திருநிலை





	


	



























	




 




	








 




9:54:12 PM         Tuesday, April 21, 2026

திருநிலை

திருநிலை
திருநிலை திருநிலை திருநிலை திருநிலை திருநிலை திருநிலை திருநிலை திருநிலை திருநிலை திருநிலை திருநிலை திருநிலை திருநிலை திருநிலை
Product Code: திருநிலை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                  திருநிலை, பெரியாண்டவர் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டத்தில் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்திலிருந்து சுமார் 8 கி.மி. தொலைவில் திருநிலை கிராமம் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து கிழக்கே 14 கி.மி தொலைவிலும், திருப்போரூரிலிருந்து மேற்கே 12 கி.மி. தொலைவிலும் இத்தலம் உள்ளது. 

இறைவன் : பெரியாண்டவர் 

இறைவி : அங்காளபரமேஸ்வரி 

தலமரம்  :  வில்வம்

தல தீர்த்தம்  :  சித்தாமிர்த தீர்த்தம்  

தலச் சிறப்புகள் : சிவன், சக்தி ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே அமையப் பெற்ற திருத்தலம். சிவபெருமானின் பாதம் பட்ட தலம். குழந்தைப் பேறு அருளும் பரிகாரத் தலம். கலியுகத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஈசன் ஜோதி ரூபமாக காட்சி அளித்து நின்ற தலம். ஜோதியாக காட்சி தந்த வெட்ட வெளி இடத்தில் சுயம்புலிங்கம் பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபடும் தலம். லிங்கத்தின் வலதுபுறம் சிவசக்தி இருவரும் ஒருங்கே அமர்ந்து தெய்வீகக் காட்சி தருகின்ற தலம். பார்வதி தேவி திருநிலைநாயகி என அழைக்கப்படும் தலம். சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம். சுயம்பு லிங்கத்தைச் சுற்றி சிவகணங்கள் மண் உருக்கொண்டு இறைவனை பூஜிக்கும் தலம். இவ்வாலயத்தில் எம்பெருமானை சுற்றி 21 சிவகணங்கள் கைகூப்பி வணங்கி நிற்கும் காட்சி இவ்வாலயத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும். நந்தி பகவானூம் மனிதவடிவில் தோன்றி சிவனைபோல் அருள்வது இங்கு காணலாம்.

தல வரலாறு : பெரியாண்டவர் ஆலய புராண வரலாற்றின்படி சக்தியின் சாபத்தால் சித்தம் கலங்கி பித்தம் பிடித்த நிலையில் ஈசன் உலகை வலம் வந்து திருநிலையில் ஓருநிலையாய் நின்ற இடம். தாயின் கருவின்றி பெரிய மனிதராக பிறவியெடுத்து ஈசனே உலகை வலம் வந்தபோது பார்வதியால் பெரியாண்டவர் என்று வணங்கப்பட்ட திருத்தலம். இயற்கை எழில் நிறைந்த, பசும்சோலைகள் சூழ்ந்த, வானாந்திர மரங்களாலும், மலைகலாலும் சூழப்பட்ட, திருநிலை கிராமத்தில் புள்ளினங்கள் இசைபாடும் குளம் மற்றும் ஏரி இருக்கரையின் மத்தியில் சுயம்பு லிங்கமாக தோன்றி சிவபெருமான் பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்பாளிக்கின்றார். சிவபெருமானே மனிதவடிவம் தாங்கி உலகலாம் வலம் வந்து திருநிலையில் ஒருநிலையாய் தன்பாதத்தை பதித்து நின்று பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகின்றார். 

முன் ஒரு காலத்தில் சுந்திரபத்திரன் என்ற அசுரன் சிவபெருமானை வணங்கி பல அரிய வரங்கள் பெற்றான் அவற்றுள் முக்கியமானது அவனது மரணம் சிவசக்தி சொரூபமானவரால் மட்டுமே நிகழ வேண்டும். மேலும் அதற்கு முன்னால் எம்பெருமான் மனித அவதாரம் எடுத்து முடித்திருந்தால் மட்டுமே அவனை கொல்ல முடியும் என்ற சிக்கலான வரம் பெற்று இருந்தான். இதனால் இந்திரன் முதலான தேவர்களை விரட்டியடித்து அவர்களின் ஆட்சியை கைப்பற்றி பலவகையில் தொல்லை கொடுத்து வந்தான். அசுரனின் தொல்லை பொருக்க முடியாமல் சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டு காக்குமாறு வேண்டினர். தேவர்களை காக்கும் பொருட்டும் அசுரர்களை அழிக்கும் எண்னத்துடன் சக்தியைக் காண எம்பெருமான் சென்றார்.

அசுரர்களின் அராஜகம் அதிகமாகி விட்டதால் அவர்களை உடனே அழித்து தேவர்களை காக்க வேண்டும், உடனே புறப்படு என்று கூறி நின்றார். ஜயன் கூறியதைக் கேளாமல் உமையவள் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து அமைதி பூண்டு இருந்தார். தாயிடம் இருந்து பதில் வரததால் கோபம் கொண்ட எம்பெருமான் என்னுடைய சொல் கேட்டு பதில் கூறாமல் இருக்கும் நீ மீண்டும் மானிட பெண்ணாக பிறப்பாய் என கண்கள் கனல் கக்க எச்சரித்தார். இவ்வார்த்தை கேட்டு தியாணத்தில் இருந்து விழித்தெழுந்த பார்வதிதேவி ஜயனை நோக்கி எம்மை மானிடராக பிறக்க சொல்லும் நீவிர், எம்மில் பாதியாக விளங்குபவர் தானே ஆகவே நீரும் ஓரு நாழிகை மனிதனாக பிறக்க வேண்டும் என சாபமிட்டார். உமை அவதாரத்தின் ஆழமும், அர்த்தமும் புரிந்து பேசினாள். இவ்வார்த்தையைக் கேட்ட ஜயனின் சித்தம் மெல்ல கலங்கியது. ஈசன் தன்நிலை மறந்து மனித அவதாரம் கொண்டார். உலகமெல்லாம் திக்கு திசையின்றி அலைந்து திரிந்து வந்தார். பரமனின் இந்நிலை கண்டு உமையவள் அச்சமுற்றாள். உலக ஜீவராசிகள் பயத்தில் நடுங்கின. தேவர்கள் முதலனோர் தாயிடம் வணங்கி பரமனை காத்து அருளுமாறு வேண்டினர்.

உடனே தாய் தன் சூலாயுதத்தை வீசி எறிந்தாள் அது பிரகாசமாய் பூமியில் ஓர் இடத்தில் நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து இருபத்தி ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி விழ்ந்தன. பின் அவை ஒவ்வொன்றும் சிவகணங்களாக மாறி சுற்றி ஜயனின் வருகைக்காக காத்து நின்றன. சூலாயுத ஒளியைக் கண்டு எம்பெருமான் திருநிலையாய் ஓர் இடத்தில் பாதம் பதித்து ஒருநிலையாய் நின்றார். பார்வதிதேவி அவ்விடத்திலேயே வணங்கி நின்றாள். ஒரு நாழிகை நேரமும் முடிய மனிதனாய் வந்தவர் சிவமாய் உறுமாறி தோன்றினார். மேலும் பெரிய மனிதனாக இவ்வுலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிரே இன்று முதல் பெரியாண்டவர் என்று அழைக்கப்படுவீர் என உமையவள் கூறினாள். இவ்வார்தையை கேட்ட தேவர் முதலானோர் பெரியாண்டவா பெரியாண்டவா எனக் கூறி அழைத்து அவர் பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். சுற்றி நின்ற சிவகணங்களும் எம்பெருமான் நாமம் கூறி வணங்கி நின்றன.

ஒருநிலையில் திருநிலையாய் நிறுத்திய இவ்விடம் திருநிலை என அழைக்கப்படும் எனக் கூறிய ஜயன், மேலூம் உலகை காக்கும் நாயகி உமையவள் என்னை திருநிலையாய் நிலை கொண்டு ஆட்கொண்டதால் இன்று முதல் திருநிலைநாயகி எனஅழைக்கப்படுவாள் என்று வாழ்த்தினார். இவ்வார்த்தையைக் கேட்ட தேவர் முதலானோர் திருநிலை நாயகி என அழைத்து மகிழ்ந்து அவர் பொற்பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். சிவபெருமான் திருநிலையாய் ஒருநிலையில் தன்பாதம் பதித்து அருள்புரிந்த திருத்தலமே திருநிலையாகும். மேலும் பார்வதிதேவி தாயின் கருவின்றி பெரியமனிதனாக தோன்றி நிவீரே உலகை வலம் வந்தமையால் இவ்வுலகில் கருவின்றி வாடும் தம்பதியர்க்கு யார் இவ்விடத்தில் உன்நாமம் நினைக்கின்றார்களோ அவர்களுக்கு மழலைகளை வழங்கி அருள் புரியவேண்டும் என வேண்டினார். இறைவனும் அவ்வாறே நடைபெறும் என அருளினார்.இன்றும் இவ்வாலயத்தின் அருகில் உள்ள சித்தாமிர்த குளத்தில் நீறாடி இறைவனை நினைத்து மனம் உருகி நெய் திபம் ஏற்றினால் எந்த ஒரு தம்பதியும் குழந்தைபேறு பெருவார்கள் என்பது இறையன்பர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக விளங்குகிறது.

நெடுங்காலத்திற்கு முன்பு ஒரு தம்பதியினர் குழந்தைபேறு இல்லாமல் மனவேதனையுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானை மனதில் நினைத்து மனமுருக வேண்டி துதித்து வந்தனர். ஒருநாள் சிவபெருமான் அவர்கள் கனவில் தோன்றி நான் பெரியாண்டவர் அவதாரக் கோலதில் உலகை வலம் வந்தபோது என்னை நிலைகொள்ள செய்த இடமான திருநிலைக்கு சென்று வேண்டினால் உங்களுக்கு மழலை செல்வம் கிட்டும் என்றும் மேலும் உங்களுக்கு வழிகாட்டியாக ஒரு பன்றி அழைத்து செல்லும் என்று கூறி மறைந்தார். அவர்களும் அங்கு எப்படி செல்வது என்று தெரியாமல் விழித்தபொது திடீர் என்று அங்கு ஒரு பன்றி தோன்றி அவர்களுக்கு வழி காட்ட அவர்களும் இறைவன் கூறியவாறே அதன் பின்னே சென்றனர். அது ஒரு இடத்தில் ஆடாமல் அசையாமல் திருநிலையாய் நின்று பின் திடிர் என காணமல் மறைந்து. இறைவனே தங்களுக்கு பன்றி உருவில் வந்து வழிகாட்டியதாக நினைத்து வழிபட்டபோது அந்த இடம் வெட்டவெளியில் ஒளிமயமாய் திகழ்ந்து ஜோதி தரிசனம் தந்தது. அதைக் கண்ட அவர்கள் பெரியாண்டவர் நாமத்தை மனமுருக சொல்லி வழிபட்டனர். ஒர் ஆண்டுகழித்து ஆண்குழந்தை பெற்றதாக கோயில் தல வரலாறு கூறுகின்றது.

இம்மை மறுமை எனும் பிறவிப் பெருந்துன்பம் போக்கி அடியாரை ஆட்கொள்ளும் நாயகனாக எம்பெருமான் காட்சிதருகின்றார். அவரின் அற்புதங்கள் கணக்கில் அடங்கா. மழலை இல்லா மங்கையரின் மனக்குறை களைந்து மழலைகளை உடன்வழங்கி, மனநலம் கண்டோர் வாழ்வில் நலவலம் வழங்கி, மணமாகதப் பெண்களுக்கு எளிதில் மணங்கூட்டி, ஏழை எளியோரின் வாழ்வை காத்து ரட்ச்சித்து, உழைத்து ஊர்காக்கும் உழவர்க்ளின் பயிர் வாழ மழைவளம் அளித்து, கொஞ்சித்தவழும் குழந்தைகளை அஞ்சாது காத்து, நாடிவரும் அடியார்கள் வாழ்வில் அஞ்ஞானம் நீக்கி மெய்ஞானம் வழங்கி மேன்மையான வாழ்வு தரும்.

சிவபெருமானின் திருவுளப்படி மகதநாட்டு மன்னன் விளாசநாதன்  தேவகி தம்பதியினருக்குச் செல்வ மகளாகப் பிறந்தாள், உமாதேவி. அக்குழந்தைக்கு பூங்குழலி எனப் பெயரிடப்பட்டது. நாரதரின் அறிவுரைப்படி, பூங்குழலி இறைவனை மணம் புரிய அவ்வப்போது, தியானம் செய்து வந்தாள். இந்நிலையில், சடாமுடி முனிவரின் சாபத்தால் வேதாளமாக மாறிய இந்திரன், மகதநாட்டு மக்களைத் துன்புறுத்தியும், கொன்று தின்றும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தான். சிவனடியாரான மகத நாட்டு மன்னனால் அவனை ஒன்றும் செய்ய இயலவில்லை. இதைக் கண்டு வருந்திய பூங்குழலி வேதாளத்துடன் போர் புரிந்தாள். ஆனால், அவளாலும் வெல்ல முடியாமல் மூர்ச்சையானாள்.

அப்போது வேடன் வடிவில் வந்த சிவபெருமான், மகதநாட்டு மன்னனின் அனுமதியோடு வேதாளத்தை அடக்கி அழித்தார். வேதாளமாய் இருந்த இந்திரனின் சாபம் நீங்கியது. அதற்குப் பரிசாக மன்னன் வாக்களித்தபடி, பூங்குழலியை மணந்தார். இத்திருமண வைபவத்தை திருமால், லட்சுமி, பிரம்மா உள்ளிட்ட தேவர்களும், மன்னனும், நாட்டு மக்களும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

இதற்கிடையே சுந்தரபத்திரன் என்ற அசுரன், தான் புரிந்த கடுந்தவத்தால், சிவன் பார்வதி இணைந்த சக்தியைத் தவிர, வேறு எந்த சக்தியாலும் அழிக்க முடியாத வரத்தினைப் பெற்றான். அதன் விளைவாக இந்திரலோகம் அவன் வசமானது. சிவபெருமான் பூமிக்குச் சென்ற நிலையில், கயிலாயத்தையும், கைப்பற்றத் துணிந்தான். அவன் பெற்ற வரம் அவன் கண்களை மறைத்தன. அதன்படியே இறைவனும் இறைவியும் பூமியில் பிறந்து, ஓருருவாகி சுந்தர பத்திரனை வதம் செய்தனர் என்கிறது தல புராணம்.

முன் காலத்தில் தன் மனைவியோடு, திருக்கழுக்குன்றம் வந்தார் ஒரு சிவனடியார். அங்கு வேதகிரீஸ்வரரிடம், தனக்கு பிழைக்க ஒரு வழிகாட்டும்படி வேண்டி நின்றார். அன்று இரவு அவர் கனவில் வந்த இறைவன், ‘விடிந்த பிறகு உங்கள் முன் தோன்றும் பன்றியைப் பின்தொடருங்கள் வழி கிடைக்கும்’ எனக் கூறி மறைந்தார். அதன்படியே ஒளிவீசும் பன்றி அங்கே தோன்றியது. அதனைப் பின்தொடர்ந்து வடகிழக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சென்ற போது, ஓரிடத்தில் பன்றி, ஜோதி வடிவாய் அசையாமல் நின்று மறைந்தது. இது இறைவன் செயலே என முடிவு செய்து அதே பகுதியில் தங்கி, விவசாயம் செய்து பிழைத்து வந்தனர். அவர் களின் வறுமையும் நீங்கியது. குழந்தைப் பேறு வேண்டி மீண்டும் வணங்கி நின்றனர். மீண்டும் கனவில் வந்த இறைவன், ‘ஜோதியாக மறைந்த இடத்தில் நான் மறைந்திருக்கிறேன். அங்கே என்னை பூஜை செய்து வா, உன் வேண்டுதல் நிறைவேறும்’ என்று கூறி மறைந்தார்.

மறுநாள் அங்கு சென்று அகழ்ந்து பார்த்த போது, அங்கே ஒளி வீசும் சுயம்புலிங்கத் திருமேனியைக் கண்டு மகிழ்ந்தனர். அதன்பின் தொடர்ந்து பூஜைகள் செய்து வந்தனர். இதையறிந்த ஊர்மக்களும் வழிபடத் தொடங்கினர். அவர்களுக்குக் குழந்தைப்பேறும் கிடைத்தது. இன்றும் அந்தச் சந்ததியினரே பூஜை செய்து வருவதாகத் தலபுராணம் கூறுகிறது. அது முதல் குழந்தைப் பேறு தரும் ஆண்டவனாகப் பெரியாண்டவர் திகழ்ந்து வருகின்றார்.

கோவில் அமைப்பு : திருநிலை கிராமத்தில் வெட்டவெளியில் குடிகொண்டிருக்கும் இறைவன் ஆலயம் வடபுறம் குளக்கரையும், தென்புறம் ஏரிக்கரையும் கொண்டு கிழக்குமுகம் வாசல் கொண்டு அமைந்துள்ளது. நுழைவு வாயிலின் இடதுபுறம் பாலவிநாயகரும், வலதுபுறம் பாலமுருகப் பெருமானும் அருட்காட்சி தருகின்றனர். மூவேழு உலகை வலம் வந்த வண்ணம், மூ இலை வேல் கையனாம், முக்கண்ணனாம், மூவருள் முதல்வனாம் மும்மலம் அழிப்பவனாம், இவ்வாறாக மூன்று நிலை கொண்டு உயர்ந்து நிற்கும் சிவபெருமான் குடியிருக்கும் இவ்வாலயம் மூன்று நிலை கோபுரத்துடன் அமைந்துள்ளது. நுழைவு வாயிலின் இடதுபுறம் தலவிநாயகர் காட்சி தருகிறார். நுழைவு வாயிலின் வலதுபுறம் ஆறுமுகமாம், பன்னிரெண்டு கைகளாம், மயில் மீதமர்ந்த வேலவனாம், வேண்டுதல் செய்தால் கைமேல் பலன்தரும் பாலகனாம் முருகப் பெருமான் அமர்ந்து அருளாசி வழங்கி அன்பர்களுக்கு மூவேழு வலம் வந்த நாயகனைக் காண வழிவிடுகின்றார். 16 கால் மண்டப நுழைவு வாயிலில் உள்ளே நுழைந்தால் நேரே வீபூதி விநாயகரை தரிசனம் செய்யலாம். இவரை விபூதி கொண்டு நாமே அபிஷேகம் செய்தால் செல்வம், கல்வி, அறிவு பெறலாம். இது வேறு எங்கும் காணாத இவ்வாலயத்தின் சிறப்பம்சம். மண்டபத்தின் உள்ளே ஈசன் மனிதனாக உலகை வலம்வந்து ஒரு நிலையில் திருநிலையாய் நின்ற அற்புத கோலமும், அவரை ஒரு நிலையில் ஆட்கொண்ட அங்காளபரமேஸ்வரி ஈசனை வணங்கி நிற்கும் காட்சியும், இவர்கள் இருவரையும் திருமூலரும், இராமலிங்க அடிகளாரும் வணங்கி நிற்பதையும் காணலாம். தங்கமுலாம் பூசிய தகட்டால் வேயப்பட்ட இரண்டாம் நிலை வாயிலின் இடதுபுறம் சித்திபுத்தி விநாயகரும், வலதுபுறம் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமானும் காட்சி தருகின்றனர். நுழைவு வாயில் மேற்புறம் ரிஷப வாகனத்தில் சக்தியுடன் அமர்ந்து எம்பெருமான் அருளும் அற்புதக் காட்சியைக் காணலாம். அங்காள பரமேஸ்வரிக்கு நேர் எதிர்திசையில் சிவனும் சக்தியும் ஒன்று சேர்ந்து அர்த்தநாரீஸ்வரர் உருவில் அமர்ந்து காடசி தருகின்றனர். ஆலயத்தில் தட்சினாமூர்த்தி கோபுரத்தின் தெற்கு திசையில் அமைந்துள்ளார். பைரவர் கோபுரத்தின் வட திசையில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். ஆலயத்தின் சித்தாமிர்த குளத்திற்கு செல்லும் வழியில் முன்னால் தனி சன்னதி கொண்டு விநாயகர், முருகர் இருபுறமும் இருக்க நாகாத்தம்மன் கிழக்கு நோக்கு அமர்ந்த கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். ஆலயத்தின் வடபுறம் அமைந்துள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கினால் சகலமும் கிட்டும். 

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சிறப்பு வழிபாடுகளும் அர்ச்சனை, ஆராதனை நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகின்றது. கார்த்திகை தீபம், மகாசிவராத்திரி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் அடியவர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அன்றைய தினம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : செங்கல்பட்டு

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×