கைவிளாஞ்சேரி, காசி விஸ்வநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது.
இறைவன் : காசி விஸ்வநாதர்
இறைவி : விசாலாட்சி
தல சிறப்புகள் : இந்திராணியை கைவிடாது காப்பாற்றிய இடமாதலால் கைவிடேலப்பர் என்று சாஸ்தா அழைக்கப்படுகிறார். கருவறை உள்ளே கைவிடேயப்பர் பூரண, புஷ்கலையுடன் ஒரு காலை தொங்கவிட்டும், மறு காலை குத்துகாலிட்டும் அமர்ந்துள்ளார். சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்த பின்னரே தங்களது பயணத்தைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கோவில் அமைப்பு : மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ள கோயில் முகப்பில் மூன்று நிலையில் ராஜ கோபுரம் உள்ளது. சிவன் கோயிலாக இருந்தாலும் சாஸ்தாவும் இங்கு காணப்படுகிறார். கைவிடேயப்பர் பூரண, புஷ்கலையுடன் உள்ளார். மூலவர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். திருச்சுற்றில் செல்வ விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கமல விநாயகர், துர்க்கையம்மன் ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் காணப்படுகின்றன. தேவகோஷ்டத்தில் தென் புறத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார்.
இந்த ஆலயத்தின் எதிரே இன்னொரு காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம். உள்ளே புகுமுன் வலதுபுறம் ஆஞ்சநேயரும், இடது புறம் விநாயகர் மற்றும் ராகு-கேதுவும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே நீண்ட பிரகாரத்தில் நந்தியம்பெருமான் தனி மண்டபத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார். அடுத்துள்ள மண்டபத்தின் வலது புறம் காமாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழை வாசலின் இடது புறம் கல்யாண விநாயகர் திருமேனி அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்திற்கு முன், கன்னிப் பெண்கள் இவரை வணங்குவதால் அவர்கள் திருமணம் விரைந்து நடைந்தேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். கருவறையில் இறைவன் காசி விஸ்வநாதர் அருள்பாலிக்கிறார்.
இங்கு பிரதோஷ பூஜைகளும், கார்த்திகை, சதுர்த்தி பூஜைகளும், சிறப்பாக நடைபெறுகின்றன. நவராத்திரி, சிவராத்திரி, மார்ச் மாதம் கடைசி ஞாயிறு அன்று கைவிடேயப்பருக்கு ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
காலை 7.00 மணி முதல் பகல் 8.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை