களக்காட்டூர், அக்னீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சீபுரம் மாவட்டத்தில் களக்காட்டூர் என்னுமிடத்தில் உள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.
இறைவன் : அக்னீஸ்வரர்
தல தீர்த்தம் : புத்தேரி
தலச் சிறப்புகள் : இக்கோயிலின் மூலவராக அக்னீசுவரர் உள்ளார். கோயிலின் அருகில் புத்தேரி என்னும் குளம் காணப்படுகிறது. இக்குளம் முன்னர் சந்திரமேகத் தடாகம் என்றழைக்கப்பட்டது. இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் ரிஷபத்தின் மீது உள்ளது சிறப்பு. இந்த சிவனுக்கு ஊருணி ஆழ்வார் என்ற பெயர் இருக்கிறது. அது தற்போது பேச்சுவழக்கில் உருனி ஆழ்வார் என மாறிவிட்டது. ஊருணி என்றால் சிறு குளம். இந்தப் பெயரை நிரூபிக்கும் வகையில் கோயில் அருகில் புத்தேரி என்னும் குளம் இருக்கிறது. சிவன் அக்னி வடிவானவர் என்பதால், அவரைக் குளிர் விக்கும் வகையில் இந்த ஊருணி தோண்டப்பட்டிருக்கிறது.
தல வரலாறு : ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து விட்டார். இதனால் உலகில் யாகம் முதலியன நடத்த முடியவில்லை. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட லிங்க பூஜை செய்தனர். சிவன் அவர்கள் முன்தோன்றி அக்னி பகவானை அங்கே அழைத்தார். அவர் இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை, ஏழு ஜூவாலையுடன் வெளிப்பட்டார். சிவதரிசனம் பெறவே, வாயு, வருணனுடன் தர்க்கம் செய்வது போல் நாடகமாடியதாக தெரிவித்த அக்னி, தனக்கு சிவன் காட்சியளித்த இடத்தில் ஒரு லிங்கத்தை வடித்து பூஜித்தார். அக்னிக்கு காட்சியளித்த அவருக்கு அக்னீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
இது ஒரு கற்கோயில். தெற்கில் நுழைவாயிலைக் கொண்ட இக்கோயில் நான்கு சதுரங்களைக் கொண்ட கருவறை, அந்தராளம் மூடப்பட்ட மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. கருவறையின்மீது விமானம் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. தட்சிணாமூர்த்தி, பிரம்மா ஆகியோர் உள்ளனர். ஒரு முறை வாயு, வருணன், அக்னி, ஆகிய மூவருக்குமிடையே மோதல் ஏற்பட்டபோது அக்னி மறைந்துவிட்டார். பூசைகள் செய்யமுடியால் நின்று போயின. முனிவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் இதுகுறித்து முறையிட்டனர். சிவன் அக்னியை அழைக்க, அக்னி இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை ஆகியவற்றுடன் தோன்றினார். சிவ தரிசனம் பெற தான் இவ்வாறு செய்ததாக அக்னி கூறினார். அக்னிக்கு காட்சி தந்ததால் இறைவன் அக்னீசுவரர் என்றழைக்கப்டுகிறார்.
பிரதோஷம், பௌர்ணமி, சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. பின்னர் சிவலிங்கம் முழுவதும் மறையும் வகையில் சாதத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு, காய்கறிகள், பழ வகைகளால் அவற்றின் மேல் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு