திருப்பாச்சேத்தி, திருநோக்கிய அழகிய நாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தி கிராமத்தில் மதுரை இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், வைகை ஆற்றின் கரையில் உள்ளது. இத்தலம் முன்னர் வடுகநாதபுரம் என்றழைக்கப்பட்டது.
இறைவன் : திருநோக்கிய அழகிய நாதர்
இறைவி : மருநோக்கும் பூங்குழலி
தல தீர்த்தம் : லட்சுமி தீர்த்தம்
தல விருட்சம் : பாரிஜாதம்
தல சிறப்புகள் : சிவன் கோயிலில் பெரும்பாலும் வில்வம் கொண்டு அருச்சனை செய்யப்படும். ஆனால் இக்கோயிலில் துளசியைக் கொண்டு அருச்சனை செய்கின்றனர். நடராஜர் ஒலி வடிவாக இசைக்கல் நடராஜராகக் காணப்படுகிறார். மரகதத்தால் ஆன லிங்கம் இக்கோயிலில் உள்ளது. நளமகாராஜன் இத்தல இறைவனை வழிபட்டு பிரிந்த மனைவி, குழந்தையை அடைந்தான். மகாலட்சுமியே வழிபட்ட தலம். திருமகள் வழிபட்ட மூர்த்தம் என்பதால் மூலவர் திருநோக்கிய அழகியநாதர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். சுயம்பு மூர்த்தம் இவருக்கு வன்மீக நாதர் பார்ஜாதவனாதீசர் சக்கரவர்த்தீஸ்வரர் லட்சுமிவரத சுந்தரேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. எட்டு வகையான சனிதோஷங்களும் இவரை வழிபட்டால் விலகும் பிரதோஷ நாட்களில் இவருக்கு சிறப்பு பூஜை உண்டு அப்போது மட்டும் மரகத லிங்கம் தரிசனம் கிட்டும்.
தல வரலாறு : பிரம்மா சிவனின் கோபத்தை அனலாகத் திரட்டி கடலுக்குள் செலுத்தினார். கடலுக்குள் புகுந்த அனல் குழந்தையாகப் பிறக்கவே அதற்கு ஜலந்தரன் என பெயரிட்டனர். ஜலந்தரன் முனிவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தொந்தரவு கொடுத்தான். அவனை அழிப்பதற்கு அவனுடைய மனைவியான பிருந்தையின் பதிவிரதத்தை அழிக்கவேண்டும் என்று திருமால் அறிந்தார். அதனை அறிந்த அவள் தீயில் புகுந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். ஜலந்திரனும் தன் வலிமையை இழந்து சிவனிடம் தோற்றான். சிவன் பூமியில் ஒரு வட்டத்தை வரைந்து ஜலந்திரனை எடுக்கக் கூறியபோது அது சக்கரமாகி அழித்தது. பிருந்தையின் சாம்பலில் திருமால் கலந்தார். வைகுண்டம் இருண்டது. அப்போது பார்வதி, லட்சுமியிடம் திருப்பாச்சேத்தி இறைவனை வழிபட்டால் அவளுடைய கணவனை அடையலாம் என்று கூறவே திருமகளும் அவ்வாறே செய்தார். சிவன் சில விதைகளை கொடுத்து பிருந்தையில் சாம்பலில் தூவச் சொ அதிலிருந்து துளசி தோன்றவே, திருமால் சிவனை அருச்சித்துவிட்டு மீதியை மாலையாக்கி அணிந்தார். அதனால் சோம வாரத்தில் இறைவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
சிவபெருமான் கடும்கோபம் கொண்டு நெற்றிக்கண்ணைத் திறந்த சமயம் அது வெளிப்பட்ட வெப்பம் தாங்காமல் காமத்திற்குத் தெய்வமான மன்மதன் காணாமல் போனான். சிவனின் சினத்தை உலகம் தாங்காது என அஞ்சிய பிரம்மா அவற்றையெல்லாம் ஒன்று திரட்டி எடுத்து கடலுக்குள் ஒளித்து வைத்தார். ஆனால் அதுவோ ஓர் ஆண் குழந்தையாக உருவெடுத்து ஜலந்திரன் என்ற பெயரில் வளர்ந்தது. அசுரக்குணம் கொண்ட அவன் தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தான். அவன் மனைவி பிருந்தை மகாபதிவிரதை ஜலந்திரனை அழிக்க மகாவிஷ்ணு சித்தங்கொண்டார். அவன் மனைவியின் பதிவிரதத்தன்மைக்கு பங்கம் வந்தால் அவன் நல்வழிக்கு வருவான் என்றெண்ணி ஜலந்திரன் போல் உருக்கொண்டு பிருந்தையை நாடிச்சென்றார். அதை தனது பதிவிரதை மகிமையால் உணர்ந்த பிருந்தை அக்னியில் புகுந்து மாய்ந்தாள் ஜலந்திரன் தன் வலிமையை இழந்தான். பிருந்தியின் மேல் கொண்ட மோகத்தால் அவளது அஸ்தியில் கலந்தார் திருமால். அடுத்த வினாடி வைகுண்டம் இருண்டது மகாலட்சுமி மிகுந்த துக்கத்திற்கு ஆளானாள்.
