சதுர்வேதமங்கலம்





	


	



























	




 




	








 




5:35:48 AM         Wednesday, April 15, 2026

சதுர்வேதமங்கலம்

சதுர்வேதமங்கலம்
சதுர்வேதமங்கலம் சதுர்வேதமங்கலம் சதுர்வேதமங்கலம் சதுர்வேதமங்கலம் சதுர்வேதமங்கலம்
Product Code: சதுர்வேதமங்கலம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                              சதுர்வேதமங்கலம், ருத்ரகோடீசுவரர் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கையிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது 

இறைவன் : ருத்ரகோடீசுவரர்

இறைவி  :  ஆத்மநாயகி

தல தீர்த்தம் :  சூரிய, சந்திர தீர்த்தம் 

தல விருட்சம் :  எலுமிச்சை

தல சிறப்புகள் : இங்கு அமர்ந்த நிலையில் நவக்கிரகங்கள் இருப்பது கோயிலின் சிறப்பாகும். ஆவணி, மாசி மாதங்களில் இறைவன்மீது சூரிய ஒளி விழுகிறது. இத்தலத்தில் பிரம்மா மலை வடிவில் காணப்படுகிறார். இத்தலத்திற்கு சற்று தூரத்தில் அரவன் எனும் பாம்பு வடிவிலான மலை உள்ளது. சிவனை வணங்கிய பிரம்மன் எப்போதும் அவரை வணங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்பதால், அவரே இம்மலையாக மாறியதாக வரலாறு கூறுகிறது. 

தல வரலாறு : ஒரு யாகம் நடத்துவது தொடர்பான பிரச்னையில் பிரம்மா, கோபக்கார முனிவரான துர்வாசரின் சாபத்திற்கு ஆளானார். சாபவிமோசனம் பெற பல இடங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபட்டு வந்தார். ஓரிடத்தில், ஆங்கீரசர் எனும் முனிவர் தவம் செய்து கொண்டிருந்ததை கண்டார். அவரது ஆலோசனையின்படி, அந்த இடத்தில், சிவனை பிரதிஷ்டை செய்து வணங்கி சாபம் நீங்கப்பெற்றார். கலைமகளை இவ்விடத்தில் சிவனை சாட்சியாக வைத்து திருமணம் செய்தார். அவரது திருமணத்திற்கு வந்த கோடி ருத்திரர்கள் வந்தனர். இவர்கள் சிவனின் அம்சங்கள். பிரம்மாவால் படைக்கப்பட்ட இந்த ருத்ரர்களுக்கு அழிவு என்பதே கிடையாது. பிரம்மாவுக்கு படைப்புத் தாழிலில் இவர்கள் உதவி செய்வார்கள். கோடி ருத்ரர்களும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து பூஜித்தனர். கோடி ருத்ரர்களும் வணங்கிய இந்த லிங்கத்திற்கு, “ருத்ரகோடீஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது. பண்டைய காலத்தில் ‘மட்டியூர்’ என்று இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னரால், 4 வேதங்களையும் ஓதும் வேத விற்பன்னர்களுக்கு இந்த ஊர் தானமாக வழங்கப்பட்டது. பின்னர் ‘சதுர்வேதமங்கலம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. நான்கு வேதங்களை ஓதுகின்ற வேத விற்பன்னர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட ஊராதலால் இப்பெயர் பெற்றது. முத்துவடுகு சித்தர் இங்குள்ள இறைவனைப் பாடியுள்ளார்.

புராண காலத்தில் ஒரு யாகம் செய்வது தொடர்பாக பிரம்மாவுக்கும்,  துர்வாச முனிவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த துர்வாச முனிவர் பிரம்மாவை சபித்தார். சாபவிமோசனம் பெற வேண்டி சிவபெருமானை பிரம்மன் வழிபட்டு வந்தார். ஆங்கீரசர் என்ற முனிவரின் ஆலோசனையின்படி, சதுர்வேதமங்கலம் பகுதியில் சிவபெருமானை பிரதிஷ்டை செய்து பிரம்மன் வணங்கினார். இதனால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு சாபவிமோசனம் அளித்தார். இந்த நிகழ்வுக்கு பின்னர் சிவபெருமானுக்கு அப்பகுதியில் கோயில் எழுப்பப்பட்டது. இதன் பின்னர் சிவபெருமானை சாட்சியாக வைத்து கலைமகளை பிரம்மா திருமணம் செய்தார். திருமணத்திற்கு சிவபெருமானின் அம்சமான கோடி ருத்திரர்கள் வந்தனர். அவர்கள் கோயிலிலிருந்த சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து பூஜித்ததால், சிவபெருமானுக்கு  ‘ருத்ரகோடீஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

கோவில் அமைப்பு : இங்கு மூலவராக ‘ருத்ரகோடீஸ்வரர்’ என்று அழைக்கப்படும் பழமையான சிவபெருமான் கோயில் உள்ளது. கோயிலில் சித்தி விநாயகர், முருகன், ஆத்மநாயகி, சரபேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. 5 நிலைகளுடன் ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் எதிரில் ‘அரவன்’ என்ற பாம்பு வடிவில் மலை உள்ளது. சிவபெருமானை எப்போதும் வணங்க வேண்டும் என்ற எண்ணத்தில், பிரம்மனே பாம்பு வடிவ மலையாக மாறியதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. சித்தர் முத்துவடுகநாத சுவாமிகள் தனது பாடலில் ருத்ரகோடீஸ்வரர் குறித்து பாடியுள்ளார். ராஜ கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு அமைந்துள்ளது. இத்தல விநாயகர் சித்தி விநாயகர் எனப்படுகிறார். திருச்சுற்றில் இறைவனின் சன்னதிக்கு முன்பாக சரபேசுவரர் சன்னதி உள்ளது. யாகம் நடத்துவது தொடர்பாக ஒரு முறை பிரம்மா, துர்வாசரின் சாபத்திற்கு ஆளானார். சாப விமோசனத்திற்காக பல சிவத் தலங்களுக்குச் சென்றார். அப்போது ஆங்கீரசர் என்னும் முனிவரைக் கண்டார். அவரது ஆலோசனையின்படி சிவனை வணங்கி சாபம் நீங்கப் பெற்றார்.

மாசி மாதம் 10 நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடக்கிறது. மார்கழி மாத அதிகாலை பூஜை விசேஷமாக நடக்கிறது. விழா காலங்களில் பக்தர்கள் இங்கு அதிகளவில் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.  லவ, குசன் இந்த தலத்தில் அஸ்வமேத யாகம் செய்துள்ளனர். கோடி ருத்ரர்கள் வணங்கிய இந்த கோயிலில் வேண்டி கொண்டால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தல இறைவனுக்கு தோசை நைவேத்தியம் செய்யப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். அம்பாளுக்கு பவுர்ணமியில் விளக்கு ஏற்றி சிறப்பு அபிஷேகம் செய்து வளையல் காணிக்கை செலுத்துகின்றனர். சரபேஸ்வரருக்கு வடை, பாசிப் பருப்பு பாயசம் வைக்கின்றனர்.

காலை 5.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  சிவகங்கை

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×