நெமிலிச்சேரி





	


	



























	




 




	








 




6:56:27 PM         Wednesday, April 29, 2026

நெமிலிச்சேரி

நெமிலிச்சேரி
நெமிலிச்சேரி நெமிலிச்சேரி நெமிலிச்சேரி நெமிலிச்சேரி நெமிலிச்சேரி நெமிலிச்சேரி நெமிலிச்சேரி நெமிலிச்சேரி நெமிலிச்சேரி
Product Code: நெமிலிச்சேரி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                         நெமிலிச்சேரி, அகத்தீஸ்வரர் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை அருகே இருக்கும் நெமிலிச்சேரி என்கிற ஊரில் அமைந்திருக்கிறது. இங்கு செல்ல சென்னை மாநகரிலிருந்து ஏராளமான பேருந்து மற்றும் வாடகை வண்டிகள் வசதிகள் இருக்கின்றன.

இறைவன்  :  அகத்தீஸ்வரர் 

இறைவி : ஆனந்தவல்லி

தல விருட்சம் : அரச மரம் 

தல தீர்த்தம் : அகத்திய புஷ்கரணி

தலச் சிறப்புகள் : சூரியன், சந்திரன் பைரவருடன் சேர்ந்து இருப்பது தனி சிறப்பு. இக்கோயிலின் இறைவியாகிய ஆனந்தவல்லி தாயார் தெற்கு திசை நோக்கி அபய முத்திரையுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள ஈசன் போகலிங்கமாக இருப்பதால் நமது வாழ்வில் போகங்கள் பெருகச்செய்கிறார். கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்ம, விஷ்ணு துர்கை, கருவறைக்கு இடது புறத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், நல்லவர் சன்னதிகள் உள்ளன. கோவிலுக்கு வெளியே இடதுபுறத்தில் அகத்திய புஷ்கரணி உள்ளது. அதன்கரையில் அரச மரமும், நாக தேவதை, பரமேஸ்வரர், பரமேஸ்வரி அமைந்துள்ளது. 

தல வரலாறு : திருக்கோவில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது.அகத்தியர் பல சிவலிங்கங்களை ஸ்தாபித்து நாடுமுழுவதும் பல சிவன் கோயில்களை உருவாக்கியுள்ளார்.  நெமிலிச்சேரி அகத்தீஸ்வரர் கோயில் வரலாறு மிகவும் பழமையான இக்கோயிலை தமிழகத்தின் பரவலான பகுதிகளை ஆண்ட குலோத்துங்க சோழ மன்னனால் நன்கு சீரமைத்து கட்டப்பட்டது. பிற்காலங்களில் விஜயநகர பேரரசர்கள் சிதிலமடைந்திருந்த இக்கோயிலை தற்போதுள்ள நிலையில் கட்டியமைத்தனர். 

“நெமிலி” என்றால் தெலுங்கு மொழியில் “மயில்” என்று பொருள். “செருவு” என்றால் “கூட்டம்” என்று பொருள் முற்காலங்களில் இப்பகுதிகள் அடர்ந்த காடுகளாக இருந்த போது இங்கு மயில்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததால் “நெமிலி செருவு” என்று பெயர்கொண்ட இவ்வூர் காலப்போக்கில் “நெமிலிச்சேரி” என பெயர்பெற்றது. தமிழ் முனியான அகத்திய முனிவர் லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட கோயில்களில் இருக்கும் இறைவன் அகத்தியர் பெயர் சேர்த்து அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் மூலவரான லிங்கமும் அந்த அகத்திய முனிவர் ஸ்தாபித்தது என்பதால் இங்கிருக்கும் இறைவனும் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். 

நீண்ட நாட்களாக தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் இங்கிருக்கும் சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டால் எப்பேர்ப்பட்ட நோய்களும் சீக்கிரத்தில் குணமாவதை அனுபவத்தில் கண்ட பல பக்தர்கள் கூறுகின்றனர். தங்களின் பிராத்தனை நிறைவேறியவர்கள். இறைவன் மற்றும் இறைவிக்கு வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். பிரதோஷம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், சோமவாரம், மகாசிவராத்திரி, ஆடிப்பூரம்,  தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி,  கார்த்திகை தீபம், போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்னை மத்திய ரயில் நிலையம் 

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×