ஊத்துக்கோட்டை, பாபஹரேஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆந்திரப்பிரதேசம் எல்லையில் அமைந்துள்ளது. சென்னையில்இருந்து 24 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இறைவன் : பாபஹரேஸ்வரர்
இறைவி : மரகதாம்பிகை
தல தீர்த்தம் : நந்தியாறு
தல சிறப்புகள் : மூலவரின் அருகிலேயே காசியில் கிடைத்த உள்ளங்கை அளவில் பாணலிங்கம் இருப்பது சிறப்பாகும். இங்கு விநாயகர் தஞ்சணாமூர்த்தி, பலதண்டாயுதபாணி, ஆறுமுகர், துர்கை ஸநத்திங்க்ள் உள்ளன. வடதில்லை எனும் கிராமத்தை தோற்றுவித்த மன்னன் சிதம்பரத்துக்கு இணையான இந்த வடதில்லை விளங்க அழகிய சிவாலயத்தை எம்பார் சுவாமிகளுக்கு ஆலயம் எழுப்பினான். நந்தியாறு எனும் ஆற்றங்கரையில் அமைந்த இத்தலம் காசிக்கு நிகரானதாகவும்,ஆரணி ஆறு கங்கை நதிக்கு இணையானதகவும் போற்றப்படுகிறது. ஆற்றில் நீராடி இறைவனை வாங்கினால் பாவங்கள் அனைத்தும் நீங்குவதால் பாபஹரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
தல வரலாறு : கோவிந்தன் என்ற ஒருவர் ஒரு நாள் கங்கையில் மூழ்கி எழும்போது அவரது கையில் உள்ளங்கை அளவிற்கு பாணலிங்கம் கிடைத்தது. அதை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டும் சிரத்தில் வைத்தும், மார்பில் வைத்து கொண்டு நடமாடினர். உள்ளங்கை அளவு சிவலிங்க திருமேனியை கண்டெடுத்ததால் உள்ளங்கை லிங்கம் கொணர்ந்த நாயனார் என்று போற்றப்பட்டார். திடீரென சைவ மதத்திற்கு மாறிய இவர் பாணலிங்கத்தை காளஹஸ்தி கோவிலில் வைத்து பூஜித்தார். சில காலங்கள் கழித்து மீண்டும் வைணவ மாதத்தில் இணைத்துக்கொண்டார். ராமானுஜர் கோவிந்தனை தனது சீடனாக ஏற்றுக்கொண்டு எம்பார் திருநாமத்தை சூட்டி அருளாசி வழங்கினார். அன்றுமுதல் எம்பார் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். ராமானுஜரின் உத்தரவுபடி எம்பாருக்குசந்திரகிரி அரசர் கட்டிதேவன் யாதவராயன் என்பவன் இந்த சிவாலயத்தை கட்டினான். சோமாவரா பிரதோஷம், மகா சிவராத்திரி, கார்த்திகை தீபம் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
காலை 6.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள நிலையம் : திருவள்ளூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு