வளசரவாக்கம்





	


	



























	




 




	








 




7:52:39 PM         Wednesday, April 29, 2026

வளசரவாக்கம்

வளசரவாக்கம்
வளசரவாக்கம் வளசரவாக்கம் வளசரவாக்கம் வளசரவாக்கம் வளசரவாக்கம் வளசரவாக்கம் வளசரவாக்கம்
Product Code: வளசரவாக்கம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                         வளசரவாக்கம், ஸ்ரீ வேள்வீஸ்வரர் மற்றும் அகத்தீஸ்வரர் 
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை நகரின்  திருவள்ளூர் மாவட்டம், வளசரவாக்கம் வடபழனி போரூர் வழித்தடத்தில் ஆற்காடு சாலையில் வடபழனியிலிருந்து சுமார் 2 ½ கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 
இறைவன்  : அகத்தீஸ்வரர் (ம) வேள்வீஸ்வரர் 
இறைவி  : திரிபுரசுந்தரி
தல தீர்த்தம்  : சுக்ரதீர்த்தம்
தலச் சிறப்புகள் :  இத்திருக்கோவிலில் வடக்கு புறத்தில் வேள்வீஸ்வரர் சன்னதியும், தெற்கு புறத்தில் அகத்தீஸ்வரர் சன்னதியும், இரட்டை பிள்ளை போல் இணையாக அமைந்துள்ளன.  இத்திருகோவிலில் எழுந்தருளியுள்ள மூலவர் அகத்தீஸ்வரர், அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் சுக்ரபகவானால் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட காரணத்தினால் வேள்வீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்திருக்கோவிலில் அம்பாள் திருபுரசுந்தரி என்று அழைக்கப்படுகிறார்.
வேள்வீஸ்வரர் சன்னதியின் கால் பகுதி குமுதபடை மற்றும் பட்டிகைவரை கருங்கல்லால் கட்டப்பட்டது. அதன் மேல் உள்ள சுவர் கொடுங்கை தலை பகுதியில் செங்கலாலும், சுதையாலும் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலின் முன் பெரிய திருக்குளம் ஒன்று அமைந்துள்ளது.  கருணை கண்களாக விளங்கும் அம்பாளை கண்டாலே நம் மனக்கவலை எல்லாம் பறந்து போய்விடும். மேலும் இத்திருக்கோவிலில், அருள்மிகு வினைதீர்த்த விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், அருள்மிகு நடராஜர், அருள்மிகு பைரவர், அருள்மிகு கோதண்டராமர், அருள்மிகு ஆஞ்சநேயர், அருள்மிகு தேவி கருமாரியம்மன் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
கோயிலின் முதன்மையானவர் வேள்வீஸ்வரர் அவர் அருகில் அகத்தியர் பிரதிஷ்டை செய்த அகதீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. வேள்வீஸ்வரனுக்கு பின்புறம் பானுபுரிஸ்வரருக்கு சின்னதாக சன்னதி உள்ளது. அவருக்கு முன்பாக பக்தர்கள் தீபம் ஏற்றி தியானம் செய்கிறார்கள். கோயிலின் உள்ளே கோதண்ட ராமருக்கு தனி சன்னதி மற்றும் ஆஞ்சனேயருக்கு சன்னதி உள்ளது .
தல வரலாறு : இத்திருக்கோவில் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையானது என்று கூறப்படுகிறது. சோழர்களால் கட்டப்பட்ட கோயில் என்று நம்பப்படுகிறது . குலதுங்க சோழன் காலத்து கோயில் என்று கூறுகிறார்கள். சென்னையில் உள்ள முக்கியமான பழமையான சிவன் கோயில்களில் ஒன்று.  ராஜா கோபுரம் மற்றும் கொடி கம்பம் இல்லை , ஆனால் மிக பெரிய இடவசதிகளும் மற்றும் எல்லா விழாக்களும் மிக சிறப்பாக நடைபெறுகிறது . 
பெண்களுக்கு மங்களங்கள் தரும் நாயகராக விளங்குகிறார், வெள்ளிக்கிழமைகலீல் வேள்வீஸ்வரர் சன்னதியில் நெய்விளக்கு ஏற்றி வழிபட, தடைப்பட்ட காரியங்களில் வெற்றி ஏற்பட்டு எண்ணம் ஈடேறும். அகத்திய முனிவர் பூஜித்த அகத்தீஸ்வரரை மனமுருகி வழிபட்டால் மக்களின் உடற்பிணியையும், மனப்பிணியையும் தீர்ப்பார், இவரை வழிபட்டு ஆனந்தம் பெறலாம். மன நோய் மற்றும் வேள்விகளில் ஏற்படும் குறைகளை அகற்றும் வளசரவாக்கம் வேள்வீஸ்வரர் ஆலயம். 
சிவபெருமானை பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். இத்திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு என்பது மிகவும் சிறப்பாக நடைபெறும். பிரதோஷ தினத்தன்று மாலை 3 மணியிலிருந்து மாலை 6 மணி வரை அருள்மிகு வேள்வீஸ்வரர் ,அகத்தீஸ்வரர் அபிஷேகம், ஆராதனை, நந்தி அபிஷேகம், உற்சவர் அலங்காரம் நடைபெறும்.அன்று பக்தர்கள் அனைவரும் ஒன்றாய் கூடி அமர்ந்து, முக்கோடி தேவர்களுக்கும் தலைவணாம், முக்கண் நாயகனாகிய சிவபெருமானை நினைத்து பாடல்கள் பாடி ஈஸ்வரனை ஆனந்த கடலில் ஆழ்த்துவர். 
காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை 
அருகிலுள்ள ரயில் நிலையம் : வடபழனி 
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×