உத்தமசோழபுரம், கரபுரநாதசுவாமி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில்
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 10 கி. மீ தூரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கரபுரநாதர் கோவில் கஞ்சமலைக்கு அருகில் திருமனிமுத்தறு கரை ஓரத்தில் அமைந்துள்ளது.
இறைவன் : கரபுநாதர்
இறைவி : பெரியநாயகி
தல தீர்த்தம் : திருமணிமுத்தாறு
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : குணசீலன் எனும் சிறுவனுக்காக மூலவர் சற்று சாய்ந்த நிலையில் அமைந்துள்ளார். கரதூசனன் என்பவர் இராவணனின் சகோதரன் ஆவார். இவர் ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்தும் இறைவன் தரிசனம் தராததால், அக்னிபிரவேசம் செய்ய துணிந்தார். அப்போது அங்கு ஈசன் வெளிப்பட்டார். கரதூசன் பூசை செய்தமையால் சிவபெருமான் கரபுரநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
தல வரலாறு : சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர், கரபுரநாதர். லிங்க வடிவில் உள்ள கரபுரநாதரின் தலை சற்று சாய்ந்த நிலையிலேயே காணப்படுகிறது. ‘‘கரபுரநாதருக்கு அர்ச்சனை செய்துவந்தார் ஓர் அர்ச்சகர். ஒருநாள் அவர் நோயுற்ற காரணத்தால், அவரால் கோயிலுக்கு வர முடியவில்லை. ஆனாலும், இறைவனுக்கு வழக்கமான அர்ச்சனையை செய்ய வேண்டுமே. அதனால், தன் மகன் குணசீலன் என்ற சிறுவனை கோயிலுக்கு அனுப்பினார். குணசீலனும் கோயிலுக்கு வந்தான். சிவனுக்கு செய்ய வேண்டிய கைங்கர்யங்கள் அனைத்தையும் செய்தான். அர்ச்சனையையும் செய்து முடித்தான். பிறகு, கரபுரநாதருக்கு மாலை அணிவிக்க முற்பட்டான். ஆனால், உயரம் போதாத காரணத்தால், லிங்கத்தின் தலை அவனுக்கு எட்டவில்லை. பதறிப்போனான்.
`இறைவா! உனக்கு அனைத்து சேவைகளையும் செய்தேனே... இந்த மாலையை என்னால் அணிவிக்க முடியாமல் போய்விடுமோ... கருணை காட்ட மாட்டாயா? என்று மனமாற கண்ணீர்மல்க இறைவனை வேண்டினான். கருணைக்கடலான ஈசன், சிறுவன் குரலுக்கு மனம் இரங்கினார். லேசாக தலையை சாய்த்தார். குணசீலன், ஈசனுக்கு மாலையை அணிவித்தான். இந்த காரணத்தால் ‘முடி சாய்ந்த மன்னர்’ என்ற திருநாமம் கரபுரநாதருக்கு உண்டானது என்பதும் இதற்கான திருக்கதையாக கூறப்படுகிறது. இந்த தலத்தின் பெருமைகளை உணர்ந்த அன்றைய சோழ மன்னர்கள், இங்கு வந்து வழிபட்டு, திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். இதனால் இறைவனை ‘சோழேஸ்வரர்’ என்றும் திருநாமம் சூட்டி அழைக்கின்றனர் பக்தர்கள். சோழர்கள் மட்டுமல்ல சேர பாண்டியர்களும் இந்த ஈசனை வழிபட்டுள்ளனர். ஔவை, அருணகிரிநாதர், பட்டினத்தார் ஆகியோரும் இங்கு வந்து வழிபட்டு, பதிகங்கள் பாடியிருக்கிறார்கள். இதன் காரணமாகவே, இங்கு ராஜ கோபுரத்தை அடுத்துள்ள நுழைவாயிலின் மேற்புறத்தில் மூவேந்தர்களின் சிலைகளும் ஔவை, அருணகிரிநாதர், பட்டினத்தார் ஆகியோரது சிலைகளும் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
கோவில் அமைப்பு : இக்கோயிலில் விநாயகர், முருகன், ஐயப்பன், கரடி சித்தர், கால பைரவர், சூரியன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயிலில் கரடி சித்தருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. கன்னி மூலை கணபதி, வள்ளி தெய்வானை முருகன், ஐயப்பன் போன்றோர் சன்னதிகள் உள்ளன. மூவேந்தர்களின் சின்னங்களான வில், புலி, மீன் கொடிகள் அர்த்த மண்டபத்தில் கல்தூணில் பதியப்பட்டுள்ளது. முன் மண்டபத்தில் உள்ள கல்தூண் மற்றும் சுவர்களில் மூவேந்தர்களின் கொடிச்சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த கோயிலின் பழமையை இங்குள்ள பழங்காலக் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. ராஜகோபுரத்தின் முன்பாக நின்ற நிலையில் தமிழ்மூதாட்டி ஔவை காட்சி தருகிறார். இந்த தலத்துக்கு வரும் பக்தர்கள் ஔவையை மனம் உருகி வணங்கிச் செல்கின்றனர். பாரி மன்னரின் மகள்கள் அங்கவை, சங்கவை. தந்தை மற்றும் தாயை இழந்த இந்த இருவரையும் ஔவையார் இங்கு அழைத்து வந்து, மூவேந்தர்களின் முன்னிலையில் திருக்கோவிலூர் மன்னருக்கு திருமணம் செய்துவைத்தாராம். மூவேந்தர்களும் இங்கு வந்து இருந்தபோது சோழ மன்னர் உத்தமசோழபுரம் என்ற இடத்திலும், சேரமன்னர் சேலம் என்ற இடத்திலும், பாண்டியமன்னர் வீரபாண்டி என்ற இடத்திலும் தங்கி இருந்ததாக தகவல்கள் கூறுகிறது.
கோவிலின் அருகில் உள்ள இளம்பிள்ளை ஊரில் 18 சித்தர்களில் ஒருவரான கரடி சித்தர் வாழ்ந்து வந்து உள்ளார் . இச்சித்தர் தினமும் இந்த கரபுரநாதர் ஆலையத்துக்கு வரும் வழக்கத்தை கொண்டிருந்தார். கரடி சித்தர் இந்த கோவிலில் தனி பிரகாரம் கொண்டு அருள் பாலிக்கிறார் .மேலும் இந்தத் கரடி சித்தர் அவையார் நடத்தி வைத்த அங்கவை சங்கவை திருமணத்தில் கலந்து கொண்டதாக வரலாறு. கரடி சித்தர் திருமுலரிடம் சிஷ்யராக வாழ்ந்து வந்தார். ஒரு நாள் திருமூலர், கரடி சித்தர் கஞ்சமலைக்கு சென்று மூலிகை பறித்து வர சென்றனர். திருமூலர் கரடி சித்தரிடம் உணவு சமைத்து வைக்க சொல்லி சென்றார் .கரடி சித்தர் உணவு சமைக்கும் பொது கிழே கிடந்த ஒரு குட்சியை எடுத்து கிளறினார். அதனால் உணவு கருப்பாக மாறிவிட்டது. குரு வந்தால் கோபித்து கொள்வர் என்று கரடி சித்தர் அணைத்து உணவையும் சாப்பிட்டு விட்டார். உடனே என்பது வயது பதினாறு வயதாக குறைந்து விட்டது. குரு திரும்ப வந்து , பதினாறு வயது சிறுவனை பார்த்து ,இங்கே இருந்த முதியவர் எங்கே? என்று கேட்டார் . உடனே குருவே நன் தான் உங்கள் சிஷ்யன் என்று கூறி . நடந்தவை முழுவதும் விளக்கினர். உடனே திருமூலர் அந்த உணவை வெளிய கக்கு என்று கூறினார். பின் அவர் அந்த மூலிகை உணவை உண்டு 16 வயது சிறுவனாக மாறினார்.
திருமணத் தடையால் வருந்தும் ஆண்களும் பெண்களும் இந்த தலத்துக்கு வந்து, சுவாமிக்கும் அம்பாளுக்கும் நெய் தீபமேற்றி திருமண வரம் வேண்டி வழிபட்டு சென்றால், தடைகளும் தோஷங்களும் நீங்கி விரைவில் கல்யாண பாக்கியம் கைகூடும்.
காலை 7.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சேலம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : சேலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு