உத்தர் கன்னடா, முருடேஸ்வர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில்கர்நாடக மாநிலத்தின் உத்தர கன்னட மாவட்டத்தில் பட்கல் என்கிற ஊரில் அமைந்துள்ளது.
இறைவன் : முருடேஸ்வர்
தல சிறப்புகள் : இது உலகின் இரண்டாவது மிக உயரமான சிவன் சிலை ஆகும். ராவணன், லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டதை கண்டு தனது இருபது கைகளால் லிங்கத்தை எடுக்க முயன்ற போது அச்சிவலிங்கம் நான்காக உடைந்தது. அதில் ஒரு பகுதி இக்கோவிலின் மூலவர் விக்ரகம் ஆனதாக கூறப்படுகிறது.
தல வரலாறு : 500 ஆண்டுகளுமேல் பழமையான இக்கோவிலின் இறைவன் “முருதேஸ்வரர்” என அழைக்கப்படுகிறார். ராவணன் ஒரு அரக்கனாக தெரிந்தாலும் அவனொரு சிறந்த பக்திமான். சிவனின் தீவிர பக்தன். அவனுக்கு சிவனிடம் இருக்கும் ஆத்மலிங்கத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் நெடுநாளாக இருந்தது. அதற்காக சிவனை நோக்கி தவம் இருந்தான். ஆத்மலிங்கம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. அழியா வரம் தரக்கூடியது. அது ஒருவனிடம் இருந்தால் அவன் இந்த உலகையே தனது காலடியில் கொண்டு வந்துவிடலாம். அந்த ஆசையில்தான் ராவணனும் தவமிருந்தான். வழக்கம் போல் பக்தனின் பக்தியை மெச்சிய சிவன் ராவணனுக்கு ஆத்மலிங்கத்தை கொடுத்தார். ஒரேயொரு கண்டிஷன் மட்டும் போட்டார். ‘நீ உனது இடத்திற்கு சென்று சேரும் வரை இந்த ஆத்மலிங்கத்தை தரையில் வைக்கக்கூடாது’ என்று. ராவணனும் இதற்கு ஒத்துக்கொண்டான். இந்த விஷயம் நாரதருக்கு தெரியவந்தது. சும்மா இருப்பாரா.. இராவணன் தனது இடத்திற்கு ஆத்மலிங்கத்தை சென்று சேர்த்துவிட்டால் உலகில் யாரும் அவனை வெல்ல முடியாதே இதை தடுத்தே ஆகவேண்டும் என்ற அச்சம் நாரதருக்கு வந்தது. உடனே விநாயகரிடம் சென்று முறையிட்டார். இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்றார். விநாயகர் ஒரு பிராமண சிறுவனாக மாறி மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
இராவணன் தினமும் மாலையில் தவறாமல் பிரார்த்தனை செய்யும் வழக்கம் கொண்டவன். இராவணன் கோகர்ண அருகே வரும் போது விஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தின் சக்தியால் சூரிய ஒளியை மறைத்தார். இராவணன் மாலை நேரம் நெருங்கி விட்டது என்ற எண்ணத்தில் பிரார்த்தனை செய்ய முயல்கிறான். ஆத்மலிங்கத்தை தரையில் வைக்கக்கூடாது என்பதற்காக என்ன செய்வது என்று நினைக்கும் போது சற்று தொலைவில் பிராமண சிறுவன் வேடத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் விநாயகரை இராவணன் அழைக்கிறான்.
தனது பூஜை முடித்து வரும் வரை இந்த லிங்கத்தை தரையில் வைக்காமல் கையிலேயே வைத்திருக்கும்படி சொல்கிறான். விநாயகரும் சரி என்கிறார். ஆனால், மூன்று முறை அழைப்பதற்குள் வந்துவிட வேண்டும் என்று விநாயகர் கேட்டுக்கொண்டார். ராவணனும் ஒத்துக்கொண்டான். விநாயகர் வேகவேகமாக ராவணனை மூன்று முறை அழைத்துவிட்டு ஆத்மலிங்கத்தை தரையில் வைத்துவிட்டார்.
வேகமாக ஓடிவந்து பார்த்த இராவணன் அதிச்சியடைந்து போனான். அதற்குள் விஷ்ணுவும் தனது மாயையை விலக்கிக்கொண்டார். பகல் வந்தது. தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்த கடும் கோபம் கொண்டான். வினாயகர் லிங்கத்தை கோகர்ணத்தில் வைத்து விட்டதால், அது அங்கு நிலைத்து விட்டது. ராவணன் தனது பலத்தால் எடுக்கப் பார்த்தான். பூமியிலிருந்து இழுக்கப் பார்த்தான். லிங்கம் அசையவில்லை. லிங்கத்தை சுற்றியிருந்த துணி 32 கிமீ தொலைவில் கடற்கரையில் இருக்கும் கண்டுக மலையில் விழுந்தது. அதனால்தான் இங்கு சிவன் முருடேஸ்வர் என்ற அகோர உருவத்தில் இருக்கிறார். இந்த நிகழ்வை விளக்கும் அழகிய சுதை சிற்பங்களைக் கோயிலின் மேற்பகுதியில் காணலாம்.
