கரமனை தளியல், மஹாதேவர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கரமனை சத்தியவாகேசுவரர் கோயில் மிக அருகில் தளியல் மகாதேவர் கோயில் உள்ளது.
இறைவன் : மஹாதேவர்
தல சிறப்புகள் : சதுர பீடத்தில் லிங்க வடிவில் மஹாதேவர் உள்ளார். அம்மன் இல்லாத சன்னதி. இங்குள்ள நந்தி நகரும் அமைப்பில் அமைந்துள்ளது சிறப்பாகும். இக்கோவில் அம்மன் சிலை இல்லை என்பதனால் ஆதி சிவன் என்று அழைக்கின்றனர். சுவாமி சிலையின் மீது தாரா பாத்திரம் கட்டப்பட்டுள்ளது.
தல வரலாறு : இப்பகுதியை ஆட்சி கார மகாராஜா ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். இது 800 ஆண்டுகள் பழமையை வாய்ந்த கோவில். ஒரு நாள் காளை ஒன்று மேய்ச்சலுக்கு வெகுதூரம் சென்று தனது இருப்பிடத்தை மறந்து விட்டது. இரவு நேரம் ஆகி விட்டதால் உடனடியாக இக்கோவிலின் கருவறை பார்த்தவாறு நந்தி அமர்ந்துவிட்டது. இப்போதுள்ள நந்தி அந்த காளையாகவே இருக்கும் என மக்கள் இன்றும் கருதுகின்றனர். திருவிதாங்கூர் மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர்.
கோவில் அமைப்பு : கருவறை விமான கோபுரம் தமிழக சிற்பகலை பாணியில் உள்ளது. கரமனை ஆறு அருகில் ஓடுவதால் மூர்த்தி, தீர்த்தம், தலம் என சிறப்பான கோவிலாகும். கோவில் தூணில் கிருஷ்னரும், அனுமார் சிலைகள் இருக்கிறது. மேலும் சாஸ்தா, விநாயகர், சாஸ்தா சன்னதிகள் உள்ளன. கற்பகிரகத்தை சுற்றிவரும் பழக்கமில்லை. ஏன் என்றால் ஸ்வாமியின் ஜடாமுடி பின்பக்க பிரகாரத்தில் பரந்து விரிந்து கிடப்பதால் யாரும் மிதிக்க கூடாது என்பது ஐதீகம். நந்தி சுவாமி சிலைக்கு நேராக இல்லாமல் சற்று விலகி உள்ளது. இது மெல்ல மெல்ல நகர்ந்து திசைமாறி சென்று கொண்டு இருப்பதாக கூறுகின்றனர். முன்னர் காலத்தில் ஸ்வாமிக்கும் நந்திக்கு பெரிய இடைவெளி இருந்தது. கால்நடைகளுக்கு நோய் வந்தால் நந்திக்கு மணிச்சரம் கட்டி பயறு, காய்கறி பழங்கள் நெய்வைத்யம் செய்கின்றனர். திருமண தடை , குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, காய்ச்சல் குணமாக இங்கு வழிபடுகின்றனர்.
காலை 5.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவனந்தபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு