கேசாவரம், கைலாச ஈஸ்வரமுடைய மஹாதேவர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில், தக்கோலத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. கார்களில் வருபவர்கள் சுமார் 1 கி.மீ தொலைவு நடந்து செல்ல வேண்டும்.
இறைவன் : கைலாச ஈஸ்வரமுடைய மஹாதேவர்
தல தீர்த்தம் : மோச நதி
தல சிறப்புகள் : சோழர் காலத்து கோயில். பல ஆண்டுகளாக பாழடைந்த நிலையில் வழிபாடின்றி இருந்த கோயில், தற்போது நல்ல உள்ளம் படைத்தவர்களால் வழிபாட்டுக்கு ஏற்றதாக ஆக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பலரால் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், கோயிலை சென்றடைய தனியாருக்கு சொந்தமான வயல்வெளிகளில்தான் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது.
சிவ இரத்தின பூஜித்து அனுதினமும் பூஜிக்கப்பட்ட தலம். முதலாம் குலோத்துங்க சோழனார் தரிசிக்கப்பட்ட தலம். கோஷ்டத்தில் தொந்தி கணபதி, தட்ச்சனமூர்த்தி, லிங்கோத்பவருக்கு மேல் விமானத்தில் பிரயோக சக்கரத்துடன் நரசிம்மர், பிரம்ம, துர்கை சிலைகள் உள்ளன. காசி, கையை, காளகஸ்தி ஆகிய தளங்களை தரிசித்த பலனை கொடுக்கும். தரிசிக்க மனா வளர்ச்சி குன்றியவர்கள், சித்தபிரமை பிடித்தவர்கள், இத்தல இரவினை வழிபட குணமடைகின்றனர். இறைவன் தவயோகியாய் அமிர்ந்து இருப்பதால் அனைத்து சகல தோஷம் நிவர்த்தியாகும்.
பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், பிரதோஷம், சிவராத்திரி, பௌர்ணமி, ஆவணி வளர்பிறை பஞ்சமி உள்ளிட்ட விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. மகாளய பட்சம் மற்றும் அமாவாசை போன்ற நாள்களில் இறைவனுக்கு சிறப்பு பூசை நடைபெறுகிறது.
காலை 6.00 மணி முதல் 9.30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள நிலையம் : வாலாஜா ரோடு, காட்பாடி, அரக்கோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு