மூலங்குடி,மீனாட்சி சுந்தரேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி அருகில் உள்ள கொப்பனாப்பட்டியில் அமைந்துள்ளது.
இறைவன் : சுந்தரேஸ்வரர், வியாக்ரபுரீஸ்வரர்
இறைவி : மீனாட்சி
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : மூலவருக்கு முன்பு காணப்படுகின்ற நந்தியின் பின்புறமாக நின்று கொண்டு இறைவனைக் காணும்போது சிவனின் நெற்றிக்கண் தெரிவது போல காணப்படும். அவ்வாறே முன்புறம் நின்று பார்க்கும்போது வில்வ மரத்தைக் காணமுடியும். வில்வ மரத்தருகே நின்று பார்க்கும்போது மூலவரின் திருமேனியை அழகாகக் காணலாம். இக்கோயிலில் துர்க்கையம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் துர்க்கையம்மன் சன்னதி சிவபெருமானுக்கு இடது புறம் காணப்படும். ஆனால் இக்கோயிலில் வலப்புறம் அமைந்துள்ளது. இங்குள்ள துர்க்கையம்மன் 18 கரங்களில் ஆயுதங்களை ஏந்திய நிலையில் காணப்படுகிறார்.
மிகப் பழமை வாய்ந்த சக்தி நிறைந்த மூலங்குடி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். இவ்வாலயத்தின் வருடத்திற்க்கு ஒரு முறை ஸ்ரீதுர்க்கா தேவிக்கு ஸ்ரீ நவசண்டி ஹோமமானது அதி விமர்சியாக நடைபெறுகிறது இத் திருக்கோவிலில் பௌர்ணமி தினத்தன்று துர்க்கா தேவிக்கு மாலை ஆறு மணியளவில் சிறப்பு ஹோமங்களும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகிறது. மகா சிவராத்திரி, நவராத்திரி, சித்திரா பௌர்ணமி உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : புதுக்கோட்டை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை