மங்களூரு மஞ்சுநாதர்





	


	



























	




 




	








 




4:37:13 AM         Sunday, May 03, 2026

மங்களூரு மஞ்சுநாதர்

மங்களூரு மஞ்சுநாதர்
மங்களூரு மஞ்சுநாதர் மங்களூரு மஞ்சுநாதர் மங்களூரு மஞ்சுநாதர் மங்களூரு மஞ்சுநாதர்
Product Code: மங்களூரு மஞ்சுநாதர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                     மங்களூரு, மஞ்சுநாதர் (தர்மசாலா )

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தின் தெற்கு கன்னடம்  பெல்தங்கடி மாவட்டத்தில்  தாலுகாவில் நேத்ராவதி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. 

இறைவன் : மஞ்சுநாதர்
இறைவி  :  பகவதி அம்மன் 
தல தீர்த்தம் : நேத்ராவதி 

தல சிறப்புகள் : கேரளாவில் உள்ள சபரி மலை, ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாச்சலபதி கோயில், தமிழகத்தில் உள்ள பழனி முருகன் கோயில் ஆகியவற்றுக்கு இணையானது இந்த தர்மஸ்தலா ஸ்ரீ மஞ்சுநாதர் கோயில் ஆகும். தர்ம தேவதைக்கு இங்கு தனி சன்னதி இருக்கிறது.

தல வரலாறு : தங்கத்தில் செய்யப்பட்ட சிவ லிங்கத்தைக் கொண்ட சிவபெருமானின் கோவிலாகும். இந்தக் கோவில் சமணர்கள் நிர்வாகத்தில் இயங்குகிறது. ஆனால் மாதவா வம்சாவழியைச் சேர்ந்த இந்துகுருக்கள் பூஜைகள் செய்கின்றனர். இதுவே இக்கோவிலின் வழக்கத்திற்கு மாறான அம்சமாகும். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும் லக்ட்சதீபா என்னும் தீபத் திருவிழா தர்மஸ்தலத்தின் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் திருவிழாவாகும். அச்சமயத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 10,000 பேர் இந்தக் கோவிலுக்கு புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.

தர்மஸ்தலம் மத ஒற்றுமைக்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது, இங்கு புனிதப் பயணம் செய்பவர்களின் ஜாதி, கொள்கைகள் மற்றும் நம்பிக்கை போன்றவை இங்கு தடையாக இருப்பதில்லை. உள்ளூர் தெய்வங்கள் மற்றும் மஞ்சுநாதா தெய்வங்களுக்கு இணையாக சமண தீர்தங்காராவும் இங்கு வழிபடப்படுகிறார். 800 ஆண்டுகளுக்கும் மேலாக ஹெக்கடே குடும்பத்தினர் இக்கோயிலை பராமரித்து வருகின்றனர். கோயிலுக்கு எத்தீங்கும் வராமல் பாதுகாப்பது அவர்களின் தலையாய பணியாகும். அன்னப்பா என்பவரே இங்குள்ள சிவ லிங்கத்தை தர்மஸ்தலத்திற்கு கொண்டுவந்ததாக கூறப்பட்டுள்ளது. அவர் ஹெக்கடே குடும்பத்திற்காக பணிபுரிந்தார் எனப் புராணம் கூறுகிறது. ஒருமுறை ஹெக்கடே சிவபெருமானை வழிபட விரும்பியபோது அவரிடம் பணிபுரிந்துகொண்டிருந்த அன்னப்பா ஒரு சிவலிங்கத்தைக் கொண்டு வருவதாக வாக்களித்து இடத்திலிருந்து மறைந்தார். அனைவரும் வியக்கும்படி, மறுநாள் காலை அனைவரும் எழும்பும் நேரத்தில் ஹெக்கடே வீட்டிற்கு சில மீட்டர் தூரத்தில் தர்மஸ்தலத்தில் அன்னப்பா சிவ லிங்கத்தை நிறுவியிருந்தார். அந்த லிங்கம் மங்களூர் அருகில் உள்ள கத்ரி என்ற இடத்திலிருந்து கொண்டுவரப்பட்டது என்பது பின்னாளில் தெரியவந்தது. அன்று மறைந்த அன்னப்பா இன்று வரை அந்தப் பகுதியில் காணப்படவில்லை. தர்மஸ்தலத்தில் உள்ள மக்கள் தற்போது அன்னப்பாவை அன்னப்பா பஞ்சுர்லி என்ற பெயரில், உள்ளூர் கடவுள் மற்றும் நாயகனாக வணங்குகிறார்கள்.

