பெரியமணலி, நாகேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாமக்கல் மாவட்டத்தில் பெரியமணலி என்னுமிடத்தில் உள்ளது.
இறைவன் : நாகேஸ்வரர்
இறைவி : சிவகாமி அம்பிகை
தல சிறப்புகள் : இங்குள்ள மூலவரை நாகம் இங்கு வந்து வணங்கியதால் நாகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு துர்கை, தட்சணாமூர்த்தி,பிரம்மா , கால பைரவர், கல்யாண சுப்பிரமணியர், சூரியன், சந்திரன் தனி தனி சன்னதி கொண்டு உள்ளனர். பல நூற்றாண்டுக்கு முன்பு பாப்பாத்தி எனும் பெண்மணி கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்தாள்.சிவ பக்தி கொண்ட இவள் தினமும் சிவ தரிசனம் செய்துவந்தாள். ஒருநாள் சிவன் காட்சி தந்து நாகம் ஒன்று சன்னதியின் லிங்க திருமேனியில் இருந்து வெளியே வந்து சுற்றியபடி காட்சி தந்தது. இங்குள்ள சிவனை வழிபட நாக தோஷம் நிவர்த்தி ஆகிறது. திருமண தடை, கணவன் மனைவி ஒற்றுமை வேண்டி தலத்தில் வேண்டி கொள்கின்றனர். ஐப்பசி மாத அன்ன அபிஷேகம், மாசி மாத சிவராத்திரி சிறப்பாக நடைபெறுகிறது.
காலை 9.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சேலம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : நாமக்கல், சேலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை