வேந்தன்பட்டி





	


	



























	




 




	








 




10:04:30 AM         Friday, May 01, 2026

வேந்தன்பட்டி

வேந்தன்பட்டி
வேந்தன்பட்டி வேந்தன்பட்டி வேந்தன்பட்டி வேந்தன்பட்டி வேந்தன்பட்டி வேந்தன்பட்டி வேந்தன்பட்டி வேந்தன்பட்டி வேந்தன்பட்டி வேந்தன்பட்டி வேந்தன்பட்டி
Product Code: வேந்தன்பட்டி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                     வேந்தன்பட்டி, நெய் நந்தீஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  புதுக்கோட்டை மாவட்டத்தில் ராமேஸ்வரம் சாலையில் இருந்து  20 கி.மீ., தூரம் வடகாடுமுக்கம் பேருந்து நிலையத்தில்  இருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் உள்ளது. 

இறைவன் : சொக்கலிங்கேஸ்வரர், நெய் நந்தீஸ்வரர்

இறைவி  :   மீனாட்சி அம்மன்

தல விருட்சம் :  வன்னி 

தல  தீர்த்தம்  :  நந்தி தீர்த்தம்

தல சிறப்புகள் : இங்குள்ள நந்தி, நெய் நந்தீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார். பொதுவாக நம் வீட்டில் அல்லது வெளியில் சிறிதளவு நெய் கொட்டினாலும் எறும்பு, ஈக்கள் குவிந்துவிடும். ஆனால் இந்த நந்தீஸ்வரருக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும் நெய் மீது ஈ, எறும்புகள் மொய்ப்பதில்லை.

கோவில் அமைப்பு :  கோயிலின் எதிரே நந்தி தீர்த்தம் உள்ளது. மூலவரின் இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி, சூரியன், பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளனர். வேந்தன்பட்டியில் கச்சேரிக்கூடம் என்னுமிடத்தில் வேப்ப மரம் ஒன்று இருந்தது. அவ்விடத்தில் நெய் நந்தீசுவரர் சுயம்புவாகத் தோன்றியதாகக் கூறுவர். இக்கோயிலில் உள்ள நந்தி நெய்யினால் அபிஷேகம் செய்யும்போது எந்த நெய்யும் கீழே விழாமல் ஈர்த்து விடும் சக்தி உள்ளது. இக்கோயிலில் உள்ள நெய்க்கிணற்றில் ஈக்கள் மொய்ப்பதில்லை. இங்குள்ள நந்தியின் கொம்புகளுக்கு நடுவில் இயற்கையாகவே ஒரு சக்கரம் அமைந்துள்ளது. தஞ்சாவூர் நந்தியின் தம்பி என்ற நிலையில் வைத்து, இந்த நந்தியைத் தம்பி நந்தி என்றழைக்கின்றனர்.  இதுவரை இக்கோயிலில் எட்டு முறை குடமுழுக்கு நடைபெற்றதாகக் கூறுகின்றனர்.  இந்த பகுதியில் சுமார் 90 வருடங்களாக ஒரு வேப்ப மரம் உள்ளது. இந்த வேப்ப மரத்தில் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றியுள்ளார். இதன் காரணமாக இதற்கு வேப்பமரத்து நந்தி என பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர்.

தல வரலாறு :  தஞ்சாவூரில் மிகப்பெரிதாக நந்தி அமைந்து பக்தர்களை கவர்ந்தது போல, இங்குள்ள நெய் நந்தியும் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.வேப்பம்பட்டியில் ஒரு சிவ பக்தர் சிவ லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். ஆனால் நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாமல் விட்டுவிட்டார். நந்தியின் புனிதம் கருதி அதை தீர்த்த குளத்திற்குள் வைத்து விட்டார். ஒருநாள் அவருக்கு கடுமையான வயிறு வலி ஏற்பட்டது. அப்போது மானசீகமாக சிவனை வேண்டிக்கொண்டார். தொடர்ந்து அவரின் கனவில் மாடுகள் விரட்டுவது போல காட்சிகள் கண்டு திடுக்கிட்டார். உடனே நந்தியை பிரதிஷ்டை செய்வதாகவும், அதற்கு நெய் அபிஷேகம் செய்வதாகவும் வேண்டிக்கொண்டார். இந்த நிகழ்வு நடந்த சில நாட்களிலேயே அந்த பக்தரின் உடல் பிணி தீர்ந்தது. அவர் நெய் அபிஷேகம் செய்து வழிபட்டது போல பலரும் நெய் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