புராணங்களின் படி தர்மத்தின் தேவதைகள் மனித உருவம் கொண்டு தர்மத்தைச் செயல்படுத்தவும், தொடரவும் பரப்பவுமான இடத்தைத் தேடிய போது பெர்கடேயின் இல்லத்தை அடைந்தனர். இந்தத் தம்பதியரும் தங்கள் பழக்கத்தின்படியே அந்த பிரபலமான விருந்தினர்களை மிகுந்த ஈடுபாட்டுடனும் மரியாதையுடனும் உபசரித்தனர். அவர்களின் உண்மை மற்றும் ஈகையினால் மகிழ்ந்த தர்ம தெய்வங்கள் அன்று பெர்கடேவின் கனவில் தோன்றினர். அவர்கள் தாம் வருகை தந்த நோக்கத்தை தம்பதியினரிடம் விவரித்துவிட்டு, அந்த வீட்டை தெய்வங்களின் வழிபாட்டிற்கு விட்டுத் தருமாறும் தர்மத்தைப் பரப்ப அவர்களது வாழ்வை அர்ப்பணிக்குமாறும் கூறினர்.
பெர்கடே எந்தக் கேள்வியும் கேட்காமல், தாங்கள் இருந்த நெல்லியாடி பீடு என்ற வீட்டை தெய்வ வழிபாட்டிற்கு விட்டுவிட்டு தங்களுக்கு என்று புதிய வீட்டை அவர்கள் கட்டிக் கொண்டனர். இது இன்றும் தொடர்கிறது. அந்தக் குடும்பத்தினர் அவர்களின் வழிபாட்டையும் உபசரிப்பையும் தொடர்ந்த நிலையில், தர்ம தெய்வங்கள் பெர்கடே தம்பதியினரின் முன் மீண்டும் தோன்றி கலராகு, கலர்காயி, குமாரசாமி மற்றும் கன்னியாகுமாரி என்ற நான்கு தெய்வங்களுக்கு தனித்தனியாக சிறு கோவில்களை கட்டி பிரதிஷ்டை செய்யுமாறு கூறினர். மேலும் தெய்வப் பணிகளைச் செய்ய பிறப்பிலேயே புனிதமானவர்கள் இருவரையும், பெர்கடே கோவிலின் தலைமைச் செயலராக தனது கடமைகளைச் செய்வதற்கு உதவியாக இருக்க நான்கு தகுதியுள்ள நபர்களைத் தேர்ந்தெடுக்கவும் தேவதைகளால் பணிக்கப்பட்டார். தெய்வங்களுக்கு பணிவிடை செய்பவர்கள் தேலம்படிதயா என்றும் மனவோலிதயா என்றும் அழைக்கப்பட்டனர். அதற்கு பிரதிபலனாக, பெர்கடே குடும்பத்தைப் பாதுகாப்பதாகவும், கோவிலுக்கு நிறைந்த தருமத்தையும் புகழையும் வழங்குவதாகவும் தெய்வங்கள் உறுதி அளித்தனர். பெர்கடே இவற்றை ஏற்றுக் கொண்டு கோவில்களைக் கட்டி பிராமண குருக்களை அழைத்து சடங்குகளை நிறைவேற்றினர். இயற்கை தெய்வங்களுடன் சிவலிங்கத்தையும் அமைக்குமாறு இந்த குருக்கள் பெர்கடேவைக் கேட்டுக் கொண்டனர். மங்களூர் அருகில் உள்ள கத்ரியிலிருந்து மஞ்சுநாதேஸசுவரா ஆலயத்தின் லிங்கத்தைக் கொண்டு வர தம் பணியாளான அன்னப்ப சுவாமியை தெய்வங்கள் அனுப்பின. பின்னர் லிங்கத்தைச் சுற்றி மஞ்சுநாதா ஆலயம் கட்டப்பட்டது.

16 ஆம் நூற்றாண்டில் தேவராஜா ஹெக்கடே, உடுப்பியின் ஸ்ரீ வதிராஜா சுவாமியை இந்தக் கோவிலைக் காண வருகை தருமாறு அழைத்தார். அவரின் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று வந்த சுவாமிஜி, மஞ்சுநாதா கடவுளின் தெய்வச்சிலையை வேத சடங்குகளின்படி அமைக்கவில்லை என்பதால் தனக்கு வழங்கிய உணவு மறுத்துவிட்டார். பின்னர் சிறீ ஹெக்கடே சுவாமியே சிவலிங்கத்தை மறுபிரதிஷ்டை செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்த பின்னர், சுவாமி அவர்கள் சிவலிங்கத்திற்கு மாதவா முறையின் படி பூசைகளைச் செய்ய ஏற்பாடுகளைச் செய்தார்.

காலை 5.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மங்களூரு

அருகிலுள்ள  ரயில் நிலையம்   : மங்களூரு

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×