பையனூர்





	


	



























	




 




	








 




9:54:29 PM         Tuesday, April 21, 2026

பையனூர்

பையனூர்
பையனூர் பையனூர் பையனூர் பையனூர் பையனூர் பையனூர் பையனூர் பையனூர் பையனூர் பையனூர் பையனூர் பையனூர் பையனூர் பையனூர்
Product Code: பையனூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                              பையனூர், எட்டீசுவரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமல்லபுரத்திலிருந்து 6 கி.மீ தொலைவிலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலும் உள்ளது.

இறைவன்: எட்டீசுவரர்

இறைவி : எழிலார்குழலி 

தல தீர்த்தம்  : பைரவர் குளம்

தலச் சிறப்புகள் : மூலவரான ஸ்ரீஎட்டீஸ்வரர் கருவறை கஜ பிருஷ்ட அமைப்பில் ஆனது. கிடைக்காததை கிடைக்க வைக்கும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இத்தல இறைவன் எட்டீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிப்பது சிறப்பு. நந்திதேவர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை, காலபைரவர், சரபேஸ்வரர், சைவ நால்வர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், எழிலார் குழலிஅம்மன், சித்தர் இடைக்காடர் போன்ற பல சன்னதிகள் உள்ளன.

தல வரலாறு : எட்டீஸ்வரரை எட்டித் தரிசித்தால் கிட்டாத கயிலாயமும் கிட்டிவிடும்" என்பது அக்காலத்தில் வழங்கிய முதுமொழி. சிறுகுறிப்புத் தொண்ட நாயன்மார் இத்திருத்தலத்து இறைவனாரை வழிபட்டமை பெரியபுராணம் 1080 ஆவது பாடலில் வருகின்றது.  பல்லவ மன்னர் நந்திவர்மன்  ஆட்சிகாலக் கல்வெட்டுகள் இத்திருக்கோயிலில் ஐந்து உள்ளன. இதில் ஒன்றில் உள்ள தகவல் அக்காலத்தில் திருக்கோயில்களை நிர்வகிப்பதில் இருந்த நேர்த்தியைத் தெரிவிக்கின்றது. பையனூர் பெருமக்கள் அவ்வூர் ஏரியைத் தூர் வார ஒப்புக்கொண்டதையும், ஆண்டுதோறும் தூர்வார ஆகும் செலவிற்கு மாமல்லபுரத்து நாகனிடம் வட்டியாகப் பெறப்பட்ட 6400 காடி நெல் பயன்படுத்தப்படும் என்றும் இந்த நெல் பொற்காலால் எனும் அளவையால் அளந்து தரப்பட வேண்டும் எனும் நிபந்தனையும் கூறப்படுகின்றது. மேலும் இந்த ஏரியிலிருந்து பெறும் நீரைப் பயன்படுத்தும் நிலங்களை வேறொருவருக்கு விற்றாலோ, அடமானம் வைத்தாலோ தண்டனையாக ஒரு பட்டி நிலத்திற்கு 16 காடி வசூலிக்கப்படும் என்றும் இதனை எழுதியவர் செட்டி நந்தி என்று பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களது ஆட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு கிராமத்திலும் சைவம்  வைணவம் என்கிற பேதம் இல்லாமல் திருக்கோயில்களைக் கட்டி வழிபாட்டைப் பெருக்கினர் சோழர்கள். அதுபோல் காஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு பல்லவ தேசத்தை ஆண்ட பல்லவ மன்னர்களும் தங்கள் காலத்தில் சென்னை, காஞ்சி ஆகிய பகுதிகளைச் சுற்றி ஏராளமான திருக்கோயில்களைக் கட்டினர். குடிமக்களிடையே பக்தி பெருகவும், நாடு வளம் பெறவும் ஆலய வழிபாடுகளைத் தடை இல்லாமல் நடத்தி வந்தார்கள். தங்கள் காலத்துக்குப் பிறகும் பூஜைகள் நிரந்தரமாக நடப்பதற்கு எண்ணற்ற நிலங்களையும் ஏற்படுத்தி விட்டுப் போனார்கள் பல்லவர்கள்.

பல்லவர்கள் காலத்தில் மகாபலிபுரம், வியாபாரத் தலைநகராக இருந்தது. ஆலயம் கட்டப்பட்ட காலத்தில் (கி.பி. 773) மகாபலிபுரத்தில் வசித்து வந்தவன் நாகன் எனும் எட்டீஸ்வரரின் பக்தன். இந்த ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயப் பணி புரிந்து வந்தான். நாகனைப் போல் ஊர்மக்கள் பலரும் ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயப் பணி செய்து. ஆலயத்துக்குச் சேர வேண்டியதை அங்கு சேர்த்து விட்டு, தங்களுக்கு உரிய கூலியை ஊர் சபையினரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். பையனூரில் உள்ள பெரிய ஏரியை நாகனே தூர் வாரி சுத்தம் செய்ததாகவும் ஒரு செய்தி உண்டு.

விளைச்சலைப் பெற்றுக் கொள்ளும் ஊர் சபையின் உறுப்பினர்கள் சிலர், நாகனுக்கான கூலியைக் கொடுக்கும்போது மட்டும், அவனை வெறுங்கையோடு அனுப்பினர். அதாவது, உனக்கெல்லாம் கூலி எதுவும் இல்லை என்பது போல் அவனிடம் அலட்சியமாகப் பேசி விரட்டி விடுவார்களாம். கூலி இருந்தால்தானே வீட்டில் அடுப்பு எரியும் அன்றாடப் பொழுது நல்லபடியாகப் போகும் வேலையும் செய்து விட்டு, அதற்குரிய பலன் இல்லா விட்டால் என்ன பயன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நாகன், அந்த எட்டீஸ்வரரிடமே தன் குறையைக் கொட்டினான். அவரது சன்னதிக்கு முன்னால் நின்று கண்ணீர் மல்கத் தன் குறையைச் சொன்னான். பிறகு வீடு திரும்பினான். அடுத்த நாள் எட்டீஸ்வரர் ஆலயத்தின் முன்னால் எல்லோருக்கும் கூலி கொடுக்கப்பட்டு வந்தது. வழக்கம்போல் நாகனின் முறை வரும்போது அவனிடம், உனக்கெல்லாம் கூலி கிடையாது. போ போ என்றனர் ஊர் சபை உறுப்பினர்கள் சிலர். நாகன் மிகவும் நொந்து போனான். பிறகு கோபம் வந்தவனாக, எனக்குரிய கூலியைத் தர மறுப்பது தர்மத்தை மீறும் செயலாகும். இதற்குரிய தண்டனையை என்றேனும் ஒரு நாள் நீங்கள் அனைவரும் அனுபவிக்கத்தான் போகிறீர்கள்என்றான்.நாகன் சொல்வதை ஊர் சபையினர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள வில்லை, சரிதான் போப்பா என்று அலட்சியமாகச் சொல்லி விட்டு, அடுத்த ஆளுக்குக்கூலியை அளிக்க முற்பட்டனர். அப்போது நாகன் சிவாலயத்தின் முன் வந்து நின்று ஈசனிடம் இந்த முறைகேடு பற்றி மீண்டும் முறையிட்டான். அதற்குள் ஊர் சபை கலைய ஆரம்பித்தது. அப்போது அனைவரும் கேட்கும்படியாக, அனைவரும் நில்லுங்கள் அப்படியே என்றொரு குரல் அதிகாரமாகக் கேட்டது. வீட்டுக்குச் செல்ல முற்பட்டவர்கள் துணுக்குற்றுக் குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தார்கள். எவரும் இல்லை. யார் எவனர் நம்மை அதிகாரத்தோடு அழைத்தது என்று ஒருவருக்கொருவர் பயம் கலந்த முகந்துடன் விசாரித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் ஒலித்தது அந்த அசரீரி. நாகனுக்கு உரிய கூலியைக் கொடுங்கள். அப்படி மறுத்தால், இது சம்பந்தப்பட்ட அனைவரையும் தீவினைகள் துரத்தும். குடும்பத்தில் நிம்மதியை இழப்பீர்கள். நோயினால் அவஸ்தைப்படுவீர்கள் என்றெல்லாம் அந்த அசரீரி சொன்னது. பிறகு குரல் வந்த திசையில் பிரகாசமான ஒரு ஜோதி தோன்றி,அது மெள்ள மெள்ள நகர்ந்து ஸ்ரீஎட்டீஸ்வரரின் கருவறைக்குள் போய் மறைந்தது. இதன் பின்னால்தான் இது எட்டீஸ்வரரின் எச்சரிக்கை என்பதை ஊர் சபையினர் உணர்ந்தார்கள். அதன் பின், இறைவனின் சந்நிதிக்குப் போய் மன்னிப்புக் கேட்டதோடு, நாகனிடமும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். அவனுக்குச் சேர வேண்டிய கூலியை மொத்தமாகக் கொடுத்தனர். இனிமேலும் இது போல் எதுவும் நிகழாது. எங்களுக்கு எந்த தண்டனையும் கொடுக்க வேண்டாம் என்று இறைவனிடம் சொல் என்று நாகனிடம் கெஞ்சலாக வேண்டிக் கொண்டனர். நாகனும் அவர்களை மன்னித்து, இறைவனுக்கு நன்றி சொல்லிப் புறப்பட்டான்.

