சோழவந்தான், ஆதிவாலகுருநாதசுவாமி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது.
இறைவன் : ஆதிவாலகுருநாதசுவாமி
உற்சவர் : அங்காள ஈஸ்வரி
இறைவி : அங்காள ஈஸ்வரி
தல விருட்சம் : வில்வம், நாகலிங்க மரம்
தல சிறப்புகள் : வாலகுருநாத சுவாமியும், அம்மனும் ஒரே மூலஸ்தானத்தில் இருப்பது சிறப்பாகும்.
500 ஆண்டுகளுக்கு முன்பு வைகை ஆற்றில் வெள்ளம் ஓடியது. அதில் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. மிதந்து வந்த பெட்டியை சில சமூகத்தினர் தங்களுடையது என்று உரிமை கொண்டாடினர். மீன் பிடித்து வந்த சிலர் தற்போது கோவில் இருக்கும் இடத்தில் அந்த பெட்டியை வைத்து விட்டனர்.பெட்டியை திறந்து பார்த்த போது 21 செம்பு அம்மன் சிலைகள் இருந்தது. அது முதல் வழிபாடு துவங்கியது. பெரியாண்டவர், விநாயகர், வீரபத்திரர், நந்திஸ்வரர், மாயாண்டி, பேச்சியம்மன், சப்பாணி, பெரிய கருப்பசாமி, மதுரை வீரன், சக்கிலி கருப்பன், ராக்காயி அம்மாள், வீராயி, கொங்கையா, பாதாளம்மாள் ஆகியோர் சன்னதிகள் உள்ளது.
மகா சிவாரத்தியன்று கிடா வெட்டுதல் முடி காணிக்கை, அன்னதானம் செய்து வழிபடுகின்றனர்.திருமண தடை நீங்க பிராத்தனை செய்கின்றனர். ஆடிவெள்ளிக்கிழமை, வரலட்சமி விரதம் அன்று விளக்கு பூஜை , அம்மாவாசை, பௌர்ணமி, திருக்கார்த்திகை, தை பொங்கல், நவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
காலை 6.30 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை