தேவகோட்டை





	


	



























	




 




	








 




8:52:48 PM         Thursday, April 30, 2026

தேவகோட்டை

தேவகோட்டை
தேவகோட்டை தேவகோட்டை தேவகோட்டை தேவகோட்டை தேவகோட்டை
Product Code: தேவகோட்டை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                             தேவகோட்டை, மீனாட்சி சுந்தரேஸ்வரர்
 
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ளது.
 
இறைவன் : சுந்தரேஸ்வரர்
உற்சவர் : சேக்கிழார்
இறைவி  :  மீனாட்சி
 
தல சிறப்புகள் : இது சிவன் கோயிலாக இருந்தாலும் சேக்கிழாருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இத்தலம் “சேக்கிழார் கோயில்” என்றே அழைக்கப்படுகிறது.
 
கோவில் அமைப்பு : இரு ராஜ கோபுரங்களிலும் மீனாட்சியும், சுந்தரரேஸ்வரரும் தனித்தனியாக வீற்றிருக்கின்றனர். கோயிலின் உட்பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சோமாஸ்கந்தர், மரகத விநாயகர், விசுவநாத விசாலாட்சி, பாலதண்டாயுதபாணி, சுப்ரமணியர், மகாலட்சுமி, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை, சண்டேசுவரர், சண்டேசுவரி, நடராஜர், நவகிரகங்கள், கன்னிமூலை கணபதி ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. மீனாட்சியும், சுந்தரேஸ் வரரும் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். அங்கே, சேக்கிழாரை உற்சவமூர்த்தியாக்கினார். அதில் சேக்கிழாருக்குத் தனியாக சன்னதி எழுப்பினார். இந்த கோயிலில் ஒலிப்பதற்காக, பெரிய மணி ஒன்றை வன்தொண்டர் நிறுவினார். அதில், “சேக்கிழார் கோயில் மணி” என்று பொறிக்கப்பட்டுள்ளது.
 
தல வரலாறு : சண்டாசுரன் எனும் அரக்கன், அட்டூழியங்கள் செய்து வந்தான். ஜனங்களின் காடு-கரைகளை அழித்தான்; மாடு-கன்றுகளைக் கொன்று போட்டான். வீடு- வாசல்களைத் தரைமட்டமாக்கினான். ஒருகட்டத்தில், மனிதர்களையும் கொன்று குவிக்கத் தொடங்கினான் அந்த அசுரன். மக்கள் நிம்மதியின்றிக் கலங்கினர். ‘நம் பெரியவர்களையும் பிள்ளைகுட்டிகளையும் எப்படிக் காப்பாற்றுவது’ எனத் திணறினர்; அழுதனர்; வழி ஏதும் தோன்றாமல், பார்வதிதேவியிடம் மன்றாடிப் பிரார்த்தித்தனர். மக்களின் பிரார்த்தனைக் குரல் காதில் விழவும், ஆவேசமானாள் அம்பிகை. பூலோகம் வந்தவள், ஒரு கோட்டை அமைத்துக்கொண்டு, அதில் குடியேறி, சண்டாசுரனுடன் சண்டையிட்டாள். கடும் உக்கிரத்துடன் யுத்தம் செய்து, அவனைக் கொன்றொழித்தாள். அந்த அசுரன் அழிய ஊர்மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஊர், செழித்து வளரத் துவங்கியது. எந்நாட்டவர்க்கும் இறைவனான ஈசனுக்கு, தன்னை அடியார்க்கும் அடியவன் என்று சொல்லிக் கொள்வதில் அப்படியரு ஆனந்தம் சிவனாரின் பேரருளைப் பெறவேண்டும் எனில், அடியவர்களைப் போற்றவேண்டும் எனும் பேருண்மையை அறிந்த அந்த சிவபக்தர், ‘அடியவர்களில் எவருக்குக் கோயில் எழுப்புவது’ என்று யோசித்தார்.
 
சிவனடியார்களையும் அவர்கள்தம் அருளாடல்களையும் ஒன்று திரட்டி, ஓலையில் எழுதினார் சேக்கிழார் பெருமான். அதுவே பெரியபுராணம். இந்த ஒப்பற்ற, அடியவர்களைப் போற்றும் படைப்பினைத் தந்த சேக்கிழாருக்கு ஆலயம் எழுப்புவது என முடிவு செய்தார் அந்தச் சிவபக்தர். முதல் கட்டமாக, கோயில் கட்ட இடம் வாங்கினார். அந்த இடத்தில் அஸ்திவாரம் அமைக்கும் பணியைத் துவக்கினார். அப்போது, பூமியில் இருந்து. அன்பும் கருணையுமாக தேவியின் உருவம், கடும் உக்கிரத்துடன் எட்டுத் திருக்கரங்களுடன் ஸ்ரீபத்ரகாளியின் திருவுருவம் மற்றும் தண்டாயுதபாணியின் திருவுருவம் என மூன்று விக்கிரகங்கள் கிடைத்தன. மெய்சிலிர்த்த அந்தச் சிவனடியார், மூன்று விக்கிரகங்களையும் பளிச்செனத் துடைத்தார்; கண்களில் ஒற்றிக்கொண்டார்; சுற்றி வந்து நமஸ்கரித்தார். ‘சிவனடியார்களில் முக்கியமானவரான சேக்கிழார் பெருமானுக்குக் கோயில் எழுப்ப, அந்தச் சக்தியே சம்மதம் தந்து இங்கே குடியேறிவிட்டாள்’ என எண்ணி வியந்தபடி, ஆலயத்தை பிரமாண்டமாக எழுப்புவது என உறுதிகொண்டார். அதன்படியே சிவனாருக்கும் லிங்கத் திருமேனியை அமைத்தார்; சாந்த வடிவினளாக இருந்த அம்பிகையின் திருவிக்கிரகம், தண்டாயுதபாணியின் விக்கிரகம் ஆகியவற்றையும் பிரதிஷ்டை செய்து, ஆலயம் எழுப்பினார். எட்டுக் கரங்களுடன் காட்சி தந்த ஸ்ரீபத்ரகாளியின் விக்கிரகம், ஆலயத்துக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தனிக் கோயிலாகத் திகழ்கிறது. அம்பிகை கோட்டை அமைத்துப் போரிட்ட இடம் என்பதால், இந்த ஊர் தேவிகோட்டை என வழங்கப் பட்டு, பின்னர் தேவகோட்டை என மருவியதாகச் சொல்வர். 
 
ஸ்வாமிக்கு வலப் பக்கத்தில் சந்நிதி கொண்டிருக்கிறாள் ஸ்ரீமீனாட்சியம்மை. இதனைத் திருமணக் கோலம் என்பர். ஆகவே, இங்கு வந்து வேண்டிக்கொள்ள, திருமணத்தடை அகலும் என்பது ஐதீகம். அத்துடன், தினந்தோறும் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு, ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு பாலபிஷேகம் செய்து, மாலைகள் சார்த்தி, கல்கண்டு நைவேத்தியம் செய்து பிரார்த்தித்தால், திருமண தோஷம் விலகும். நல்ல வரன் கிடைக்கும். பிள்ளை பாக்கியம் கிடைக்கப்பெறுவர். காடு கழனி செழிக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ள, அந்த வருடம் அமோக விளைச்சல். வைகாசி பூச நட்சத்திரத்தன்று சேக்கிழார் குரு பூஜையும் அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. அன்று வெள்ளியானையின் மீது வலம் வருகிறார். சித்திரை திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. இதில் சம்பந்தருக்கு அம்பிகை பால் கொடுக்கும் உற்சவம் சிறப்பானது. திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.
 
வண்ணச்சரபம் ஸ்ரீதண்டபாணி சுவாமிகள், இந்த ஆலயத்துக்கு வந்து, அந்தாதியும் பிள்ளைத் தமிழும் பாடியிருக்கிறார். உச்சிக்குடுமியுடன் காட்சி தரும் பாலதண்டாயுதபாணி. இவரை சஷ்டி நாளில் தரிசித்து வணங்கினால், எல்லா நலமும் பெற்று, வளமுடன் வாழலாம் என்பர். அன்றைய தினம் விசேஷ பூஜை மற்றும் அலங்கார ஆராதனைகளும் நடைபெறும். உச்சிக்குடுமியுடன் காட்சி தரும் தண்டாயுதபாணியை 48 நாள் தரிசிக்க நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
 
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 
 
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
 
அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  தேவகோட்டை, காரைக்குடி
 
பேருந்து  வசதி   : உண்டு
 
தங்கும் வசதி   :  இல்லை
 
உணவு வசதி : இல்லை
 
Mail this page Printable view
×
×
×
×
×
×
×