விராதனூர் 





	


	



























	




 




	








 




1:33:56 AM         Friday, April 17, 2026

விராதனூர்

விராதனூர்
விராதனூர் விராதனூர் விராதனூர் விராதனூர் விராதனூர் விராதனூர் விராதனூர் விராதனூர்
Product Code: விராதனூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                  விரதானூர், அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை  மாவட்டத்தில் விரதானூர் எனும் கிராமத்தில் உள்ளது. 

இறைவன் : அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்

தல சிறப்புகள் :  மூலஸ்தானத்தில் சிவன், பார்வதி, விஷ்ணு மூவரையும் ஒன்றாக தரிசிக்கலாம்.

தல வரலாறு :  750 வருடங்களுக்கு முன், உத்திரகோசமங்கை என்ற ஊரிலிருந்து இரு குடும்பத்தினர்,தங்கள் குலதெய்வமான அழகர்கோவில் பெருமாளுக்கு நேர்த்திக் கடன் செலுத்த வந்தனர். வழியில் விராதனூரில் இளைப்பாறினர். தங்கள் குழந்தையை அங்கிருந்த ஆலமரத்தில் தொட்டில் கட்டி உறங்க வைத்தனர். பெரியவர்களும் உறங்கி விட்டனர். விழித்த போது தொட்டிலில் குழந்தையைக் காணவில்லை. மரத்தின் மீது அந்த குழந்தை அமர்ந்திருந்தது. இதைக்கண்ட பெற்றோர் கண்ணீர் விட்டு, “இறைவா! குழந்தையை காப்பாற்று” என அழுதனர். அப்போது இறைவன் அந்த ஊரில் தனக்கு கோயில் அமைத்து வழிபடும்படி அசரீரியாக கூறினார்.

இறைவனின் கட்டளைப்படி அவர்களும் ரிஷபாரூடர் சிலை வைத்து, கோயில் கட்டி வழிபாடு செய்தார்கள். குழந்தையை காணாமல் அழுத கண்ணீரை போக்கியதால், இறைவனுக்கு “அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்” என்ற திருநாமம் சூட்டப்பட்டது.
பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ரிஷபாரூட மூர்த்தி உப மூர்த்தியாகத்தான் இருப்பார். ஆனால், மதுரை அருகே உள்ள விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோயிலில் ரிஷபாரூடர் மூலவராக அருள்பாலிக்கிறார்.பிரதோஷ காலங்களில் மூலவரையே ரிஷபாரூடராக வழிபடலாம் என்பது இக்கோயிலின் சிறப்பு.

அசுரர்கள் தொல்லையினால் தேவர்கள் கயிலாயம் சென்று தங்களை காப்பாற்ற சிவனிடம் முறையிட்டனர். சிவன் தேவர்களால் செய்யப்பட்ட தேரில் ஏறி அசுரர்களுடன் போருக்குப் புறப்பட்டார்.தேரின் அச்சு முறிந்து விட்டது. சிவனிடம் கொண்ட அன்பின் காரணமாக திருமால் காளை உருவம் கொண்டு சிவனை ஏற்றிச் சென்றார். இதன் பின் சிவனுக்கு “ரிஷபாரூடர்” என்ற திருநாமம் உண்டாயிற்று. திருமால் இங்கு இடபவாகனமாக இருப்பதால் சிவனையும், சக்தியையும், பெருமாளையும் ஒரே கருவறையில் தரிசிக்கலாம். கோயிலின் வாசல் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. பெரும்பாலும் சிவாலயங்களில் மையப்பகுதியில் தான் மூலவர் சன்னதி இருக்கும். ஆனால் இங்கு வட மேற்கு வாயு மூலையில் அமைந்துள்ளது. தனி மண்ட பத்தில் நந்தி, சன்னதியின் வலப்புறம் பத்ரகாளி,இடப்புறம் வீரபத்திரர், அர்த்தமண்டபத்தில் விநாயகர், முருகன் அருள்பாலிக்கிறார்கள். தென் கிழக்கு அக்னி மூலையில் முத்துக்கருப்பண்ண சாமி, ராக்காயி, சப்பாணி, காவல் கருப்பு, முனியாண்டி போன்ற கிராம தேவதைகளுக்கு சன்னதி உள்ளது.

மகாசிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, மனம் வலிமை பெற இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

காலை 7.00 மணி முதல் பகல் 8.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள  ரயில் நிலையம்   : மதுரை

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×