கட்டிமாங்கோடு





	


	



























	




 




	








 




9:58:30 AM         Wednesday, June 24, 2026

கட்டிமாங்கோடு

கட்டிமாங்கோடு
கட்டிமாங்கோடு கட்டிமாங்கோடு கட்டிமாங்கோடு கட்டிமாங்கோடு கட்டிமாங்கோடு
Product Code: கட்டிமாங்கோடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                         கட்டிமாங்கோடு, மகாதேவர்

திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின்  கன்னியாகுமரி மாவட்டத்தின் குருந்தன்கோடு வட்டத்தில் அமைந்துள்ளது.

இறைவன் : மகாதேவர் 

தல விருட்சம் : மாமரம்  

தல சிறப்புகள் : இறைவன் இங்கு சுயம்பாக உள்ளார்.

தல வரலாறு  : 1956ம் ஆண்டு மொழிவழி பிரிவினையில் திருவதாகுர் மன்னரால் மஹாதேவர் கோவில் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்ட கோவிலில் இக்கோவில் ஒன்றாகும். பஞ்சபாண்டவர்கள் மேற்கு மலை தொடர்ச்சி வழியாக பெரும்காடு வழியாக பஞ்சவன் காடு வந்தடைந்தனர்.பாண்டவர்கள் பல யாகங்கள் செய்து இங்கு வாழ்ந்து வந்தனர். இக்கட்டில் பயணத்தை தொடர்ந்த போது மாமரத்தின் நெட்டுகண்ட மரத்தில் இருந்த மாம்பழத்தை அருஜுனன் அம்பினால் எய்திவிட்டான். சோதிட வல்லுனரான சகாதேவன் பதறினான். அருஜுனனை பார்த்து தாங்கள் பிழை செய்து விட்டீர்கள் இக்கனி ஒரு மகா முனிவர்கு சொந்தமானது.இன்று சித்திரை மாதம் முதல் நாள். முனிவர் பக்கத்தில் உள்ள சுனை நீரில் நீராடி வ்ருடத்திற்கு ஒருமுறை இந்த கனியை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வார். விழுந்த கனியை கண்டால் நம்மை சபித்து விடுவார். எனவே கிருஷ்ணரை வரவைத்து அவரிடம் ஆலோசனை செய்யலாம் என முடிவு செய்தனர்.ஸ்ரீகிருஷ்ணா தரிசனம் கொடுத்து ஒவ்வொருவரும் தங்கள் மனதில் மறைத்து வைக்கும் அனைத்தையும் வெளிப்படுத்தி மனதை தூய்மை படுத்தினால் இக்கனி மீண்டும் கிடைக்கும் என்றார். ஐவரும் தங்கள் மனதில் இருந்ததை வெளிப்படுத்தியதில் மாங்கனி தரையில் இருந்து எழும்பி நின்றதை தவிர நெட்டோடு சேரவில்லை. பாஞ்சாலி வெளிப்படுத்தியதும் கனியானது சேர்ந்தது. முனிவர் கையில் பழமானது விழ இறைவனுக்கு படைத்து தானும் உண்டு அனைவர்க்கும் பிரசாதமாக கொடுத்து விட்டு தியானம் மேற்கொண்டார். ஒருவருடமாக பஞ்ச பாண்டவர்கள் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து முனி பிரான் வணக்கும் லிங்கத்திற்கு அருகே வைத்து வழிபட்டனர். தனி தனியாக இருந்த சிவலிங்கம் தற்போது ஒன்றாக வைத்து வழிபட்டு வருகின்றனர்.

சோமவார வழிபாடு, சிவராத்திரி, திருவாதிரை, சித்திரை மாதம் அன்று மாங்கனி அளிக்கும் விழா சிறப்பாக இங்கு கொண்டாடப்படுகிறது.

காலை 6.00 முதல் பகல் 9.00 மணி, மாலை 5.00 முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருவனந்தபுரம்

அருகிலுள்ள ரயில் நிலையம் : கன்னியாகுமரி, நாகர்கோவில் 

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×