குருவாயூர்





	


	



























	




 




	








 




8:58:17 PM         Friday, May 01, 2026

குருவாயூர்

குருவாயூர்
குருவாயூர் குருவாயூர் குருவாயூர் குருவாயூர் குருவாயூர்
Product Code: குருவாயூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                                                        குருவாயூர், மம்மியூர் மகாதேவன்
 
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் கேரளா மாநிலத்தின்  திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் இருந்து புன்னத்தூர் கோட்டைக்குச் செல்லும் வழியில் கொட்டடிக்கு அருகே 1 கி.மீ தூரத்தில் உள்ளது. மம்மியூர் கோவிலைக் கால்நடையாக பத்தே நிமிடங்களில் குருவாயூர் கோவிலில் இருந்து அடையலாம்.
 
இறைவன் : மம்மியூர் மகாதேவன்
 
தல சிறப்புகள் : கலியுகம் தொடங்குவதற்கு முன்பே அமைந்த கோவில் என்று போற்றப்படும் இந்த ஆலயத்தில் தம்பதியர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை நீக்கி ஒற்றுமை ஏற்படச் செய்யும் தம்பதியர் ஒற்றுமைக்கான வழிபாடு, குடும்ப அமைதி மற்றும் குறைவற்ற செல்வம் வேண்டிச் செய்யப்படும் ‘ஏகாதச ருத்ராபிஷேகம்’ எனும் வழிபாடு, திருமணத் தடை நீக்கத்திற்கான உமாமகேஸ்வர வழிபாடு, ராகு வழிபாடு, நாக வழிபாடு என்று பல சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோவிலில் 120 வகையான சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
தல வரலாறு : விஷ்ணுவின் தோற்றங்களில் ஒன்றான கிருஷ்ணர் அவதாரத்திற்கான நோக்கமும் காலமும் நிறை வடைந்து விட்டது. இதையடுத்து கிருஷ்ணர், அந்த அவதாரத்தில் இருந்து விலக, வைகுண்டம் சென்றார். அதன் பிறகு, துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணரால் வடிவமைக்கப்பட்ட அவரது உருவத்திலான சிலை கடலில் மிதக்கத் தொடங்கியது. கடலில் மிதந்த அந்தச் சிலையைக் கலியுகத்திலும் வழிபாட்டுக்கு உரியதாக மாற்ற வேண்டும் என்று விரும்பிய குரு பகவானும், வாயு பகவானும் அந்தச் சிலையை எடுத்துக் கொண்டு, அதை நிறுவச் சரியான இடத்தைத் தேடி அலைந்தனர். அப்போது, ஒரு குளக்கரையில் இறைவன் சிவபெருமான் அமர்ந்து தவம் இயற்றிக் கொண்டிருந்ததைக் கண்டனர்.
 
உடனே அவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த சிலையைச் சிவபெருமானுக்கு அருகில் வைத்துவிட்டு, அவரை வணங்கினர். அவர்கள் வந்ததை அறிந்த சிவபெருமான், அவர்களது விருப்பத்தையும் அறிந்தார். கிருஷ்ணர் கோவில்கொள்ள, தான் இருக்கும் இடமே சிறந்த இடம் என்று அவர்களிடம் தெரிவித்த சிவபெருமான், தானிருக்கும் இடத்தைக் கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்காக வழங்கினார். பின்னர், அங்கிருந்து சிறிது தொலைவில் தனக்கும் ஒரு கோவில் அமைத்துக் கொண்டார். சிவபெருமான் வழங்கிய இடத்தில் குருவும், வாயுவும் சேர்ந்து நிறுவிய கிருஷ்ணர் கோவில் இருக்கும் இடம் ‘குருவாயூர்’ ஆனது. தானிருந்த இடத்தை விட்டுக் கொடுத்த சிவபெருமானின் பெருமையைப் போற்றும் விதமாக, அவர் கோவில் கொண்ட இடம் ‘மகிமையூர்’ என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இது ‘மம்மியூர்’ என்று மாற்றம் கொண்டது என்று இக்கோவிலின் தல வரலாறு தெரிவிக்கப்படுகிறது.
 
வாயுவின் உதவியோடு பிரகஸ்பதி உலகம் முழுவதும் அலைந்து கிருஷ்ணரின் பாதாள அஞ்சன விக்ரகத்தைச் செய்ய மிகவும் புனிதமான மற்றும் பொருத்தமான தலத்தைத் தேடினார். அப்போது பரசுராமரின் வேண்டுகோள் படி கேரளா வந்தனர் வாயுவும் குருவும். அப்போது ருத்ர தீர்த்தத்தில் நீருக்குள் சிவபெருமான் தவம் செய்து கொண்டிருந்தார்.அவர் வெளியே வந்து தாம் தவம் செய்து கொண்டிருந்த இடம் மிகப்புனிதமானது என்றும் அங்கே ஆயிரம் ஆண்டுகளாகத் தாம் தவம் செய்து வருதலையும், தாம் ருத்ர கீதையை உபதேசம் செய்த தலமும் அதுவே என்று கூறி, கிருஷ்ணரின் விக்கிரகத்தை அங்கேயே வைக்கலாம் என்று உறுதி செய்து அருளினார். அனைவரையும் ஆசிர்வதித்து விட்டு சிவபெருமான் மம்மியூருக்குச் சென்றுவிட்டார். எனவே குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மம்மியூர் சிவபெருமானையும் வழிபட்டபின்னரே வழிபாடு பூரணமாகின்றது.
 
கோவில் அமைப்பு : கேரளக் கட்டுமான முறையில் அமைந்த இக்கோவிலின் கருவறையில் சிவபெருமான் இடதுபுறத்தில் பார்வதி தேவியுடன் ‘உமா மகேஷ்வரர்’ ஆகக் காட்சி யளிக்கிறார். இங்கிருக்கும் சிவபெருமான் ‘மகா தேவர்’ என்றும், ‘மம்மியூரப்பன்’ என்றும் அழைக்கப்பெறுகிறார். அருகில் இருக்கும் மற்றொரு கருவறையில் மகாவிஷ்ணு இருக்கிறார். இக்கோவில் வளாகத்தில், கணபதி, சுப்பிரமணியர், சாஸ்தா, பகவதியம்மன் மற்றும் நாக தேவதைகளுக்கும் தனித்தனிச் சன்னிதிகள் இருக்கின்றன. இக்கோவிலில் மகாதேவனுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் ஒரே நேரத்தில் வழிபாடு செய்யப்படுகிறது. இரு அர்ச்சகர்கள் தனித்தனியே இருவருக்கும் ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான வழிபாடு செய்வது இக்கோவிலில் மட்டும்தான் என்கின்றனர்.
 
இக்கோவிலில் நாள்தோறும் காலை 6.45 மணி முதல் 7.45 மணி வரை வேதங்களில் முதலாவதாகக் கருதப்படும் ரிக் வேதத்தில் இருந்து சொல்லப்பட்ட மந்திரச் சொற்களைக் கொண்டு ‘ரிக் வேத தாரை’ எனும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இவை தவிர, இங்கு சிவபெருமான், மகாவிஷ்ணு ஆகியோருக்கான சிறப்பு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி, மாசி மாதத்தில் மகா சிவராத்திரி விழாவும், தை மாதத்தில் வரும் ரேவதி நட்சத்திர நாளில் இந்த ஆலயத்தில் மகாவிஷ்ணு சிலை நிறுவப்பட்ட நாள் விழாவும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழாவில் சரஸ்வதி பூஜைக்கான நாளில், லலிதா சகஸ்ர நாம லட்சார்ச்சனை செய்யப்படுகிறது. விஜயதசமி நாளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானக் குழந்தைகளைக் கொண்டு சங்கீதார்ச்சனை நிகழ்வு நடத்தப்பெறுகிறது. இந்நாளில் குழந்தைகளுக்கான கல்வி தொடக்கத்திற்கான சிறப்பு வழிபாடும்  நடத்தப் பெறுகின்றன.
 
கார்த்திகை மாதம் முதல் நாளில் தொடங்கி 41 நாட்கள் நடைபெறும் ஐயப்பன் வழிபாட்டிற்கான மண்டல நாட்கள் மற்றும் கேரளாவில் ராமாயண மாதம் என்று அழைக்கப்படும் ஆடி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. கணபதி சன்னிதியில் ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவும், சுப்பிர மணியர் சன்னிதியில் ஐப்பசி மாதம் வரும் பூசம் நட்சத்திர நாளில் சஷ்டி விழாவும், நாகர்கள் சன்னிதியில் புரட்டாசி மாதம் வரும் ஆயில்யம் நட்சத்திர நாளில் ஆயில்ய வழிபாடும் சிறப்பு விழாக்களாக நடக்கின்றன. இதே போல் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் திருவாதிரைத் திருநாளிலும், ஆவணி மாதத்தில் ரோகிணி நட்சத்திர நாளில் வரும் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ணர் தோற்ற நாளிலும், சித்திரை மாதம் முதல் நாள் நடைபெறும் சித்திரை விசுத் திருநாளிலும் இக்கோவிலில் சிறப்பு விழாக்கள் நடத்தப்பெறுகின்றன. கேரள மாநிலம் முழுவதும் ஆவணி மாதத்தில் விவ சாயிகள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் இல்லம் நிறா எனப்படும் நிறப்புத்தேரி விழா இங்கும் நடைபெறுகிறது. மேலும், சிவபெருமானுக்குரியதாகக் கருதப்படும் பிரதோஷ நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
 
குருவாயூர் சென்று குருவாயூரப்பனை வழிபடும் பக்தர்கள், குருவாயூர் கோவிலுக்கு அருகில் இருக்கும் இந்த மம்மியூர் மகாதேவர் கோவிலுக்கும் சென்று வழிபட வேண்டும். அப்போதுதான், குருவாயூர் கோவிலுக்கு வந்து குருவாயூரப்பனிடம் வேண்டிய பலனை முழுமையாகப் பெற முடியும் எனும் நம்பிக்கை இருப்பதால், இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது.
 
காலை 5.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 
 
அருகிலுள்ள விமானதளம் : கொச்சின் 
 
அருகிலுள்ள  ரயில் நிலையம்   : குருவாயூர்
 
பேருந்து  வசதி   : உண்டு
 
தங்கும் வசதி   :  உண்டு
 
உணவு வசதி : உண்டு
Mail this page Printable view
×
×
×
×
×
×
×