சீர்காழி





	


	



























	




 




	








 




8:09:31 PM         Friday, May 01, 2026

சீர்காழி

சீர்காழி
சீர்காழி சீர்காழி சீர்காழி சீர்காழி சீர்காழி சீர்காழி சீர்காழி சீர்காழி
Product Code: சீர்காழி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                  சீர்காழி, விடங்கேசுவரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் தில்லைவிடங்கன் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

இறைவன் : விடங்கேசுவரர்

இறைவி : தில்லைநாயகி

தல சிறப்புகள் : விநாயகர் மேற்கு நோக்கி உள்ளார் என்பது சிறப்பு. சந்திரன் இறைவனை பூஜித்து அருள் பெற்ற தலம். இறைவன் பெயரான விடகேசுவரரும், இறைவி பெயரான தில்லைநாயகியும் இணைந்து தில்லைவிடங்கன் என்று அழைக்கப்படுவது இவ்வூரின் சிறப்பாகும்.

கோவில் அமைப்பு :  கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. முகப்பைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடமும், நந்தியும் காணப்படுகின்றன. மகாமண்டபத்தில் சந்திரன் உள்ளார். திருச்சுற்றில் மேற்கில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் உள்ளனர். தேவக்கோட்டத்தில் தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், வட திசையில் துர்க்கையும் உள்ளனர்.அருகில் சண்டிகேசுவரர் உள்ளார். கோயிலின் அருகே குளம் காணப்படுகிறது. கோயிலில் உள்ள விநாயகர் மேற்கு நோக்கிய நிலையில் காணப்படுகிறார். கோவிலின் எதிரில் குளம் உள்ளது.உள்பிரகாரத்தில் நந்தி பலிபீடம் உள்ளது. மகா மண்டபத்தின் கீழ் சந்திரன் உள்ளார்.இறைவன் லிங்க திருமேனியாக உள்ளார்.வலது புறம் தில்லை நாயகி சன்னதி உள்ளது.

திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்ள மிக விரைவில் திருமணம் நடைபெறுகிறது. மணமான பெண்கள் தனது கணவருடன் இங்கு வந்து அன்னைக்கு தாலி வாங்கி அணிவிக்கின்றனர்.

காலை 10.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை  கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி, மதுரை 

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  சீர்காழி

தங்கும் வசதி   :  இல்லை 

பேருந்து  வசதி   : உண்டு

உணவு வசதி :  இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×