செவலூர்





	


	



























	




 




	








 




5:31:31 AM         Sunday, May 03, 2026

செவலூர்

செவலூர்
செவலூர் செவலூர் செவலூர் செவலூர் செவலூர் செவலூர் செவலூர்
Product Code: செவலூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                                             செவலூர், பூமிநாதர்  

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி குழிபிறையிலிருந்து 3 கி.மீ.தொலைவில் உள்ளது. குழிபிறையில் இறங்கி 3 கி.மீ ஆட்டோவில் போகவேண்டும்.

இறைவன் : பூமிநாதர்

இறைவி  :  ஆரணவல்லி
 
தல தீர்த்தம்   :  பிருத்வி தீர்த்தம்
 
தல சிறப்புகள் : வாஸ்து நாட்களில் விசேஷ பூஜை நடக்கும் கோயில்களில் ஒன்று.  இத்தல லிங்கம் மஞ்சள் காப்பு, சந்தான காப்பு, கஸ்தூரி காப்பு, மூலிகை காப்பு என பலவித காப்புகளை சார்த்தியதால் பல பட்டைகளை கொண்டதாக காட்சி தருகிறார். மகா விஷ்ணுவால் எலுப்பப்பட்ட புண்ணியத் தலம்.
 
கோவில் அமைப்பு :  இத்தலத்து லிங்கம் பல பட்டைகளைக் கொண்டது. பூமாதேவி இந்த லிங்கத்தை பூஜித்த போது, ஒவ்வொரு யுகத்திலும் மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, கஸ்தூரி காப்பு, வெண்ணெய் காப்பு, மூலிகை காப்பு என பலவித காப்புகளை சார்த்தி பூஜித்ததால், இந்த பட்டைகள் உருவானதாக கூறப்படுகிறது. சிவலிங்கம் 16 பட்டைகளைக் கொண்டது. சிவலிங்கத்திற்கும் ஆவுடைக்கும் இடையே இடைவெளி உள்ளது. சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்யும் பால் மற்றும் தண்ணீர் இந்த இடைவெளி வழியாகப் பூமிக்குள் சென்று விடுகிறது. ஆவுடையில் வழிந்தோடும் தண்ணீர் மட்டுமே கோமுகத்தின் வழியாக வெளியே விழுகிறது. கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் வடிவத்தை ஒத்த  சிவலிங்கம் ஒன்று சிதிலமடைந்த நிலையில் அம்மன் சந்நிதி அருகே உள்ளது. கோயில் எங்கும் கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. 
 

பூமிநாத சுவாமி கோயிலின் வடக்கு பாகத்தில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. அதில் கி.பி.1458ம் ஆண்டு பார்த்திப வருஷம் தை மாதம் 31ம் தேதி கோயிலுக்கு பூஜைத் திருநாள் நடத்த இளையாத்தங்குடி நகரத்தார் முதன்மை மானியம் தந்தனர் என்று உள்ளது. பூமீஸ்வரர் கோயிலின் வாசற்படிக்குத் தென்புறமாக சுவரில் ஒரு கல்வெட்டு கோயிலின் பழமையைத் தெளிவாக்குகிறது. விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், நந்தி, பலிபீடம் சுற்றிலும் அருள்பாலிக்க ஏகதள விமானக் கருவறையின் கீழ் பதினாறு பட்டை சிவலிங்கத்திருமேனியராகக் கிழக்கே திருமுக மண்டலத்தோடு அருட்காட்சி தருகிறார். இரண்டு கைகளிலும் தாமரை மலர்களோடு கீழ்க்கைகளை அபய வரத முத்திரை காட்டியவாறு தாமரை பீடத்துடன் ஆரணவல்லி தெற்கே திருமுக மண்டலத்துடன் நின்றருள் புரிகிறார். மகாமண்டபம், அர்த்த மண்டபங்களில் சிவாலய மூர்த்தங்கள் இருந்து இயற்கைச் சீற்றங்களால் காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்டதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.