அன்னையின் துயர் தீர்க்க எண்ணிய அம்பிகை பூலோகத்தில் உன்னதபுரி என்னும் சிவதலத்தில் உறைந்துள்ள புற்றிடங்கொண்ட ஈசனை ஆராதித்தால் உன் கணவனை மீண்டும் அடையலாம் என்று மகாலட்சுமிக்கு அறிவுறுத்தினாள் அதன்படி இத்தலம் வந்து ஒரு மண்டலம் தங்கி சிவவழிபாடு செய்த திருமகளுக்கு காட்சி தந்த ஈசன் சில விதைகளைத் தந்து பிருந்தையின் சாம்பலில் தூவுமாறு கூறினார். அப்படியே செய்ய அதிலிருந்து துளசி தோன்ற திருமாலும் மீண்டார். பின்னர் மகாவிஷ்ணுவும் லட்சுமியும் துளசி இலையால் சிவபெருமானை அர்ச்சித்ததாகவும் மீதமுள்ள இலைகளை திருமால் மாலையாக அணிந்ததாகவும் தலபுராணம் கூறுகிறது.
இத்தலம் துர்வாசமுனிவராலும் பூஜிக்கப்பட்டது இவரே நளச்சக்கரவர்த்தியிடம் இத்தலப் பெருமையை உணர்த்தி அவனது சனிதோஷத்தை நீங்கிடச் செய்தார். அதற்கு நன்றிக்கடனாகக் கட்டப்பட்டதுதான் இங்குள்ள புண்ணீய விமானம் நளமகாராஜாவால் கட்டப்பட்ட இந்த விமானம் கலியுகத்தில் திருப்பாச்சேத்தியில் மட்டுமே இருப்பது விசேஷம். இரண்டு மரகத லிங்கங்கள் தரிசனம் தருவது இரு நாய் வாகனத்துடன் பைரவர் அருள்வது திங்கட்கிழமைகளில் சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுவது நளச் சக்கர்வர்த்தியால் கட்டப்பட்ட விமானத்தை உடையது. இறையருளுடன் வளம் நிறைந்த பகுதியாக இருப்பதால் திருப்பாச்சேற்றி என்றும் லட்சுமி வழிபட்டதால் லட்சுமிபுரம் என்றும் பவளமல்லிகைக் காடாக விளங்கியதால் பாரிஜாத வனம் என்றும் நளச்சக்கிரவர்த்தி துர்வாசமுனிவர் வழிபட்டதால் உன்னதபுரி என்றும் இவ்வூருக்கு பல பெயர்கள். வயிற்று நோய் வாத நோய் இதய நோய் சரும நோய் போன்ற நோய்களை நீக்கியருள்வதால் இவர் கஷ்ட நிவாரண பைரவர் என்றே அழைக்கப்படுகிறார்
சிவாலயத்தில் நடத்தப்படும் அனைத்து உற்சவங்களும் இங்கு நடத்தப்பட்டாலும் மகாசிவராத்திரி ஆருத்ரா தரிசனம் ஆகியவை பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகின்றன. திங்கட்கிழமைதோறும் இந்த ஆலயத்தில் இறைவனுக்கு துளசி இலை அர்ச்சனை செய்யப்படுகிறது. திருமண வரம் வேண்டுபவர்கள், கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் இந்த வழிபாட்டு வேளையில் இறைவனை தரிசித்தால் சிறந்த பலனைப் பெறுவார்கள். திருமணமானபின், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அழகிய நாதரை வழிபட்டால் போதும். பிரிந்தவர்கள் சேர்கிறார்கள். இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு திருமணம் கைகூடுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், சனி தோஷம் நிவர்த்தி, கலி தோஷ நிவர்த்தி, பிரம்மகத்தி தோஷ நிவர்த்தி வேண்டுபவர்களும் இத்தலம் வந்து தரிசனம் செய்ய சிறந்த பலன் கிடைக்கும். பழமையான இத்தலத்திற்கு வந்தால் செல்வம் பெருகும்.
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மானாமதுரை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை