திருவல்லிக்கேணி - தீர்த்தபாலீஸ்வரர் 





	


	



























	




 




	








 




9:12:29 PM         Wednesday, April 29, 2026

திருவல்லிக்கேணி - தீர்த்தபாலீஸ்வரர்

திருவல்லிக்கேணி - தீர்த்தபாலீஸ்வரர்
திருவல்லிக்கேணி - தீர்த்தபாலீஸ்வரர் திருவல்லிக்கேணி - தீர்த்தபாலீஸ்வரர் திருவல்லிக்கேணி - தீர்த்தபாலீஸ்வரர் திருவல்லிக்கேணி - தீர்த்தபாலீஸ்வரர் திருவல்லிக்கேணி - தீர்த்தபாலீஸ்வரர் திருவல்லிக்கேணி - தீர்த்தபாலீஸ்வரர் திருவல்லிக்கேணி - தீர்த்தபாலீஸ்வரர்
Product Code: திருவல்லிக்கேணி - தீர்த்தபாலீஸ்வரர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                                              திருவல்லிக்கேணி, தீர்த்தபாலீஸ்வரர் 
 
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் திருவல்லிக்கேணி நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. 
 
இறைவன் : தீர்த்தபாலீஸ்வரர், அகத்தீஸ்வரர், சர்வேஸ்வரர், நோய்தீர்த்தபிரான்
 
இறைவி :  மகாதிரிபுரசுந்தரி
 
தல விருட்சம் : வன்னி
 
தல தீர்த்தம் :  கடல்தீர்த்தம்
 
தலச் சிறப்புகள் :  மாசிமாதம் மகாசிவராத்திரி தினத்தன்று மட்டும் சூரியன் தனது ஒளியை சுவாமியின் மீது பரப்பி பூஜைசெய்வது சிறப்பு. இத்தலத்து சிவனும், அம்பாளும் இரண்டடி உயரத்தில் மிகவும் சிறிய உருவமாக உள்ளனர். சுவாமி சற்றே இடப்புறம் சாய்ந்தபடி, தோற்றத்தில் ஒரு வெள்ளரிப்பழம் போல காட்சி தருகிறார். அகத்தியர் குள்ள முனிவர் என்பதால், அவர் தன்னை மலர்களால் பூஜை செய்யும் போது, தன் உயரத்தையும் குறைத்துக் கொண்டாராம் சிவன். அதன் காரணமாகவே அவர் உயரம் குறைவாக இருக்கிறார். இவருக்கு கடல்தீர்த்தத்தை கொண்டே பிரதான பூஜைகள் செய்யப்படுகிறது.
 
ஆண்டுதோறும் மாசிமகத்தன்று “தீர்த்தவாரி திருவிழா’ நடக்கிறது. இத்தினத்தில், சுவாமி கடலுக்கு சென்று நீராடிவிட்டு திரும்புகிறார். சென்னையிலுள்ள சிவாலயங்களில் இவரே, முதலில் கடலில் தீர்த்தநீராட வருகிறார்.  தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில். பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. இந்த கோயில் இறைவனை திங்கள் கிழமைகளில் வணங்கி வர தண்ணீர் பஞ்சமே ஏற்படாது.
 
தல வரலாறு : கயிலையில் சிவன் திருமணம் நடந்தபோது, உலகை சமநிலைப்படுத்த அகத்தியர் பொதிகை மலைக்கு சென்றார். வழியில் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. வன்னி மரத்தடியில் இளைப்பாறினால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. எனவே, இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தடியில் அமர்ந்து சிவபெருமானைத் தியானித்தார். அவருக்கு காட்சிதந்த சிவன், வங்கப்பெருங்கடலில் நீராடி அதன் தீர்த்தத்தால் தன்னை அபிஷேகம் செய்து வணங்கிட நோய் தீரும் என்றார். அகத்தியர் கடலில் நீராடி, கமண்டலத்தில் நீர் எடுத்து, சுவாமிக்கு பூஜை செய்து நோய் நீங்கப்பெற்றார். கடல்தீர்த்தத்தால் தன்னை பூஜை செய்யும்படி கூறிய சிவன் என்பதால், இவர் “தீர்த்த பாலீஸ்வரர்’ என்றழைக்கப் படுகிறார். அகத்தியரின் நோயை தீர்த்ததாலும் இப்பெயரில் அழைக்கப்படுவதாக கூறப்படுவதுண்டு.
கோயில் அமைப்பு : இங்குள்ள பிரகாரத்தில் சிதம்பர விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார். இவரைச் சுற்றிலும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் வகுப்பை எழுதி வைத்துள்ளனர். இவரை “பாஸாக்கும் கணபதி’ என்று செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.மகாமண்டபத்தில் லட்சுமியை மடியில் தாங்கியபடி நாராயணன், சூரியன் ஆகியோர் சுவாமியை நோக்கியபடி உள்ளனர். தெட்சிணாமூர்த்திக்கு எதிரே மகுடம்பூ மரமும், விநாயகருக்கு எதிரே வன்னி மரமும் இருக்கிறது. ஞானம் தரும் இவ்விருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்தால் மாணவர்கள் கல்வியில் சிறப்பர் என்பது மற்றொரு நம்பிக்கை. சுற்றுப்பிரகாரத்தில் அரச மரத்தின் கீழ் உள்ள சிவன் மற்றும் நாகருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
 
திருமணதோஷம், புத்திர தோஷம் மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கவும், நோய் இல்லாத வாழ்க்கை அமையவும் இத்தலத்தில் வேண்டலாம். இங்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். மாசியில் தீர்த்தவாரி, மகாசிவராத்திரி, ஆடிப்பூரம்,  தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி,  கார்த்திகை தீபம், போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
 
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
 
அருகிலுள்ள விமானதளம் : சென்னை 
 
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவல்லிக்கேணி 
 
பேருந்து வசதி : உண்டு
 
தங்கும் வசதி : உண்டு
 
உணவு வசதி : உண்டு
Mail this page Printable view
×
×
×
×
×
×
×