தாரமங்கலம், கைலாசநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பஸ் நிலையத்தில் இருந்து 10 கி.மீ தொலைவிலும், சேலத்தில் இருந்து மேற்கில் 14 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இறைவன் : கைலாசநாதர்
இறைவி : சிவகாமசுந்தரி
தல தீர்த்தம் : பிரம்மதீர்த்தம்
தல விருட்சம் : வன்னி
தல சிறப்புகள் : இந்த கோவிலின் முக்கிய சிறப்புகளில் ஒன்றாக, சூரியர்-சந்திரர் இருவரும், இத்தல இறைவன் கைலாசநாதரை வழிபடும் நிகழ்வு நடைபெறுகிறது. ஆண்டுதோறும் உத்தராயண, தட்சணாயன புண்ணிய காலமான மாசி மாதத்தில், மூன்று நாட்கள் சூரியன் தனது ஒளிக்கதிர்களால் கைலாசநாதரை வழிபடும் காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாகும்.
அந்தி சாயும் நேரத்தில் சூரியனின் கதிர்களும், சந்திரனின் ஒளியும் சிவலிங்கம் மீது படுவதாக கூறுகிறார்கள். மாசி மாதம் 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரையில் சூரிய கிரகணங்கள் மூலஸ்தான சிவலிங்க மூர்த்தி மேல் விழுகிறது. அவ்வாறு விழுவதை சூரிய பூஜை என்று கூறுவர்.
தல வரலாறு:
கோவில் அமைப்பு : கோவில் அர்த்தமண்டப நுழைவாசலின் மேல் பார்வதியை பரமசிவனுக்கு, திருமால் தாரை வார்த்து கொடுக்கும் சிற்பம் காட்சியளிக்கிறது. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் மேற்கு திசை நோக்கியபடி உள்ளது. கருவறையில் கைலாசநாதர் எழுந்தருளியுள்ளார். தென்கிழக்கு மூலையில் தீர்த்தக்கிணறு உள்ளது. இதற்கு பிரம்ம தீர்த்தம் என்று பெயர். கோவிலுக்கு கிழக்கே இரண்டு தெப்பக்குளங்கள் உள்ளன. இந்த கோவிலுக்கு அருகே, இளமீஸ்வரர், பத்ரகாளியம்மன், வேலாயுத சாமி, வரதராஜ பெருமாள் ஆகிய சுவாமிகளின் கோவில்கள் உப கோவில்களாக அமைந்துள்ளன. இரண்டாவது வாசலுக்கு முன்னால் இருப்பது, ஆறு தூண்களையுடையது. இரண்டில் யாளிகளும், நான்கில் குதிரைகளும் இருக்கின்றன. அவைகளில் ஏறிச்செல்வோர் ஒவ்வொருவரும் இரண்டு விதமாக அமைக்கப்பெற்று இருக்கின்றனர். ஒருபுறம் ஒரு மாதிரியாகவும், மற்றொரு புறம் வேறு வகையாகவும் காட்சி அளிக்கும் வகையில், ஒரே தூணில் செதுக்கப்பெற்றிருப்பது அழகாகும். மகா மண்டபம் வடமேற்கு மூலையில் சுரங்க அறை ஒன்று உண்டு. தற்போது சிறிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமைகளில், பாதாளேசுவரருக்கு திருமணமாகாதவர்கள் சிறப்பு வழிபாடாக பச்சை கற்பூரத்தை பன்னீரில் கலந்து அபிஷேகம் செய்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். மேலும் இந்த பாதாள அறையில் இருந்து அமரகுந்தி அரண்மனைக்கு சுரங்க பாதை இருந்ததாகவும் கூறப்படுகிறது. நாளடைவில் இந்த பாதையை மறைத்து பாதாள லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தைப்பூசத்தை கடைசி நாளாக கொண்ட திருவிழா தேரோட்டத்துடன் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி, சூரசம்ஹாரம், திருவாதிரை, திருக்கார்த்திகை முதலிய நாட்களிலும் விழாக்கள் உண்டு. மேலும் பிரதோச வழிபாடும் சிறப்பாக நடைபெறும்.
தாருகா வனத்தில் அமரகுந்தி என்ற ஊரை கெட்டி முதலியார் என்பவர் அரசாண்டு வந்தார். பசுக்கள் தினந்தோறும் மேய்ச்சலுக்கு செல்கையில் ஒரு பசு மட்டும் குறிப்பிட்ட இடம் ஒன்றில் பால் சொரிகிறது என்ற தகவல் வந்தது. அந்தத் தகவல் கேட்டு அந்த இடத்திற்கு சென்று பார்த்தார். தான் கேள்விப்பட்ட தகவல்படி, அந்த பசு குறிப்பிட்ட இடத்தில் பால் சுரந்தது. அதை கண்டு பரவசப்பட்ட கெட்டி முதலியார், சுவாமி அங்கு எழுந்தருள்வதாக உணர்ந்தார். அவர் அங்கு வழிபாடுகள் செய்தார்.
இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக்
கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக்
கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13ஆம்
நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் ராஜகோபுரம் 90அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது. ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியும் வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது. இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் பட்டியக்கல் நிலை கோயிலின் நுழைவாயிலில் உள்ளது.
ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியும் வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது. இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் பட்டியக்கல் நிலை கோயிலின் நுழைவாயிலில் உள்ளது. இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் காற்று புக முடியாத ஒரு அறைக்குள் இருக்கும் இந்த பாதாள இலிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடுகின்றன. இத்தலத்தில் உள்ள ஜூரகேஸ்வரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து வடைமாலை சாத்தி அபிஷேகம் செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத வியாதிகள் குணமடைகின்றன. சிற்ப வேலைப்பாடுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோயில் 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
கார்த்திகை, திருவாதிரை, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் கோயிலில் அலை மோதும். இவை தவிர வருடத்தின் முக்கிய விசேச தினங்களான தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு தினங்களின் போது சிறப்பு பூசை உண்டு.
இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் இந்த பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை தோறும் வழிபாடு செய்தால் திருமணம், பிள்ளைப்பேறு மற்றும் தொழில் மேம்பாடு ஆகியவை கைகூடுவதாக நம்பப்படுகிறது. இத்தலத்தில் உள்ள சுரகேசுவரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து, வடைமாலை சாற்றி வழிபாடு செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத நோய்கள் குணமடைவதாக நம்பப்படுகிறது.
13-ம் நூற்றாண்டை கடந்து இப்பவும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலின் கோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த கோவிலின் தனிச்சிறப்பு என்னவென்றால்,சாமி சிலைகள் மட்டுமின்றி உள்மண்டபம், வெளி மண்டபம் அனைத்தும் கற்களால் ஆனவை. கோவிலுக்கு அருகே இருக்கும் மண்டபத்தில் அமர்ந்திருந்த முதியவர்களை சந்தித்தோம்.:
தாரமங்கலம் என்ற பெயர் ஏற்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் ‘தாரமங்கலம்’ என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர். இக்கோவிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் உத்தராயண, தட்சணயான புண்ணிய காலங்களில் மாலை வேளையில் சூரியன் கதிர்களும், சந்திரன் ஒளியும் சிவலிங்கத்தின் மீது படுகின்றன.
அதாவது, சூரிய ஒளி மூலஸ்தான சிவலிங்க மூர்த்தி மேல் விழுவதை சூரிய பூஜை என்று கூறுவர். சூரியனுடைய கதிர்கள் ராஜகோபுர வாயிலின் வழியே வந்து, நந்தி மண்டபத்தின் ஊடே புகுந்து, பின் மூன்று உள் வாயிலையும் கடந்து சிவலிங்கத்தின் மேல் படுவது அபூர்வமாக கருதப்படுகிறது. சந்திரனுக்கும், சூரியனுக்கும் தாரகாபதி, தாரகன் என்ற பெயர்கள் இருப்பதால் தாரமங்கலம் என்ற பெயர் உண்டாயிற்று என்றும் கூறுவார்கள். கோவிலில். உட்பிரகார தூண்கள் எல்லாவற்றிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடு அமைந்த திருவுருவங்கள் காணப்படுகின்றன.
கோவில் வளாகத்தில் சித்தி விநாயகர் சன்னதி இருக்கிறது. இது ஒன்பதே கருங்கற்களால் அமைக்கப்பெற்றது. கல்மேடை அமைக்கப்பட்டு, அதன்மீது விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. விமானம் வரை கற்களாலேயே ஆனது. கோவிலின் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது சிற்பியின் மகனான சிறுவன் இந்த ஒன்பது கல் கோவிலைக் கட்டியதாக ஒரு வரலாறு உண்டு.
இந்த கோவிலுக்கு கிழக்கே அதாவது பஸ்நிலையம் அருகில் ஒரு தெப்பக்குளம் இருக்கிறது. இந்த குளத்தில் சிவந்த கற்களால் கட்டப்பெற்ற கைப்பிடிச் சுவர்கள் சுற்றிலும் இருக்கின்றன. குளத்தின் நடுவில் நீராழி மண்டபம் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை ‘கங்கை தீர்த்தம்’ என்கிறார்கள். ஏனென்றால், மூலவர் கைலாசநாதருக்கு அபிஷேகம் செய்யும் பால், இளநீர், திரவியங்கள் நேரடியாக அங்கிருந்து குழாய் மூலம் இந்த குளத்திற்கு வந்து சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தான் இதனை கங்கை தீர்த்தம் என்கிறார்கள்.
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தெப்பக்குளத்தில் இதுவரை தண்ணீர் வற்றிய வரலாறு கிடையாது. நீருற்று இருந்து கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் கைலாசநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், இந்த குளத்திற்கு வந்து கை, கால், முகத்தை கழுவி சுத்தம் செய்துவிட்டு தான் கோவிலுக்குள் செல்வார்களாம். இப்படி வரலாற்று சிறப்பு மிக்க இந்த தெப்பக்குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமலும், பாசிபடர்ந்து தண்ணீர் அசுத்தமாக காணப்படுகிறது.
மேலும் இந்த தெப்பக்குளத்தின் அருகே வடக்கில் சிறிய தெப்பக்குளம் உள்ளது. இதுவும் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. கற்களால் ஆன இந்த 2 தெப்பக்குளங்களையும் சீரமைத்து உரிய முறையில் பராமரிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் மட்டுமின்றி பத்ரகாளியம்மன் கோவில், கண்ணனூர் மாரியம்மன் கோவில், முருகன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், தண்டு மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில் என எட்டு திசையிலும் கோவில்கள் நிறைந்து காணப்படுவதால் இந்நகரை ஆன்மிக நகரம் என்றும் அழைப்பதுண்டு. இங்குள்ள பத்ரகாளியம்மனை ஊர் காவல் தெய்வமாக வழிபடுகிறார்கள். இந்த கோவில் அருகே ஒரு தெப்பக்குளம் இருக்கிறது.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சேலம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : சேலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.