கோவில் அமைப்பு : மூன்று பக்கமும் அரபிக் கடல் சூழ்ந்து இருக்கும் கண்டூக மலை மீது இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. இந்த ஊரின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் இந்தக் கோயிலின் கோபுரமும் சிவனின் பிரமாண்டமான சிலையும் தெரிகிறது. மலையின் அடிப்பகுதியில் ஒரு ராமேஸ்வர லிங்கமும் உள்ளது, அங்கு பக்தர்கள் சேவையை செய்ய முடியும். ஸ்ரீ அக்ஷயகுண சிலைக்கு அடுத்ததாக ஒரு ஷேனேஸ்வர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கான்கிரீட்டில் இரண்டு யானைகள் அதற்கு வழிவகுக்கும் படிகளில் நிற்கின்றன. அர்ஜுனன் கிருஷ்ணரிடமிருந்து கீதோபதேசம் பெறுவதை சித்தரிக்கும் சிலைகள் , இராவணன் மாறுவேடத்தில் கணேசனால் ஏமாற்றப்பட்டான், பகிரநாதாக சிவனின் வெளிப்பாடு, கங்கையில் இறங்கி, மலையைச் சுற்றி செதுக்கப்பட்டுள்ளது.
கருவறை தவிர்த்து இந்த கோயில் முற்றிலும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது, இது இன்னும் இருட்டாக உள்ளது மற்றும் அதன் அமைதியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பிரதான தெய்வம் ஸ்ரீ மிருதேசா லிங்கா, முர்தேஷ்வர் என்றும் அழைக்கப்படுகிறது. லிங்கா அசல் ஆத்மா லிங்கத்தின் ஒரு பகுதி என்று நம்பப்படுகிறது மற்றும் இது தரை மட்டத்திலிருந்து இரண்டு அடி கீழே உள்ளது. அபிஷேகா, ருத்ராபிஷேகா, ரத்தோத்ஸவா போன்ற சிறப்பு சேவைகளைச் செய்யும் பக்தர்கள், கருவறை வாசலுக்கு முன்னால் நின்று தெய்வத்தைக் காணலாம் மற்றும் பாதிரியார்கள் நெருக்கமாக வைத்திருக்கும் எண்ணெய் விளக்குகளால் லிங்கம் ஒளிரும். லிங்கா அடிப்படையில் தரையில் ஒரு வெற்று இடத்திற்குள் ஒரு கடினமான பாறை. அனைத்து பக்தர்களுக்கும் கருவறைக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் சிவபெருமானின் பெரிய சிலை உள்ளது. இந்த சிலை உயரம் 123 அடி, கட்ட இரண்டு ஆண்டுகள் ஆனது. இந்த சிலை சிவமொகாவின் காஷிநாத் மற்றும் பல சிற்பிகளால் கட்டப்பட்டது.இது சூரிய ஒளியை நேரடியாகப் பெறுகிறது, இதனால் பிரகாசமாகத் தோன்றும். கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இக்கோவிலுக்கு 20 நிலைகள் கொண்ட அழகிய வடிவமைப்புடன் கூடிய மிக உயரமான ராஜகோபுரம் இருக்கிறது. இக்கோவிலுக்கு பின்பகுதியில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை இருக்கிறது. இதர தெய்வங்களுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. சனிபகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது.
இந்த கோவிலுக்கு குழந்தை பாக்கியம், சிறந்த கல்வி, திருமணம் நடக்க, போன்ற பல வேண்டுதல்களோடு பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களை அவர்களின் குடும்பத்தோடு அமர்த்தி “சர்வதேவ பூஜை” என்ற சக்திவாய்ந்த தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்படுகிறது. இப்பூஜையின் போது நைவேத்தியமாக “எள், நெய், வெல்லம், பச்சை பயறு, ஏலக்காய்பொடி கலந்த “கஜ்ஜாய பிரசாதம்” படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. எமபயம் மற்றும் நோய்கள் நீங்க சிவன் மற்றும் பார்வதிக்கு “ருத்ர அபிஷேகம்” செய்கின்றனர். இங்குள்ள கோவிலில் அணையா தீபம் எரிகிறது. இதில் எண்ணெயை ஊற்றி, நாணயங்களை போட்டு, தங்களின் முக தோற்றம் அவ்வெளிச்சத்தில் தெரிகின்றதா என பக்தர்கள் பார்க்கிறார்கள். அப்படி தங்களின் உருவம் தெரிந்தால் தங்களுக்கு செல்வ செழிப்பு ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அக்டோபர் முதல் மே மாதம் வரை காலம். இதமான பகல் நேர குளிர், கோடை காலத்தில் தாங்கக்கூடிய வெப்பம் என்று சாதகமான வானிலையே நிலவுகிறது. சென்னையிலிருந்து கோயம்பத்தூர் பாலக்காடு வழியாக மங்களூருக்கு ரயிலில் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாகவோ அல்லது ரயில் மூலமாகவோ முருடேஸ்வர ரயில் நிலையத்திற்கு செல்லலாம். மங்களூர் மற்றும் மும்பையை இணைக்கும் அனைத்து ரயில்களும் முருதேஸ்வர் ரயில் நிலையம் வழியாக செல்கின்றன, இதனால் அடிக்கடி வரும் ரயில்களில் வசதியாக செல்ல முடியும். அருகிலுள்ள பிற நகரங்களான கொச்சி, பெங்களூர் , மும்பை பேருந்து சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : பெங்களூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : மங்களூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை