எழும்பூர்





	


	



























	




 




	








 




4:02:30 PM         Wednesday, April 29, 2026

எழும்பூர்

எழும்பூர்
எழும்பூர் எழும்பூர் எழும்பூர் எழும்பூர் எழும்பூர் எழும்பூர் எழும்பூர் எழும்பூர் எழும்பூர்
Product Code: எழும்பூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                   எழும்பூர், ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான  சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாஸ் பிரகாஷ் (ஹோட்டல் சுதா)  அருகில் ஆராஅமுதன் கார்டன் முதல் தெருவில் உள்ளது.

இறைவன் : அர்த்தநாரீஸ்வரர்

இறைவி : திரிபுரசுந்தரி

தலச் சிறப்புகள் : இக்கோயிலில் அர்தநாரீஸ்வரரை லிங்க மேனியாக அருள்தருகிறார் அவர் 3 1 /2 அடி விட்டம் கொண்ட பெரிய திருமேனியாக காட்சி தருகிறார். இவ் லிங்கம் கயிலை இருந்து கொண்டுவந்ததாக கூறப்படுகிறது ஆதலால் இவரை தரிசிப்பது புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசிப்பதற்கு சமமாகும் . மேற்கு நோக்கி முகம் அர்தநாரீஸ்வர்ருக்கு உள்ள திசையாகும் சிவசக்தி அம்சமான இவரை தரிசித்தால் இம்மை மறுமை இரண்டிலும் விருப்பப்படுகிற வாழ்வை பெறலாம். லிங்கத்தின் பின் புறம் அர்த்தநாரீஸ்வரர் உருவமாக ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறார். திரிபுரசுந்தரி அம்மையார் தெற்கு நோக்கி தனி சன்னதியில் உள்ளார் . மூலவருக்கு வலது புறத்தில் லட்சுமி நாராயணருக்கு தனி சன்னதி உள்ளது. 

தல வரலாறு : இது ஒரு தேவார வைப்பு தலமாகும் , அப்பர் தன் ஆறாம் திருமறையில் இக்கோயிலை பற்றி பாடியுள்ளார் . இக்கோயில் 1000 வருடங்கள் பழமையானது என்று கருதபடுகிறது . தொண்டைமண்டலத்தில் உள்ள 24 கோட்டங்களில் புழல் கோட்டத்திற்க்கு உட்பட்ட நாடுகளில் எழுமூர் ஒன்று, அவ் ஊர் இப்பொது எழும்பூர் என்று அழைக்கப்படுகிறது. இருநூறாண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் வசித்த பெரியவர் ஒருவரின் தோட்டத்துக் குளத்தில் நீர் வற்றியபோது தூர் எடுக்கச் செய்தார். அச்சமயம் இக்கோயில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. உடனே சிலைகள் சுத்தம் செய்யப்பட்டு, அருகில் ஒரு கீற்றுக் கொட்டகை அமைத்து அதில் வைக்கப்பட்டு தினசரி விளக்கேற்றி வழிபாடு செய்து வந்துள்ளனர். சில காலத்திற்குப் பின்னர் கோயில் அமைத்துள்ளனர். நீண்டகாலமாக ஜலத்திலேயே வாசம் செய்ததால் இவருக்கு ஜலகண்டேஸ்வரர் என்றொரு பெயரும் உண்டாம். இவரை வழிபட்டால் சிவனையும், சக்தியையும் சேர்த்து வழிபட்ட பலன் கிடைக்கும் என்பதால் இந்த சிவனை அர்த்தநாரீஸ்வரர் என அழைக்கின்றனர்.

கோவில் அமைப்பு : கிழக்கு நோக்கிய கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைந்தால் மகா மண்டபம், பலிபீடம், நந்தி மண்டபம் அமைந்துள்ளது. கருவறை வெளியே விநாயகரும் சுப்பிரமணியரும் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் அர்த்தநாரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக வழிபடப்படுகிறார். சுவாமியின் கருவறைக்கு வெளியே விநாயகரும், சுப்ரமணியரும் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் அருள்கின்றனர். கருவறை கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் அருள்கின்றனர். சுவாமிக்கு இடதுபுறம், தெற்கு நோக்கி தனிச் சன்னதியில் அம்மன் திரிபுர சுந்தரி காட்சி தருகிறாள். அருகே நவகிரக சன்னதியும் உள்ளது. மூலவருக்கு வலதுபுறம் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சிவனும் பெருமாளும் அருகருகே அமைந்து அருள்பாலிப்பது சிறப்பு. லக்ஷ்மிநாராயணப் பெருமாள் சன்னதிக்கு எதிரே தனிச் சன்னதியில் கருடாழ்வார் சேவை செய்கிறார். .

கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்க, குடும்பச் சிக்கல்கள் விலக, மணப்பேறு, மகப்பேறு அமைய, நோய் நொடி நீங்க, கேட்டதெல்லாம் கிடைக்க என சகல நற்பேறுகளையும் அருளும் பெரும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 

காலை 7.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை, மாலை  5.00 மணி முதல்  8.00 மணி வரை நடை திறந்து இருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : எழும்பூர்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×