தல வரலாறு  : செவலூர் என்று அழைக்கப்படும் இப்புனித பூமியை வானம், அந்தரம், சுந்தரம் என்று முப்பெரும் பகுதிகளாக வகைப்படுத்திச் சிறப்பிக்கின்றனர். அதாவது மூன்று இறையருட் கூட்டும் திருத்தலங்கள் இங்கே உள்ளன. விண்ணைத் தொடும் உயரத்தில் உள்ள காஞ்சாத்து மலையின் மேல் காசிவிஸ்வநாதர் விசாலாட்சி சமேதராகவும், அடுத்ததாக ஆண்டாமடமும் அருகம்பூஞ்சுணையும் அமைந்த அந்தரத்தில் சுந்தரேச சுவாமியும், இரண்டுக்கும் நடுவில் கீழ்ப்பகுதியில் காணப்படும் விளைநில பாகத்தைத் தலமாகக் கொண்டு ஆரணவல்லி தேவியுடன் பூமிநாத ஈஸ்வரர் கோயில் கொண்டருள்கிறார். காஞ்சாத்து மலை உச்சியில் ஆறுமுகக் கடவுள் சேவற்கொடியோடு பல ஆண்டுகளாக அருள்பாலித்து வருவதால் இவ்வூரை சேவலூர் என்று அழைத்த பக்தர்கள், பிறகு முதல் எழுத்தைக் குறிலாக்கிச் செவலூர் என்றழைக்கத் தொடங்கியதால் செவலூராகவே இன்று வரை அழைக்கப்படுகிறது.

 
பூமாதேவி தவமிருந்து தனது கைகளாலேயே பதினாறு பட்டை லிங்கமூர்த்தியை உருவாக்கினார் என்று தலவரலாற்றில் குறிப்பு உள்ளது. இந்த பூமிநாதருக்குச் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளில் சேரும் எல்லா நீரும் அப்படியே பூமிக்குள் சென்று விடுவது குறிப்பிடத்தக்கது. செவலூர் சிவபிரானுக்கு பூமியின்கீழ் விளையும் கிழங்கு வகைகளில் செய்யப்பட்ட உணவுப் பொருட்களே நிவேதனமாக வைத்துப் படைக்கப்பட்டு, வருகின்ற பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்று. ஆலயத்தின் அருகிலுள்ள தீர்த்தம் பிருத்வி புட்கரணி என்று சொல்லப்படுகிறது. சாதாரணக் குளம் போலக் காட்சி அளித்தாலும் பூலோகத்திலுள்ள அனைத்துத் தீர்த்தங்களோடும் தொடர்புடையதாம். நீர் வரும் காலங்களிலும் கோடை காலத்திலும் இந்தப் பிருத்வி தீர்த்தத்தில் நீர் வற்றாமல் ஒரே அளவில் இருக்கும் என்பது அதிசயம். பெரிய சேதங்களோடு காணப்படுகிற செவலூர் பிரானுடைய ஆலய மண்டபங்களில் சூட்சும தேகத்துடன் ஆறுகால பூஜைகளை தேவர்கள் வந்து நடத்திவிட்டுச் செல்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
பூகம்பம், நிலத்தகராறுகள் போன்றவை இத்தலத்து இறைவனை வழிபட்டால் நீங்கும். தடைபட்டுள்ள காரியங்கள், தொழிலில் தடை, கட்டட வேலைகளில் பாதிப்பு, விவசாய வளர்ச்சியின்மை, கட்டடம் கட்டும் போது வேம்பு, ஆல், அரசு போன்ற புனித மரங்களை வெட்டியதால் ஏற்பட்ட தோஷம், நாகப்புற்றுகளை அழித்த கொடுமை, கோயில் குத்தகையை கொடுக்காமல் ஏமாற்றியது, தொழில், வியாபாரத்தில் நஷ்டம், பணியில் கஷ்டம் ஆகிய துன்பங்களை அனுபவிப்போர் பூமிநாதருக்கு பூஜை செய்யலாம். பூகம்பத்தால் இறந்த ஜீவன்கள் நற்கதியை பெறவும், கோர்ட் வழக்குகள், உறவினர் பகை போன்றவற்றால் தடைப்பட்டுள்ள காரியங்கள், வாஸ்து நாளில் இங்கு வந்து விசேஷ பூஜை செய்பவர்களுக்கு பலன் கிட்டும். வாஸ்து நாளை தவற விட்டால் செவ்வாய்கிழமைகளில் இப்பூஜையை நடத்தலாம். புதிய நிலம், மனை வாங்க முடியாதவர்களும், வாங்கிய மனையில் வாஸ்து தோஷங்களால் கட்டடம் கட்டத் தடைகள் உள்ளவர்களும் வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்களான வைகாசி -21, ஆடி-11, ஆவணி- 6, ஐப்பசி -11, கார்த்திகை -8, தை - 12, மாசி -22 ஆகிய நாட்களில் இங்கு நடைபெறும் விசேஷ ஹோம பூஜைகளில் கலந்துகொண்டு பலன்பெற வெளியூர்களிலிருந்தும் திரளாக வந்து செல்கிறார்கள். 
 
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 
 
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி 
 
அருகிலுள்ள  ரயில் நிலையம்   : புதுக்கோட்டை 
 
பேருந்து  வசதி   : இல்லை 
 
தங்கும் வசதி   :  இல்லை 
 
உணவு வசதி : இல்லை 
Mail this page Printable view
×
×
×
×
×
×
×