ஒரு முறை நந்திக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நெய் எடுத்து தீபம் ஏற்றினர். ஆனால் சில நிமிடங்களில் அந்த நெய் ரத்தம் போல சிவப்பாக மாறியது. இதன் காரணத்தால் நந்திக்கு அபிஷேகம் செய்யப்படும் நெய் வேறு எதற்கும் பயன்படுத்துவதில்லை. அதனை கோயில் வளாகத்திற்குள் இருக்கும் கிணற்றில் கொட்டி விடுகின்றனர். இதன் காரனமாக அந்த கிணறு தற்போது நெய் நிறைந்த நிலையில் காட்சி தருகின்றது. நெய் பல லிட்டர் கணக்கில் இருந்தும் ஒரு ஈ, எறும்பு வராதது கலியுகத்தில் நாம் காணும் அதிசயமாக பார்க்கப்படுகிறது. பொதுவாக ரிஷப ராசியை குறிக்க காளை உருவம் பயன்படுத்தப்படுகிறது. நந்திக்கு ரிஷபம் என்ற பெயருண்டு. இதன் காரணமாக ரிஷப ராசியினர் அவர்களின் ஜாதகத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தாலோ, கிரகப் பெயர்ச்சியால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ, அவர்கள் பரிகாரம் செய்ய சிறந்த தலமாக இந்த நெய் நந்தீஸ்வரர் கோயில் பரிந்துரைக்கப்படுகிறது.

கால் நடைப் பண்ணை வைத்துள்ளவர்கள், பால், தயிர், வெண்ணெய் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழில் வளர்ச்சிக்காக இந்த கோயிலில் வந்து வழிபட்டு செல்கின்றனர். கால்நடைகளுக்கு ஏதேனும் உடல் நல பிரச்னை ஏற்பட்டாலும் அவைகள் குணமாக இங்குவந்து நந்திக்கு நெய் அபிஷேகம் செய்து, அந்த நெய் தீர்த்தமாகப் பெற்று சென்று அவற்றுக்கு புகட்டுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த கோயிலில் வணங்கி முதலில் பசுக்களை வாங்குவோர், அந்த பசு மாடு சுரக்கும் முதல் பால் மற்றும் முதலில் உருவாகிய நெய் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். பலரும் ஜல்லிக்கட்டில் தங்களின் காளைகள் வெற்றி பெற வேண்டும் என வேண்டி கொள்ளும் வழக்கமும் உள்ளது.

மாட்டுப்பொங்கலன்று நந்தி அருகில் பிரதோஷநாயகரை எழுந்தருளச் செய்து, இருவருக்கும் ஒரே சமயத்தில் விசேஷ அபிஷேகம் நடக்கும். பின், நந்திக்கு பழங்கள், பூக்கள், இனிப்பு பதார்த்தங்கள், பட்சணங்கள், கல்கண்டு உள்ளிட்டவைகளால் அலங்காரம் செய்வர். பின், பிரதோஷநாயகர் கோயிலுக்குள் புறப்பாடாவார். இவ்வூரில் உள்ள கச்சேரிக்கூடம் என்னுமிடத்தில் ஒரு வேப்ப மரம் உள்ளது. இதில், இயற்கையாகவே நந்தியின் உருவம் தோன்றியிருக்கிறது.

வைகாசி விசாகத்தை ஒட்டி இங்கு 3 நாள் விழா நடக்கும். விசாகத்தன்று "அக்னி காவடி' தூக்கும் வைபவம் விமரிசையாக நடக்கும். அப்போது, இங்கு வேண்டி பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் காவடி தூக்கிக் கொண்டு, பூக்குழியில் இறங்குவர். நந்தீஸ்வரருக்கு முடிக்காணிக்கை செய்து நேர்த்திக்கடன் செலுத்துவதுமுண்டு. கோயில் எதிரே நந்தி தீர்த்த தெப்பம் உள்ளது. சுவாமிக்கு இடப்புறம் மீனாட்சி சன்னதி உள்ளது. பிரகாரத்தில் சூரியன், விநாயகர், வள்ளத தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, பைரவர், நவக்கிரகம், சூரியன் ஆகியோர் உள்ளனர்.

மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், ஐப்பசி அன்னாபிஷேகம். சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், நவராத்திரி, திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம். இக்கோயிலில் சிவனுக்குரிய வழக்கமான விழாக்கள் நடக்கின்றன. பிரதோஷம் தான் முக்கியம். சனிப்பிரதோஷம் என்றால் இரட்டிப்பு கூட்டம் வருகிறது.

காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி 

அருகிலுள்ள  ரயில் நிலையம்   : புதுக்கோட்டை 

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×