கோவில் அமைப்பு : விஜயநாத விக்கிரம பல்லவ மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட 1300 ஆண்டு பழைமையான சிவபெருமான் திருக்கோயில். இத்திருக்கோயிலின் விமானம் கஜபிருஷ்ட விமான வகையைச் சேர்ந்தது. 2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாறு கொண்டது. முழுக்க முழுக்கக் கருங்கல்லைக் கொண்டே கட்டப்பட்ட அருமையான கற்றளி கோயிலாக மிகவும் விஸ்தாரமான நிலப்பரப்பில் ஆலயம் சகல வசதிகளோடும் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. கருங்கல் கொண்டு கட்டப்பட்ட இந்த அற்புதமான திருக்கோயில், காலத்தின் கோலத்தால் பராமரிப்பு இன்றி உருக்குலைந்து சின்னாபின்னமாகிப் போனது.  கோவிலின் சுற்றுப் பிராகரத்தில் அரிய பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

பல்லவ மன்னர்கள் கட்டிச் சிறப்பித்த பல கோயில்களுள் ஒன்றுதான் பையனூர் ஸ்ரீஎட்டீஸ்வரர் ஆலயம். கருங்கல் கொண்டு கட்டப்பட்ட இந்த அற்புதமான திருக்கோயில், காலத்தின் கோலத்தால் உருக்குலைந்து சின்னாபின்னமாகிப் போனது. சைவம்  வைணவம் இரண்டும் ஒற்றுமையாக இருந்து வந்துள்ள கிராமம் பையனூர். இதை நிரூபிக்கும் வகையில் எட்டீஸ்வரர் சிவாலயமும், அருளாளப் பெருமாள் வைணவ ஆலயமும் ஊரில் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இரண்டு ஆலயங்களுக்கும் நடுவே ஒரு திருக்குளம் காணப்படுகிறது. பைரவர் குளம் என்பது பெயர். விஜய நந்தி விக்கிரமப் பல்லவனால் கி.பி. 773ஆம் ஆண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்பது ஒரு கல்வெட்டுத் தகவல். முழுக்க முழுக்கக் கருங்கல்லைக் கொண்டே கட்டப்பட்ட அருமையான கற்றளி கோயிலாக அந்தக் காலத்தில் இருந்து வந்துள்ளது. மிகவும் விஸ்தாரமான நிலப்பரப்பில் ஆலயம் சகல வசதிகளோடும் இருந்திருக்கிறது. கி.பி. 768 ல் விஜய நந்தி விக்கிரமப் பல்லவனின் ஆட்சிக் காலத்திய கல்வெட்டு ஒன்று பையனூர் ஆலய இறைவனார் பெயர் ஸ்ரீஎட்டீஸ்வரர் என்று குறிப்பிடுகிறது. சற்றே காலத்தால் மாறுபட்ட இன்னொரு கல்வெட்டு இறையனார் பெயர் பையனூர் எட்டீஸ்வரமுடைய நாயனார் என்று குறிப்பிடுகிறது. பைனூரின் பெயர் இராஜசேரி சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடப்படுகிறது. முதலாம் குலோத்துங்கனின் சிற்றரசனான கங்கரையன் என்பவன் பையனூர் ஆலயத்துக்குச் சொந்தமான ஒரு நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றை கி.பி. 1098-ல் தீர்த்து வைத்துள்ளதாக ஒரு கல்வெட்டு மகிமைகளை சொல்கிறது. அதோடு, இந்த ஈசனின் தானங்களையும் இந்த ஆலயத்துக்கு அளித்துள்ளானாம்.

பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. வழக்கு விவகாரங்களில் நீதி கிடைக்காமல் திண்டாடுவோரும், சகல செல்வங்கள் கிடைக்கவும் இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் வழிபாடு செய்கின்றனர். சுவாமி எட்டீஸ்வரருக்கும், அன்னை எழிலார் குழலிக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : செங்கல்பட்டு 

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×