மங்களூரு, சோமநாதீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் இந்தியாவில் தென் கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் அமைந்துள்ளது.
இறைவன் : சோமநாதீஸ்வரர்
தல தீர்த்தம் : நெல்லி தீர்த்தம், பாம்பு குளம்
தல சிறப்புகள் : இங்குள்ள மூலவர் கருவறையில் மகா கணபதி, ஜாபாலி மகரிஷி,பிலி சாமுண்டி,தூமாவதி, சேத்திர பாலகர், ரதீஸ்வரி ஆகியோர் உள்ளனர். சோமநாதீஸ்வரை வணங்கினால் நாகதோஷம் விலகும். குகைக்குள் தரப்படும் சிவப்பு நிற மண்ணை எடுத்து பூசினால் வெண் குஷ்டம் நீங்கும் என்கின்றனர். வருடம்தோறும் அக்டோபர் 17ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி ஆறு மாதங்களும் குகைக்குள் சென்று பக்தர்கள் வழிபடலாம். விஜய நகர பேரரசு சௌதா மன்னர்கள் குகை கோவிலை பராமரித்தனர். ஆலயத்தின் கிழக்கில் 500 அடி படவு குன்று ஒன்று உள்ளது. கோவிலுக்கு அருகில் நாகப்பகரை தீர்த்தக்குளம் உள்ளது.இங்கு நீராடிய பிறகே குகைக்குள் செல்லுகின்றனர். உள்ளே குனிந்தும் வளைந்தும் செல்லவேண்டும். லிங்க திருமேனி மீது கங்காதேவி இடைவிடாது நீரை பொழிந்த படி காட்சிதருகிறது.
தல வரலாறு : 500 வருடங்களுக்குமுன் அமைந்து உள்ள கோவில். அருணாசுரன் என்பவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் தீராத துன்பத்தை செய்துவந்தான். அருணா சுரணை சக்தியால் மட்டுமே அளிக்க முடியும் என்று கருதினர். பிரம்ம, விஷ்ணு, சிவன் ஆகியோர் அருணாசுரனை அழிக்க முடியாமல் இருந்த காரணம் ஜாபாலி முனிவர் உபதேசித்த காயத்திரி மந்திரம். தனது தவறை உணர்ந்த ஜாபாலி முனிவர் உடனே பரசுராம சேத்திரம் சென்று, நந்தினி ஆற்றங்கரையில் நாகவனம் எனும் இடத்தில் சக்தியை நோக்கி கடுந்தவம் செய்து வந்தனர். இதை கேட்டதும் கங்கை நதியை துணைக்கு அழைத்து கொண்டு நாகவனத்திற்கு சென்றார் ஜாபாலி முனிவர். உனது தவத்துக்கு சாமுண்டி, தூமாவதி பூதகங்கள் காவலாக இருக்கும் என சிவனடியார் அருளினார்.வாசுகி தலைமையில் பூத கணங்களும், சேத்திர பாலகனும் இருந்தனர். வாசுகி மீது கோவம் கொண்ட முனிவர் உலகில் நீ நிம்மதியாக வாழமுடியாது என சபித்தார். இதில் கலங்கிய வாசுகி மற்றும் தன்னை சார்ந்தவர்களுக்கு பாபவிமோசனம் கேட்டது. அதற்கு இந்த இடத்தில் சிவன் லிங்க உருவமாக எழுந்தருள்வர் நீங்கள் பூஜைகள் யாகங்கள் செய்து வழிபடுங்கள் என்றார் ஜாபாலி முனிவர். குகைக்குள் லிங்க உருவில் சிவன் காட்சி தர கங்கை, நீரை பொழிந்தது, முனிவர் முன்னாடி சக்தி காட்சி தந்து அருணசுரனை வாதம் செய்தாள். அசுரனை கொன்ற இடம் கட்டீல் எனும் தலமாக உள்ளது.அங்கேயே துர்கா பரமேஸ்வரியாக உள்ளாள். இந்த குகை நெல்லி தீர்த்த குகை எனப்படுகிறது.
டிசம்பர் மாத கடைசியில் ருத்ரபிஷேகம், ரதோத்ஸ்வம், மகா சிவராத்திரி, தீபாவளி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலை 5.00 மணி முதல் பகல் 9.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மங்களூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : மங்களூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு