மங்களூரு, பாண்டேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் இந்தியாவில் தென் கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் அமைந்துள்ளது.
இறைவன் : பாண்டேஸ்வரர்
தல விருட்சம் : அரச மரம்
தல சிறப்புகள் : பாண்டவர்கள் பிரதிஷடை செய்து வழிபட்ட சிவலிங்கத்தில் இதுவும் ஒன்று. பாண்டவர்கள் வழிபட்டதால் பாண்டேஸ்வரர் என்றும் மகாலிங்கேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இத்தல சிவபூஜையில் காளை புகுந்து பக்தர்களை ஆசிர்வதிர்ப்பதாக நம்புகின்றனர். சிவபெருமானின் ஜடாமுடி பரந்து இருக்கிறது என்பதாலும், அபிஷேக புனித நீரை தாண்டி செல்லக்கூடாது என்பதாலும் கருவறையை சுற்றிவரும் பழக்கம் இங்கு இல்லை.
தல வரலாறு : கோவில் முகப்பு வலையில் சிவனும் எதிரில் நந்தி சிலை உள்ளது. பஞ்சுருளி, முண்டியதா, வைத்தியநாதர் தெய்வங்கள் உள்ளது. காஷ்மீர் உள்ள வைஷ்ணவி தேவி, லட்சுமி நாராயணர் சன்னதி 22அடி உயர அனுமன் சிலை உள்ளது. நவக்கிரக மேடையில் அரச மரம் உள்ளது. ஒன்பது கண்களுடன் பெரிய குத்து விளக்கில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதனை நந்தா தீபம் என்கின்றனர். தீபம் 365 நாட்களும் எரிந்து கொண்டே இருக்கிறது. கிரக தோஷம் விலகுவதாக மக்கள் நம்புகின்றனர். இரவு 8 மணியளவில் ரெங்கா பூஜை நடைபெறுகிறது. இங்குள்ள நாக புற்றுக்கு பாலை ஊற்றுவதால் குறைவில்லா செல்வம் கிடைப்பதாக நம்புகின்றனர். பசுமாடத்தில் பசு ஒன்று பூஜை நேரங்களில் தானாகவே புறப்பட்டு மூலஸ்தானதுக்கு வருகிறது. கற்பூரஆரத்தி காண்பித்து பிறகு சிறிது நீரம் சிவன் முன்பு நின்று விட்டு பசு மடத்திற்கு செல்வதை காணலாம். பண்டேஸ்வருக்கு சிறு கலசத்தின் துளை வழியாக புனித நீர், நெய் முதலானவை விழும்படி தாரா அபிஷேகம் நடைபெறுகிறது. அஸ்வத்த மரத்தில் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர் இருப்பதாக ஐதீகம். பௌர்ணமி நாட்களில் சத்திய நாராயண பூஜை நடைபெறுகிறது.
மே முதல் வாரம் பிரமோற்சவம், நவராத்திரி, கார்த்திகை தீபம், சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருமண தடை, குழந்தைபாக்கியம், வேலைவாய்ப்பு வேண்டி மூலவரை வழிபட்டு செல்கின்றனர். கார்த்திகை சோமவாரம் நாட்களில் லட்ச வில்வம், ருத்ராட்சம் மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்கின்றனர்.
காலை 5.30 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சேலம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : சேலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு