திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி





	


	



























	




 




	








 




7:34:47 PM         Wednesday, April 29, 2026

திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி

திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி
திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி
Product Code: திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                  திருப்பரங்குன்றம்,  குருநாத சுவாமி

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை  மாவட்டத்தில் மதுரை இரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.

இறைவன் :  குருநாத சுவாமி

இறைவி  :  அங்காள பரமேஸ்வரி

தல தீர்த்தம்  : திருக்குளம்

தல சிறப்புகள் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்.கோயிலில் சிவராத்திரி அன்று சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். மஹா சிவராத்திரிக்கு இரண்டு நாட்களுக்கு முன், கப்பரை பூஜை நடக்கும்.

கோவில் அமைப்பு :  வெளி மண்டபத்தில் விநாயகர், முருகன், வளாகத்தில் பரிவார தெய்வங்களான அக்னி வீரபத்திர சுவாமி, இருளப்ப சுவாமி, மாயாண்டி சுவாமி, சங்கி கருப்பணசாமி, சப்பாணி சுவாமி, பேச்சியம்மன், ராக்காயி அம்மன், பெரிய கருப்பண சாமி, சப்த கன்னிமார்கள் தனித் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். மற்ற பரிவார தெய்வங்களான கருப்பண சுவாமி, சோணை சுவாமி இருவரும், சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும், முனியாண்டி சுவாமி திருக்குளம் அருகேயும் எழுந்தருளியுள்ளனர்.

நினைத்த காரியங்கள் கைகூட இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். மஹா சிவராத்திரி அபிஷேக, ஆராதனைகள் முடிந்து, திருக்குளம் அருகேயுள்ள முனியாண்டி கோயிலுக்கு சென்று அங்கு சேவல் காவு கொடுக்கப்பட்டு, அசைவம் படைக்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அசைவம் படைக்கப்படும். மஹா சிவராத்திரியன்று, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து அங்காள பரமேஸ்வரி புறப்பாடாகி, குருநாத சுவாமி கோயிலில் எழுந்தருள்வார். சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, அதிரசம், தோசை, பயறு வகைகள் படைக்கப்படும். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து சிவாச்சாரியார்கள் வந்து பூஜை நடத்துவர். சிவராத்திரியிலிருந்து 3 அல்லது 5 அல்லது 7வது நாளில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். அன்றையதினம் பூசாரி குடும்பத்தினர் மூங்கிலில் கத்தி, வில், அம்பு தயாரித்து அதில் வேப்பிலை சுற்றி, தோளில் கட்டி சோறு சுமந்து, ஆஞ்சநேயர் கோயில் அருகேயுள்ள காட்டுப்பேச்சியம்மன் கோயிலுக்கு சென்று வேட்டை சாத்துதல் நிகழ்ச்சியும், இரவு, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து கொண்டுவரப்படும் பூ சப்பரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் புறப்பாடாகி பாரி வேட்டை நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் சம்பா சாதம், உளுந்த வடை படையல் முடிந்து, அங்காள பரமேஸ்வரி அம்மன், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருள்வார்.இந்த பாரிவேட்டை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
 

காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள  ரயில் நிலையம்   : மதுரை

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  உண்டு

உணவு வசதி : உண்டு
 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×