திருச்சுனை 





	


	



























	




 




	








 




5:36:15 PM         Saturday, May 02, 2026

திருச்சுனை

திருச்சுனை
திருச்சுனை திருச்சுனை திருச்சுனை திருச்சுனை திருச்சுனை திருச்சுனை திருச்சுனை
Product Code: திருச்சுனை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                  திருச்சுனை, அகத்தீஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில்  திருச்சி நெடுஞ்சாலையில், மேலூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.

இறைவன் : அகத்தீஸ்வரர்

இறைவி  :  பாடகவள்ளி

தல தீர்த்தம்  :   சுனை

தல சிறப்புகள் :  அகத்தியர் பாறையில் சுனை நீரை தெளித்து, பாறை நெகிழ்வாக மாறியது. பின், பாறையையே சிவலிங்கமாக பிடித்து பூஜைகள் செய்து வழிபட்டார்.

தல வரலாறு : கைலாயத்தில் சிவ,பார்வதி திருமணம் நடந்தபோது, தேவர்களும், மகரிஷிகளும் அங்கு சென்றனர். இதனால், வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. எனவே, சிவன் அகத்தியரை தெற்கே பொதிகை மலை நோக்கி அனுப்பினார். தென்திசைக்கு கிளம்பிய அகத்தியர் தான் மட்டும் சிவன் திருமணத்தை காணாமல் செல்வதை எண்ணி வருந்தினார். எனவே சிவன், அகத்தியர் செல்லும் வழியில் எவ்விடத்தில் திருமணக்காட்சி காண விரும்புகிறாரோ, அவ்விடங்களில் தான் மணக்கோலத்தில் காட்சி தரும்படியான வரம் கொடுத்தார். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் பல தலங்களில் சிவனின் திருமணக்காட்சியை தரிசித்தார். அவர் இத்தலம் வழியாக வந்தபோது, இந்த குன்றில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது அவர் சிவதிருமண தரிசனம் பெற வேண்டும் என எண்ணினார். சிவனை தரிசிக்கும் முன்பு நீராட விரும்பினார். அந்த நேரத்திலேயே, அதிசயமாக பாறையில் ஊற்று பெருகியது. தீர்த்தத்தில் நீராடிய அகத்தியர், சிவனை வழிபட அருகில் லிங்கம் தேடினார். ஆனால், லிங்கம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, பாறையில் சுனை நீரை தெளித்தார். தீர்த்தம் தெளித்ததும், பாறை நெகிழ்வாக மாறியது. பின், பாறையையே சிவலிங்கமாக பிடித்து பூஜைகள் செய்து வழிபட்டார் அகத்தியர். அப்போது இக்குன்றுக்கு எதிரேயுள்ள மற்றொரு மலையில் சிவன், பார்வதியுடன் திருமணக் கோலத்தில் காட்சியளித்தார். அகத்தியருக்கு காட்சி தந்தவர் என்பதால் சுவாமி, “அகத்தீஸ்வரர்’ எனவும் பெயர் பெற்றார்.

கோவில் அமைப்பு : அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கியும், பாடகவள்ளி அம்பாள் சுவாமிக்கு இடதுபுறம் தனி சன்னதியில் தெற்கு நோக்கியும் அருளுகின்றனர். பொதுவாக குன்றின் மீது முருகன்தான் காட்சி தருவார். ஆனால் இங்கு சிவன் காட்சி கொடுக்கிறார். சிவன், அகத்தியருக்கு பிரான்மலை என்னும் மலையில் திருமணக்காட்சி கொடுத்தார். இம்மலையிலும் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. கோஷ்டத்தில் சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் துர்க்கை ஆகியோர் காட்சியளிக்கின்றனர். பிரகாரத்தில் நால்வர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சன்னதிகள் இருக்கிறது. இங்கு வேண்டிக்கொள்ள மனக்குழப்பங்கள் நீங்கி, அமைதி கிடைக்கும். சிவன் சன்னதிக்கு பின்புறத்தில் சுனை தீர்த்தம் இருக்கிறது. மிகவும் விசேஷமான இந்த தீர்த்தம் எப்போதும் வற்றுவதில்லை என்பது கலியுக அதிசயம். சுனை தீர்த்தம் தெளித்து சிவலிங்கம் உண்டாக்கப்பட்டதால் இத்தலம் தீர்த்தத்தின் பெயராலேயே, “திருச்சுனை’ என்று அழைக்கப்படுகிறது.

அகத்தியர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். பொதுவாக கோயில்களில் நுழைவு வாசலின் வலப்புறத்தில் சூரியன் தனியாகத்தான் இருப்பார். அரிதாக சில தலங்களில் நவக்கிரக மண்டபத்தில் மனைவியருடன் இருப்பார். ஆனால், இங்கு நுழைவு வாசல் அருகில் உஷாவுடன் சேர்ந்து காட்சியளிக்கிறார். உடன் பிரத்யூஷா இல்லை. இந்த அமைப்பை காண்பது அபூர்வம். சிவன், திருமணக்காட்சி தந்த தலமென்பதால் இக்கோயிலில் அதிகளவில் திருமணங்கள் நடத்தப்படுகிறது. பக்தர்களின் மனக்குழப்பங்களை நீக்கி அருள்கிறார் அகத்தீஸ்வரர். திருமணக்கோலம் கண்ட தலம் ஆதலால் திருச்சுனை கிராமத்தை சுற்றியுள்ள  கிராமத்தினரும் இக்கோயிலில் தான் திருமணம் செய்கின்றனர். 

காலை 8.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணிவரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள  ரயில் நிலையம்   : மதுரை

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×