செட்டிகுளம்





	


	



























	




 




	








 




7:20:26 PM         Thursday, April 30, 2026

செட்டிகுளம்

செட்டிகுளம்
செட்டிகுளம் செட்டிகுளம் செட்டிகுளம் செட்டிகுளம் செட்டிகுளம் செட்டிகுளம் செட்டிகுளம் செட்டிகுளம்
Product Code: செட்டிகுளம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                    செட்டிகுளம்,  ஏகாம்பரேஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் கேட்டிலிருந்து மேற்கே 8 கி.மீ தொலைவிலும் பெரம்பலூருக்கு தெற்கே சுமார் 18 கி.மீ தொலைவிலும் , திருச்சிக்கு வடக்கே  40 கி.மீ தொலைவிலும் துறையூரிலிருந்து கிழக்கே 21 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இறைவன் :  ஏகாம்பரேஸ்வரர் 

இறைவி : காமாட்சியம்மன்

தல விருட்சம் : வில்வ மரம்

தல தீர்த்தம் : பஞ்சநதி தீர்த்தக்குளம்

தல சிறப்புகள் : செட்டிகுளம் ஊரின் நடு நாயகமாக விளங்குகின்ற அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலும், ஊரின் கீழ்புறம் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலும் வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோயிலாகும். உறையூர் சோழன் பராந்தகனுக்கும் பாண்டியமன்னன் குலசேகரனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு எழுப்பப்பட்ட திருக்கோயிலாகும். மலையின் மீது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி தன் கையில் 11 கணுக்களை உடைய செங்கரும்பினை ஏந்தி காட்சி அளிப்பது சிறப்பு அம்சமாகும்.ஏகாம்பரேஸ்வர்  கிழக்கு நோக்கியும், தண்டாயுதபாணி சுவாமி மலையின் மீது தன் தந்தையை பார்த்து மேற்கு நோக்கியும் காட்சி கொடுப்பது தனிச்சிறப்பாகும். ஏகாம்பரேஸ்வரர் சுவாமியின் மீது பங்குனி மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் காலைநேர கதிரவனின் ஒளி விழும் இந்த ஒளியானது சுவாமி மீதிருந்து நகர்ந்து சற்று நேரத்தில் அம்பாள் மீது ஒளிப்படும். தண்டாயுத சுவாமி மீது மாசி மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் சூரியன் மறையும்போது ஒளிக்கதிர்கள் விழும் வகையிலும், சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு : முன்காலத்தில் இத்தலமானது கடம்ப மரங்கள் நிறைந்த அடர்ந்த கடம்ப வனமாக இருந்துள்ளது. உறையூரை தலைநகரமாகக் கொண்டுசோழமன்னன் ஆட்சி செய்த போது, வணிகன் ஒருவன் உறையூரிலிருந்து வணிக நிமித்தமாக வடக்கு நோக்கி பயணத்தை தொடங்கினான். அவ்வணிகன் இக்கடம்பவனத்தை வந்தடைந்தபோது மாலைப்பொழுதாகி பின் இருள் சூழ்ந்து விட்டதால் மேற்கொண்டு பயணம் மேற்கொள்ள இயலாமல், இக்கடம்ப வனத்திலேயே தங்க தீர்மானித்து அங்கிருந்த ஆலமரத்தின் மீது ஏறி அமர்ந்து சாய்ந்திருந்தான். இக்கடம்பவனத்தில், நள்ளிரவில் திடீரென்று அவன் கண்ணெதிரில் ஒளி மிகுந்த, தீப்பிழம்பின் நடுவே ஓர் சிவலிங்கம் தோன்றி, தேவர்களும் முனிவர்களும் வழிபடுகின்ற காட்சி பளிச்சென்று தோன்றி மறைந்தது .இவ்வற்புதக்காட்சியை கண்ட வணிகன் உணர்ச்சி மிகுதியால் மயிர்க்கூச்செறிந்து விதிர்விதிர்த்து, விடிந்ததும் இவ்வரியக் காட்சியை சோழமன்னரிடம் உரைப்பதற்காக உறையூரை நோக்கி திரும்பச் சென்றான். உறையூர் நகரையடைந்ததும் வணிகன் , அரண்மனைக்குச் சென்று மாமன்னன் பராந்தக சோழனிடம் முதல் நாள் இரவில் இக்கடம்ப வனத்தில் தான் கண்ட அற்புதக் காட்சியை எடுத்துரைத்தான்.

சோழனின் அரண்மனையில் விருந்தினராய் தங்கியிருந்த குலசேகரபாண்டியனும், இதைக் கேள்வியுற்று, பாண்டியனும், சோழனும் வணிகனுடன் தன்பரிவாரங்களையும் அழைத்துக் கொண்டு இக்கடம்ப வனத்தை வந்தடைந்து சிவலிங்கத்தை தேடி அலைந்தார்கள். இவ்வாறு நாற்றிசையும் தேடி அலைந்தபோது, கையில் செங்கரும்பு ஒன்றினை ஊன்றிக் கொண்டு முதியவர் ஒருவர் தடுமாறிக் கொண்டு மாமன்னர்களை அணுகி சிவலிங்க இருப்பிடத்தைக் காட்டி திடீரென்று ஜோதி வடிவமாக மறைந்தார். அச்சோதி மறைந்த கிழக்கு திசை நோக்கி மன்னவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தபோது, தூரத்தே ஒரு குன்றின் மீது முருகப் பெருமான் தண்டாயுதபாணியாக செங்கரும்புடன் காட்சி தந்தார். பக்தி பரவசத்தில் ஆழ்ந்த சோழனும், பாண்டியனும், ஏகஜோதியின் இடையில் தோன்றிய ஏகாம்பரேஸ்வரருக்கு ஓர் ஆலயமும் கிழக்கு குன்றின் மீது தோன்றிய தண்டாயுதபாணி சுவாமிக்கு அம்மலையின் மீது ஓர் ஆலயமும் ஏககாலத்தில் கட்டுவதென தீர்மானித்து குலசேகர பாண்டியனால் இரு ஆலயங்களும் கட்டப்பட்டது. கற்புக்கரசியான கண்ணகி, பாண்டியனால் தன் கணவன் கோவலன் கொலையுண்ட பிறகு, கடுஞ்சினங்கொண்டு மதுரையை எரித்தும் சினம் தணியாதவளாக, வடமேற்கு நோக்கி வரும்பொழுது, இத்தலத்தின் வழியாக வந்தபோது, முருகப் பெருமான் கண்ணகியின் கடுஞ்சினத்தை, தணித்து, சிறுவாச்சூர் என்னும் இடம் சென்று மதுர காளியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஆற்றுப்படுத்தியதாகவும், இப்பகுதி வழக்காறு உள்ளது.

முன்னொரு காலத்தில், வியாபாரி ஒருவர் பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்தார். ஒருநாள், இருட்டத் தொடங்கியதும் கடம்பவனமாக இருந்த பகுதியிலேயே இரவுப் பொழுதைக் கழித்துவிடுவது என தீர்மானித்தார். அன்றிரவு அங்கேயே படுத்துறங்கினார். அப்போது ஏதோ சத்தம் கேட்டது. கூர்ந்து கேட்டார். யாரோ பூஜை செய்வது போல் உணர்ந்தார். சப்தம் வந்த இடம் நோக்கிச் சென்றார். அங்கே, சிவலிங்கத் திருமேனிக்கு முனிவர் பெருமக்கள் பூஜை செய்துகொண்டிருந்தனர். பார்த்ததும் பரவசமானார். விடிந்ததும் சீராப்பள்ளிக்குச் சென்றார். உறையூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மன்னனிடம் விவரம் சொன்னார். மன்னரும் அமைச்சர்களும் வீரர்களும் அந்த கடம்பவனத்துக்குச் சென்றனர். அங்கே சிவலிங்கம் இருந்த இடம் எதுவெனத் தெரியவில்லை. தேடினார்கள். அப்போது கரும்பை ஏந்தியபடி வந்த வயோதிகர் ஒருவர், ‘நான் காட்டுகிறேன் வாருங்கள்’ என்று மன்னனையும் மற்றவர்களையும் அழைத்துச் சென்றார். ஓரிடத்துக்குச் சென்றதும் வயோதிகர் சட்டென மறைந்து போனார். அங்கே சிவலிங்கம் தோன்றியது.

அப்படி கரும்புடன் வந்தவர், முருகப்பெருமான் என்கிறது ஸ்தல புராணம். பின்னர் கரும்பு முருகனுக்கு அருகில் உள்ள சிறு மலையின் மீது கோயில் எழுப்பப்பட்டது. அதேபோல, சிவலிங்க தரிசனம் கிடைத்த இடத்தில், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுவே ஏகாம்பரேஸ்வரர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டதற்கான ஸ்தல வரலாறு என விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அற்புதமான திருக்கோயில். சிவனாரின் திருநாமம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீகாமாட்சி அம்பாள். ஊருக்குள் நுழைந்ததுமே பிரமாண்டமாக அமைந்திருக்கிற ஆலயக் கோபுரத்தைத் தரிசிக்கலாம். ஏழு நிலை ராஜகோபுரம். அதேபோல், கோபுர வாயிலைக் கடந்து அர்த்த மண்டபம், மகாமண்டபம், கருவறை என மொத்தம் ஏழு வாசல்கள் உள்ளன. ஏழு நிலை கோபுரம் கடந்து, ஏழு வாசல்களைக் கடந்து சென்றால் ஏகாம்பரேஸ்வரரைத் தரிசிக்கலாம் என்றும் இப்படி ஏழு வாசல்களைக் கடந்து சென்று, ஏகாம்பரேஸ்வரை தரிசித்தால், ஏழு ஜென்ம பாவமும் விலகும் என்கிறார்கள்.

கோவில் அமைப்பு : ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்குள் நுழையும் முன்பாக கம்பீரமான தோற்றத்துடன் கூடிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால், பிரமாண்டமான ஸ்தபன மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் உள்ள சிற்பக் கலை, திருச்சி ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயங்களில் உள்ள சிற்பங்களை கண் முன் நிறுத்துவதாக அமைந்துள்ளன. இந்த மண்டபத்தில் ஆலயத்திற்கு திருப்பணி செய்த மன்னர்களின் சிலைகள், மண்டப தூண்களில் யாளி மீதும், குதிரைகள் மீதும் அமர்ந்திருக்கும் வீரர்களின் சிற்பம், மண்டபத்தின் மேல் விதானத்தில் திருஞானசம்பந்தர், பதஞ்சலி முனிவர், பிருங்கி முனிவர், வியாக்ரபாதர் மற்றும் சிவனடியார்கள் பலரும் சிவபூஜை செய்யும் காட்சி, சித்திரகுப்தர் ஓலைச்சுவடியுடன் நிற்க, எருமை வாகனத்தில் வரும் எமதர்மனை சூலாயுதத்தால் தடுக்கும் சிவபெருமான் ஓவியம் என்று கண்களை கொள்ளைகொள்ளும் காட்சிகள் ஏராளம்.

இந்த அழகை ரசித்தபடி நடந்தால் கொடிமரம் உள்ளது. அதைக் கடந்தால் மகா மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் ஓசை எழுப்பும் கல் தூண்கள் அமைந்துள்ளன. அதற்கு அடுத்தாற்போல் மூலவரின் கருவறை இருக்கிறது. கரு வறையில் ஏகாம்பரேசுவரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். வாரத்தில் அனைத்து தினங்களிலும் நடைதிறக்கப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது. மூலவர் கருவறையின் வடமேற்கில் காமாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. இந்த ஆலயத்தில் அம்மன் சன்னிதிக்கு எதிரே மகா குபேரனுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இங்கு சித்திரலோகா சமேதராக வீற்றிருந்து மகா குபேரன் அருள்பாலிக்கிறார்கள். ஆலயத்தின் ஸ்தபன மண்டபத்தில் 12 ராசிக்காரர்களும் வழிபட, மீன் வாகனத்தில் 12 குபேரன் சிலைகள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. அவரவர் ராசிக்குரிய குபேரனை, தங்களது ஜனன நட்சத்திரத்தன்று வழிபடுவது நன்மை தரும். மேலும் குபேரனுக்கு உகந்த பச்சை வஸ்திரமும், பச்சை குங்குமமும் சாத்தி, நிவேதனம் செய்து வழிபட்டால், யோகம் பெருகி தொழிலில் விருத்தி ஏற்படும். செல்வச் செழிப்பு மிகுந்த வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

குபேரனின் ஜன்ம நட்சத்திரன் பூசம் ஆகும். ஆனால் ஒரு முறை குபேரன் தன்னுடைய சக்திகளை இழந்து, செல்வங்களையும் பறிகொடுத்தான். பின்னர் இத்தலத்தில் உள்ள காமாட்சி அம்மனை வழிபட்டு இழந்த செல்வங்களை மீட்டெடுத்தான். செல்வங்களை மீட்ட தினம் பூரட்டாதி நட்சத்திரமாகும். எனவே அந்த நட்சத்திரத்தன்று மகா குபேரனுக்கு அபிஷேகங்களும், யாகமும் நடைபெறுகிறது. 

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா பெருந்திருவிழாவாகும். மலைகோயிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா பெருந்திருவிழாவாகும். மலைக்கோயிலில் இருந்து பங்குனி உத்திர திருவிழாவின்போது மட்டும் உற்சவர் மலையில் இருந்து இறங்கி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். பங்குனி உத்திர திருவிழா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே அறிவிக்கை செய்யப்பட்ட திருவிழா ஆகும். கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாட்கள் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் காலை மற்றும் இரவு என சுவாமி திருவீதிஉலா நடைபெறுகிறது. இவ்விழாவில் திருக்கல்யாண உற்சவமும் ஒவ்வொரு நாளும் குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம், புஸ்ப பல்லாக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மழலைபேறு வேண்டுவோர் சஷ்டியில் விரதம் இருந்து மலைமீதுள்ள தலவிருட்சமான வில்வமரத்தில் தொட்டில்கட்டி வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து மலையேறி தங்கள் வேண்டுதலை நிறைவு செய்கின்றனர். குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று குபேர ஹோமமும், சிறப்பு வழிபாடும் வெகு சிமர்சையாக நடைபெற்று வருகிறது.

காலை 7.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி 

அருகிலுள்ள  ரயில் நிலையம்   : திருச்சி 

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×