதுவாகக் காணப்படுகின்ற பைரவர் இங்கு கதாயுதத்துடன் உள்ளார். நவக்கிரக மண்டபம் கோயிலில் உள்ளது. சிவன் கோயில்களில் விழாக்களின்போது இறைவன், இறைவி, விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் ஆகியோர் பஞ்ச மூர்த்திகளாக உலா செல்வர். ஆனால் இக்கோயிலில் இவர்களுக்குப் பதிலாக பைரவர் செல்கிறார். கோஷ்டத்திலுள்ள யோக தட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் உள்ளார். நடராஜர் தெற்கு நோக்கிய நிலையில் காணப்படுகிறார். பார்வதியின் தந்தையான தட்சம் யாகம் நடத்தியபோது சிவனை முறையாக அழைக்காததால் அவர் அவன் மீது கோபம் கொண்டு, வீரபத்திரரை அனுப்பி யாகத்தை நிறுத்தக் கூறினார். வீரபத்திரர் யாகத்தை நிறுத்தியதோடன்றி அதில் கலந்துகொண்டவர்களையும் தண்டித்தார். சிவனின் கோபத்திற்கு ஆளான சூரியன் இங்கு வந்து மூலவரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.

ஆனி, ஆடியில் பத்து நாள்கள் விழா நடைபெறுகிறது. பைரவர் ஜென்மாஷ்டமி, ஆனி உத்திர விழா, பங்குனியில் ஆருத்ரா தரிசனம், அறுபத்துமூவர் குரு பூசை உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன.

காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  காரைக்குடி

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×