ஊத்துக்காடு, மகாலிங்கேசுவரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் ஊத்துக்காடு மற்றும் வாலாஜாபாத்திலிருந்து 5 கி.மி. தொலைவில் இவ்வூரை ஆட்டோ அல்லது மினி பேருந்து மூலம் அடையலாம்.
இறைவன்: மகாலிங்கேசுவரர்
இறைவி : பெரியநாயகி
தலச் சிறப்புகள் : சிவபெருமான் பாண லிங்க வடிவில் இருப்பது சிறப்பு. காஞ்சி ஸ்ரீ பரம்மசாரிய சுவாமிகளால் இறைவனுக்கு ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. அம்பாள் திருநாமம் ஸ்ரீ ப்ருகன்நாயகி என்ற பெரியநாயகி. கிழக்கு பார்த்த சன்னதி. வெளியில் மண்டபத்தில் ஸ்ரீ நந்தி தேவர் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். கோஷ்டத்தில் பஞ்ச மூர்த்தி திருஉருவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு கால பூஜை நடைபெறுகிறது.
தல வரலாறு : 1500 ஆண்டுகள் பழமையான சிவாலயம் பூமியில் புதையுண்டு சமீபத்தில் கண்டறியப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிவாலயம் ஊத் துக்காடு என்ற கிராமத்தில் உள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கம்பவர்மன் என்னும் மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டது. நந்தி மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், மூலவர் சன்னதி, இறைவி சன்னதியைக் கொண்டு அமைந்துள்ள இக்கோயிலில் கலை நுட்பங்களைக் காணமுடியும். அழகிய தூண்களும், மணி மண்டபமும் இக்கோயிலில் காணப்படுகின்றன.
சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. புத்திர பாக்கியம் கிடைக்க, சுகப்பிரசவம் ஆக இங்கு வேண்டிக்கொள்ளலாம். இங்கு வேண்டிக்கொள்ள கடன் தொல்லை தீரும். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு