திடியன் மலை





	


	



























	




 




	








 




2:25:24 AM         Saturday, May 02, 2026

திடியன் மலை

திடியன் மலை
திடியன் மலை திடியன் மலை திடியன் மலை திடியன் மலை திடியன் மலை திடியன் மலை
Product Code: திடியன் மலை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                               திடியன் மலை, கைலாசநாதர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை  மாவட்டத்தில் மதுரையிலிருந்து  தேனீ பாதையில் 31 கி.மீ தொலைவில் உள்ளது. மதுரையிலிருந்து 33 கி.மீ  தொலைவிலும், உசிலம்பட்டியிலிருந்து 15 கி.மீ  தொலைவில் இக்கோயில் உள்ளது. மதுரை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளது.

இறைவன் : கைலாசநாதர்

உற்சவர்    :    நடராஜர்

இறைவி  :  பெரியநாயகி

தல தீர்த்தம்  :  பொற்றாமரைக்குளம்

தல விருட்சம் : நெய்கொட்டான் 

தல சிறப்புகள் :  தமிழகத்தில் எங்குமே இல்லாதபடி, இங்கு மட்டுமே காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட தட்சிணாமூர்த்தி பதினான்கு சித்தர்களுடன். நந்தியின் மீது அமர்ந்த நிலையில் இரண்டரை அடி உயரத்தில் வீற்றிருந்து காட்சி தருகிறார். மிகவும் அபூர்வமான அனைத்து நட்சத்திரங்களுக்கும் பொருந்தக்கூடிய ஐந்து மரங்களில் ஒன்றான நெய்கொட்டான் மரத்தினை தலவிருட்சமாகக் கொண்ட திருத்தலம் இதுவாகும். இங்கு இறைவன் புஷ்பகவிமானத்தின் கீழ் அருள்புரிகிறார். இத்தல விநாயகர் முக்குறுணி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார். இங்கு இறைவனுக்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.

தல வரலாறு : இராவணனின் கொடூர ஆட்சிக்கு முடிவு கட்டிய இராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு அசுவமேத யாகம் செய்தார். யாகத்தின் போது, அவரது பட்டத்துக் குதிரை செல்லும் வழியில் எங்கெல்லாம் ஒய்வு எடுக்கிறதோ அங்கெல்லாம் ஒர் காசிலிங்கம் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டது. அவ்வாறு ஒர் நாள் அவரது பட்டத்துக் குதிரை தற்போது கோயில் அமைந்திருக்கும் பகுதி்க்கு அருகே உள்ள மலையின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள ஒர் பொற்றாமரைக் குளத்தின் கரையில் அமர்ந்து ஓய்வெடுத்தது. ஆகவே அவ்விடத்தில் காசிலிங்கம் வைத்து பிரதிஷ்டைை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பின்னர் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் காசிலிங்கம் பிரதி்ஷ்டை செய்யப்பட்ட இடத்தில் தினியே கோயிலைக்கட்டி வழிபாடு நடத்தியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. 

கலியுகத்தில் உள்ள ஞானகுரு தலங்களில் முதன்மை பெற்று சிறப்புடன் திகழும் தலம்.அசேர கலசங்களால் தோற்றுவிக்கப்பட்டு மூன்று கோண வடிவில் உள்ள திடியன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இத்தலம். இம்மலையினைச் சுற்றி அனைத்து தெய்வங்களும் வீற்றுள்ளதாக நம்பப்படுகிறது. அகத்தியர் தென்திசை நோக்கிச் சென்ற போது, அவரால் பூஜிக்கப்பட்ட தலம். திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல இயலாதவர்கள், இங்குள்ள கைலாசநாதரை பூஜித்துவிட்டு, திடியன் மலையினைச் சுற்றி வர, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் எம்பெருமானை வணங்கிய பலனை அடையலாம் என்பதால் இத்தலம் ‘தென் திருவண்ணாமலை’ என்றும் அழைக்கப்படுகிறது. வேதமந்திரங்களைத் தவறாக உச்சரிப்பதால் ஏற்படும் வாய்வராமை, உடல் தடித்து அவதிப்படுபவர்கள், திக்குவாய் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி பொய் பேசுபவர்கள், நாக்கு பிரள்வதில் பிரச்னை உள்ளவர்கள், இங்கு வந்து பொற்றாமரைக் குளத்தில் நீராடிக் கைலாசநாதரை வணங்கி, அருகில் உள்ள பேச்சாயி அம்மன் கோயிலில் பூஜை செய்து விட்டு,அக்கோயிலில் தரப்படும் கூழாங்கல்லினை வாயில் போட்டுக்கொண்டு திடியன் மலையினைச் சுற்றி வர, குரல் பிரச்சனைகள் தீர்ந்து, உடல் தடிமனும் குறைகிறது என நம்பப்படுகிறது.

இங்குள்ள தலவிருட்சம் நெய்கொட்டா மரத்தின் கீழ் மணலைப்பரப்பி அதன் மீது ‘தியான பூமி’ என வலது மோதிர விரலால் எழுதி, கம்பளி, பாய் அல்லது மெல்லிய துணியின் மீது அமர்ந்து,மனம் ஒருங்கிணைத்து தியானம் செய்தால் கர்மவினைகள் நீங்கும். உடல் தடித்த தடியர்கள் முன்பு இங்கு அதிகமாக வந்ததால் இப்பகுதி ‘தடியன் மலை’ என அழைக்கப்பட்டு பின் அதுவே மருவி ‘திடியன் மலை’ என வழங்கப்படுவதாகவும், பொற்றாமரைக்குளத்தின் கரையில் காசிலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட தகவல் அறிந்த பொது மக்களும், அந்தணர்களும் இப்பகுதியில் திடீர் எனக்கூடி, அங்கு தொடர் பூஜைகள் நடத்தத்தொடங்கியதால் ‘திடீர்மலை,திடியன் மலை‘ என மருவியதாகவும் ஊரின் பெயர்க்காரணங்கள் குறித்து இருவேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
இங்கு இறைவன் புஷ்பகவிமாத்தின் கீழ் அருள்புரிகிறார். இத்தல விநாயகர் முக்குறுணி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார். இங்கு இறைவனுக்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.

தினமும் இருகால பூஜைகளுடன், மாதந்தோறும் நடைபெறும் விசேஷபூஜைகள், பவுர்ணமி தினத்தில் கிரிவலம், கார்த்திகையில் மகாதீபம், சிவராத்திரி, நவராத்திரி, தைப்பூசம்,குருப்பெயர்ச்சி, மாசிமகம் ஆகிய தினங்களில் திருவிழா நாட்களாக கொண்டாடப்படுகிறது.
 

காலை 7.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள  ரயில் நிலையம்   : மதுரை

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×