மணிமங்கலம், தர்மேசுவரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னைக்கு அருகில் மணிமங்கலம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. முன்னர் இவ்வூர் வேதமங்கலம் என்றழைக்கப்பட்டது. இது தாம்பரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது.
இறைவன்: தர்மேசுவரர்
இறைவி : வேதாம்பிகை
தல விருட்சம் : சரக்கொன்றை
தல தீர்த்தம் : சிவபுஷ்கரணி
தலச் சிறப்புகள் : இறைவன் சன்னதியும், இறைவி சன்னதியும் தனித்தனியாக உள்ளன. லிங்கத் திருமேனியான மூலவர் சதுர வடிவத்தில் உள்ளார். இறைவி நின்ற நிலையில் உள்ளார். சதுர்வேத விநாயகர், பைரவர், சனீசுவரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், அனுக்கை விநாயகர், சுந்தரர், நாவுக்கரசர், நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளனர். விமானம் கஜபிருஷ்ட அமைப்பைச் சேர்ந்தது. மூலவருக்கு முன்னுள்ள நந்தி அழகாக சிற்ப வேலைப்பாட்டுடன் உள்ளது. இதன் மீது தட்டும்போது வெண்கல ஓசை எழுகிறது. இக்கோயிலில் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் விநாயகரை வழிபட்ட நிலையில் இங்கு ஒரே வரிசையில் நான்கு விநாயகர்கள் உள்ளனர். திருச்சுற்றின் பின் புறம் இரு திசைகளிலும் இரு விநாயகர்கள் உள்ளனர்.
கோயில் அமைப்பு : சோழர் மற்றும் பல்லவர் கால கட்டிட அமைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பொரு காலத்தில் இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவ மன்னர் பல தானதருமங்களைச் செய்தான். அப்போது கோயில் கட்டுவது பற்றியும் சிந்தித்தான். அப்போது சிவன் ஒரு அடியார் வேடத்தில் வந்திருந்து தனக்கு தானம் கேட்க, இறைவனே வந்ததை உணர்ந்து கோயிலைக் கட்டினான். தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இது. சிவன் சன்னதி, அம்பாள் சன்னதிகள் தனித்தனி கோயில் போன்ற அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. இதன் கட்டிடத் தன்மையைப் பார்க்கும் பொழுது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது என்று தொழில்துறையினரால் ஆராய்ந்து கூறப்பட்டது. இந்த 7-8ம் நூற்றாண்டு காலகட்டத்தில் நரசிம்ம பல்லவர் சாணிக்ய இரண்டாம் புலிகேசியுடன் போரிட்டு வென்ற இடமாகச் சொல்லப்படுகிறது. இங்கு செதுக்கிய சிற்பங்கள், மண்டபங்கள், மற்றும் எழுத்துக்கள் பார்த்தால் சோழர்கள் மற்றும் பல்லவர்கள் காலத்து ஆதாரமாகத் தென்படுகிறது. பல புதையுண்ட சிற்பங்களில் ஒன்று கழுத்தை தன் கைகளால் வெட்டிக்கொள்ளும் சிற்பங்கள் காணப்பட்டது.
கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் அமைந்த சன்னதியில் சிவன், சதுர வடிவ ஆவுடையாருடன் காட்சி தருகிறார். இவ்வகையான விமானங்கள், தரையிலிருந்து சன்னதியுடன் சேர்த்துதான் கட்டப்படும். ஆனால், இக்கோயிலில் சன்னதியின் மேல் பகுதி மட்டும் கஜபிருஷ்ட அமைப்பில் கட்டப்பட்டிருப்பது வித்தியாசமான அமைப்பு. இங்கு சுவாமியிடம் வேண்டிக் கொள்ள, தர்மம் செய்யும் எண்ணம் உண்டாகும். அதர்மம் இழைக்கப்பட்டவர்கள் இவரை வழிபட, நீதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாத பவுர்ணமியன்று, இவருக்கு அன்னாபிஷேகம் செய்கின்றனர். மார்கழி திருவாதிரையன்று விசேஷ பூஜை செய்யப்படுகிறது. சிவராத்திரியன்று இரவில் 2008 தீபங்களை ஏற்றி வழிபடுகின்றனர். அம்பாள் வேதநாயகி தனிச்சன்னதியில், சதுர பீடத்தில் நின்றபடி இருக்கிறாள். இவள் வேதங்களின் இருப்பிடமாக இத்தலத்தில் அருளுகிறாள். எனவே இவள் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். பவுர்ணமிதோறும் இவள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். புரட்டாசி மாத பவுர்ணமியன்று இவளது சன்னதியில் “நிறைமணிக்காட்சி’ வைபவம் நடக்கும். அப்போது தானியங்கள், பழம், காய்கறிகள், மலர் போன்றவற்றை சன்னதி முன்மண்டபத்தில் கட்டி அலங்கரிக்கின்றனர். இந்த தரிசனம் கண்டால், பசி, பட்டினி இருக்காது என்பது நம்பிக்கை. ஆடிப்பூரம், நவராத்திரி, ஆடி, தை வெள்ளி, சித்ராபவுர்ணமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜை நடக்கிறது. கல்வியில் சிறக்க இவளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள். கோயில் பிரகாரத்தில் பின்புறம் இரண்டு திசைகளிலும், இரண்டு விநாயகர்கள் இருக்கின்றனர். இதில் ஒருவருக்கு வெண்ணிற வஸ்திரம், மற்றொரு காவி நிறத்தில் வஸ்திரம் அணிவிப்பது சிறப்பு.
தல வரலாறு : முற்காலத்தில் இப்பகுதியை பல்லவ மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். சிவபக்தனான அம்மன்னன், தானதர்மங்கள் செய்வதில் சிறந்தவனாகத் திகழ்ந்தான். அவனுக்கு நீண்ட நாட்களாக, சிவாலயம் எழுப்பி வழிபட வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால், எவ்விடத்தில், எப்படி கோயில் அமைப்பது என அவனுக்குத் தெரியவில்லை. ஒருசமயம் சிவன், அடியார் வேடத்தில் அவனிடம் சென்றார். தான் பரம ஏழை என்றும், தனக்கு ஏதாவது தர்மம் செய்யும்படியும் வேண்டி நின்றார். மன்னன், அவருக்கு தானம் செய்ய முயன்றான். அப்போது அவர், ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு ஒரு சிவன் கோயில் கட்டி தானமாக தரும்படி கேட்டார். மன்னன் வியந்து நின்றான். அப்போது, அடியாராக வந்த சிவன் சுயரூபம் காட்டியருளினார். மகிழ்ந்த மன்னன், சிவன் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் கோயில் எழுப்பினான். சுவாமிக்கு, “தர்மேஸ்வரர்’ என்றே பெயர் சூட்டினான்.
ஆடிப்பூரம், நவராத்தி, சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பிரதோஷம், ஆடிப்பூரம், நவராத்திரி, ஆடி, தை வெள்ளி, சித்ரா பவுர்ணமி மற்றும் முக்கிய விரத காலங்களில் நாட்களில் விசேஷ பூஜை நடைபெறுகிறது. வேதங்கள் உபநிதங்கள் அறிவு பெற, முக்கியமாக கல்வியில் சிறக்க இறைவன் இறைவிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, சுத்த பசு நெய் தீபம் ஏற்றி வேண்டி அவர்கள் அருளைப் பெறலாம். தர்மம் தழைக்கவும், நீதி கிடைக்கவும் சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறக்க அம்பிகை, சதுர்வேத விநயாகரை வழிபடுகிறார்கள்இங்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 6.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : தாம்பரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை