கோடி லிங்கேஸ்வரா
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தின் கோலாரிலிருந்து கோடி லிங்கேஸ்வரா கோயில் 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
கோவில் அமைப்பு : கர்நாடக மாநிலம் கோலார் அருகே உள்ள கோடி லிங்கேஸ்வரா கோயில் 20 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் இருக்கும் இந்த கோடிலிங்கேஸ்வரா ஆலயம். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருக்கும் கோடி லிங்கேஸ்வரா கோயில் 10 - 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். 108 அடி உயரமான இந்த சிவலிங்கம் உலகின் மிகப்பெரியதாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கோடி சிவ லிங்கங்கள் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளன. கோடிலிங்கேஸ்வரர் கோயிலானது 1980ஆம் ஆண்டு சுவாமி சாம்ப சிவ மூர்த்தி என்பவரால் நிறுவப்பட்டு முதல் சிவலிங்கம் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் சிவலிங்கங்களை பிரதிர்ஷ்டை செய்ததன் விளைவே கோடிலிங்கங்கள் சேரக்காரணம் ஆகும்.
ராஜமுந்திரி கோடி லிங்கேஸ்வரா : காகிநாடா நகரத்திலிருந்து 33 கி.மீ தூரத்தில் த்ரக்ஷாராமம் கோயிலுக்கு அருகிலேயே இந்த கோடிலிங்கேஸ்வரா கோயில் வீற்றுள்ளது. பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் ராஜமுந்திரியின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வருடமுழுதும் ஏராளமான பக்தர்கள் புண்ணிய யாத்திரை மேற்கொண்டு இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். பக்தர்களின் பாவங்களை கழுவும் சக்தி இந்த திருத்தலத்துக்கு உள்ளதாக ஐதீகமாக நம்பப்படுகிறது.
காக்கி நாடா நகரிலிருந்து இந்த கோயிலுக்கு எளிதில் செல்லமுடியும். காக்கிநாடா கரப்பா சாலை வழியாகவும், சோலங்கி வழியாகவும் என இரண்டு வழித்தடங்களில் செல்லமுடியும். இரண்டு வழியிலும் கிட்டத்தட்ட 1 மணி நேரம் பயண தூரமாகும். இதன் அருகிலேயே ஏனாம் நகரம் அமைந்துள்ளது. இங்கிருந்து பீமாவரம் மிக அருகில் அமைந்துள்ளது. கோலாரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 96ல் பெத்தமங்கலா நோக்கி பயணித்தால் அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் கோடி லிங்கேஸ்வரா கோயிலை அடையலாம். இங்கிருந்து கோலார் தங்க வயல் மிக அருகில் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் என்பதோடு மட்டுமில்லாமல் இக்கோயிலில் பல்வேறு அளவுகளிலான கிட்டத்தட்ட ஒரு கோடி சிவ லிங்கங்கள் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதனாலேயே இக்கோயிலுக்குகோடி லிங்கேஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்துள்ளது
கோயில் அமைப்பு : கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் 108அடி உயரமுடைய சிவலிங்கமும் அதற்கு நேர் எதிராக 35அடி உயரம் கொண்ட நந்தியும் இருக்கிறது. மேலும் இக்கோயில் வளாகத்தினுள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர், வெங்கடரமணி சுவாமி, அன்னபூரணி, பாண்டுரங்க சுவாமி, ராமர், லக்ஷ்மணர், சீதை, ஆஞ்சநேயர், கன்னிகாபரமேஸ்வரி, கருமாரியம்மன் ஆகிய கடவுளர் சந்நிதிகள் உள்ளன. கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் இரண்டு நாகலிங்க மலர் மரங்கள் இருக்கின்றன. திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டியும், மண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டியும் சிவபெருமானை மனதுருகி வேண்டி நாகலிங்க மரத்தில் மஞ்சள் கயிறை கட்டிச்செல்கின்றனர்.
கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் இருக்கும் அனைத்து லிங்கங்களுக்கும் காலை மற்றும் மாலை ஆறு மணிக்கு 10 பூசாரிகளால் மேளவாத்தியங்கள் முழங்க பூசைகள் செய்யப்படுகின்றன. இங்கிருக்கும் ஒரு கோடி லிங்கங்களுக்கும் நாள் தவறாமல் பூசைகள் செய்யப்படுகிறது சிறப்பு. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க ஏதுவாக இலவச ஓய்வறைகள் கோடிலிங்கேஸ்வரர் கோயிலை ஒட்டியே இருக்கிறது. ஏழைகள் பயனுறும் வகையில் வாரத்தில் நான்கு நாட்கள் 15-20 ஜோடிகளுக்கு இக்கோயிலின் நிறுவனரான சுவாமி சாம்ப சிவ மூர்த்தியால் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.
கோடிலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தினுள் இருக்கும் கன்னிகாபரமேஸ்வரி சந்நிதியினுள் 'சிவ பஞ்சயாதி' என்னும் சிவலிங்கம் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தை சுற்றிலும் விநாயகர், முருகர், பார்வதி மற்றும் நந்தி ஆகியவர்கள் நின்று வணங்குவது போல அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சிவன் கோவில்களில் மூலவர் சிவலிங்கம் தவிர்த்து ஆலயத்தைச் சுற்றிலும் ஒன்றிரண்டு சிவலிங்கங்கள் இருக்கக்கூடும். ஒரு சில ஆலயங்களில் மூலவர் லிங்கத்தைத் தவிர்த்து பஞ்ச லிங்க சன்னிதி என்ற வகையில் ஐந்து லிங்கங்கள் அமைந்திருக்கலாம். ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் கோடிக்கும் அதிகமாக லிங்கங்கள் இருப்பது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது. ஆலயத்திற்குள் நுழைந்ததாலே எந்தப் பக்கம் திரும்பினாலும் சிவலிங்கங்கள்தான் காணப்படுகின்றன. ஆலயத்தின் பெயரே ‘கோடிலிங்கேஸ்வரர்’ கோவில் தான். இந்தக் கோவில் வளாகத்தில் பிரம்மதேவர், மகாவிஷ்ணு, மகேஸ்வரர், வெங்கடரமணி சுவாமி, அன்னபூரணி, பாண்டுரங்க சுவாமி, சீதாதேவி சமேத ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், கன்னிகா பரமேஸ்வரி அம்மன், கருமாரியம்மன் போன்ற தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன. கோடி லிங்கேஸ்வரர் கோவிலில் இரண்டு நாகலிங்க மரங்கள் இருக்கின்றன. திருமணமாகாதவர்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், மணமானவர்கள் மணவாழ்க்கை இடையூறு இன்றி இன்பமாக அமைய வேண்டியும் சிவபெருமானை வேண்டிக்கொண்டு, இந்த நாகலிங்க மரங்களில் மஞ்சள் கயிறு கட்டி வழிபாடு செய்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் இருக்கும் அனைத்து லிங்கங்களுக்கும் காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இரண்டு வேளைகளில், 10 அர்ச்சகர்களால் மேளதாளங்கள் முழங்க பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கிருக்கும் அனைத்து லிங்கங் களுக்கும், நாள் தவறாமல் பூஜைகள் நடைபெறுவது சிறப்புக்குரிய விஷயமாகும். இந்தக் கோவிலில் வித்தியாசமான வழிபாட்டு முறை ஒன்றை வழக்கத்தில் இருக்கிறது. அது சிவலிங்க பிரதிஷ்டை வழிபாடு ஆகும். தங்கள் வேண்டுதல் நிறைவேற நினைக்கும் பக்தர்கள், தங்களால் முடிந்த அளவில் வெவ்வேறு அளவுகளில் சிவலிங்கத்தை செய்து கொண்டு வந்து, இந்தக் கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். இங்கு பிரதிஷ்டை செய்யப்படும் சிவலிங்கங்கள், அந்தந்த பக்தர்களின் பெயரிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.
இந்தக் கோவிலில் மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெறு கிறது. 108 அடி உயர சிவலிங்கத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. அன்றைய தினம் முழுவதும் இறைவனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. கோலார் தங்கச்சுரங்கத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் கோடிலிங்கேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. பெங்களூருவில் இருந்து கோலார்பங்கார்பெட்டை வழியாக இந்தக் கோவிலை அடையலாம். ஆலயம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவெளியின்றித் திறக்கப்பட்டிருக்கிறது. பல மாநிலங்களிலிருந்து தாமதமாக - மாலையில் அல்லது இரவில் வரும் பக்தர்கள் இரவு தங்குவதற்கு கோயிலின் அருகில் உள்ள மண்டப அறைகள் இலவசமாக வழங்கப் படுகின்றன.
அருகிலுள்ள விமானதளம் : பெங்களூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : பெங்களூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு