கோவிலூர்





	


	



























	




 




	








 




8:53:57 PM         Thursday, April 30, 2026

கோவிலூர்

கோவிலூர்
கோவிலூர் கோவிலூர் கோவிலூர் கோவிலூர் கோவிலூர் கோவிலூர் கோவிலூர்
Product Code: கோவிலூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                        கோவிலூர்,  கொற்றவாளீஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தில்  48 கி.மீ தொலைவில் உள்ளது.

இறைவன் : கொற்றவாளீஸ்வரர் 

இறைவி  :  நெல்லையம்மன்

கோவில் அமைப்பு : கோயிலின் முன் புறத்தில் சதுர வடிவில் தெப்பம் உள்ளது. நடுவில் 16 தூண்களுடன் நீராழி மண்டபம் காணப்படுகிறது. கோயிலின் மண்டபத்தில் ஆடல்வல்லான் சிலை காணப்படுகிறது. வீணை சரசுவதி, சாரதாம்பிகை, ஊர்த்துவ தாண்டவ நடராஜர், மீனாட்சி கல்யாணம், ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதி, மயில் மீது சண்முகர், வீரசேகர பாண்டியன் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோவிலூரில் வேதாந்த மடத்தை நிறுவிய கோவிலூர் ஆண்டவர் என்று போற்றப்படும் முத்துராமலிங்க சுவாமிகளால் இக்கோயில் கற்றளியாக்கப்பட்டது.  நெல்லையம்மன் தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. ரிஷப வாகனத்தில் பார்வதி சமேத சிவபெருமான், மயில் மீது சண்முகர், வீணையுடன் சரஸ்வதி, சாரதாம்பிகை, நடராஜர், வீரசேகர பாண்டியன் சிலைகள் உள்ளன. கோயிலின் முன்புறத்தில் சதுர வடிவில் தெப்பம் உள்ளது. 

தல வரலாறு : பண்டைய காலத்தில் திருக்கானப்பேர் என்று அழைக்கப்பட்ட காளையார்கோவில் பகுதியை மன்னர் வீரபாண்டியர் ஆண்டு வந்தார். சிவபக்தரான மன்னரிடம் ‘கொற்றவாள்’ என்ற அரியவாள் இருந்தது. அந்த வாளுடன் போர்புரிந்து, எதிரிநாட்டு மன்னர்களை அவர் வென்று வந்தார். ஒருநாள் வேட்டையாட மன்னர் காட்டிற்கு சென்றபோது, அவருடன் திருவிளையாடல் நடத்த சிவபெருமான் விரும்பினார். வேட்டையின்போது, எதிரில் தென்பட்ட மானை மன்னர் துரத்தி சென்றபோது, அவரது கையிலிருந்த வாள் திடீரென மாயமானது.

மாயமான வாளை தேடி மன்னர் அலைந்த போது, அங்கு ஒரு அந்தணரை புலி தாக்க முயன்றது. அந்தணர் மீது இரக்கம் கொண்ட மன்னர், புலியுடன் சண்டையிட்டு அதனை கொல்ல முயன்றார். அப்போது அந்தணரும், புலியும் திடீரென மறைந்தனர். அப்போது அங்கிருந்த வன்னிமரத்தடியில் உள்ள சுயம்பு சிவலிங்கம் முன்பு தனது வாள் இருப்பதை மன்னர் பார்த்தார். இதனால் நடந்தவை அனைத்தும் சிவபெருமானின் திருவிளையாடல் என்பதையறிந்து மன்னர் மகிழ்ந்தார். இந்த நிகழ்வையொட்டி, அந்த சுயம்புலிங்கத்தை சுற்றிலும் மன்னர் ஒரு கோயில் எழுப்பினார். மாயமான கொற்றவாளை மன்னருக்கு வழங்கியதால், சிவபெருமானுக்கு ‘கொற்றவாளீஸ்வரர்’ என்று பெயர் ஏற்பட்டது.

பிற்காலத்தில் இப்பகுதியில் சிவகுப்தன் என்ற சிவபக்தர் இருந்தார். சிவகுப்தன்-சுதன்மை தம்பதியருக்கு சொந்தமான வயலில் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. சுதன்மை, தனது மகள் அரதனவல்லியை வயல்வெளி காவலுக்கு செல்லும்படி கூறி அனுப்பினாள். அரதனவல்லி வயலுக்கு செல்லாமல், அருகிலிருந்த மலர் தோட்டத்திற்கு தனது தோழிகளுடன் சென்றாள். சுதன்மை, அரதனவல்லி வயலில் இருப்பதாக கருதி அவளுக்கு மதிய உணவு எடுத்து சென்றாள். ஆனால் வயல்வெளியில் அரதனவல்லி உருவத்திலிருந்த பார்வதியம்மன் பயிர்களை காவல் காத்து கொண்டிருந்தார். இதனையறியாத சுதன்மை, அம்மனுக்கு தான் கொண்டு வந்த உணவை வழங்கினாள். அம்மனும் ஆர்வத்துடன் அந்த உணவை வாங்கி சாப்பிட்டார்.

சிறிது நேரம் கழித்து சுதன்மை வீட்டிற்கு திரும்பியபோது, அங்கு அரதனவல்லி, பசியுடன் காத்திருப்பதை அறிந்தார். பின்னர் அரதனவல்லியுடம் விசாரித்த போது, வயலில் காவல் பணியில் இருந்தது பார்வதியம்மன் என்பது சுதன்மைக்கு தெரியவந்தது. இந்த நிகழ்வுக்கு பின்னர், நெல் வயலில் காட்சி தந்ததால், இங்குள்ள அம்மனுக்கு ‘நெல்லையம்மன்’ என்று பெயர் ஏற்பட்டது என்பது புராணம். நெல்லையம்மனை வழிபட்டால் நம்மை சார்ந்த பொன், பொருள், பெண்குழந்தைகள் என அனைத்திற்கும் பாதுகாவலாக துணை நிற்பாள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி உள்ளிட்டவை விசேஷ தினங்களாகும். வேலை கிடைக்க வேண்டியும், படிக்க செல்லும் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டியும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

காலை 7.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  காரைக்குடி

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×