வளையாத்தூர்





	


	



























	




 




	








 




2:21:22 AM         Saturday, May 02, 2026

வளையாத்தூர்

வளையாத்தூர்
வளையாத்தூர் வளையாத்தூர் வளையாத்தூர் வளையாத்தூர் வளையாத்தூர் வளையாத்தூர் வளையாத்தூர் வளையாத்தூர்
Product Code: வளையாத்தூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                           வளையாத்தூர், வளவநாதீஸ்வரர்

திருத்தல அமைவிடம் : இந்தியாவின்  தமிழ்நாடு மாநிலத்தின்  வேலூர் வேலூர் சென்னை ரோட்டில் 24 கி.மீ., தூரத்திலுள்ள ஆற்காடு சென்று,  17 கி.மீ., சென்றால் வளையாத்தூரை அடையலாம். ஆற்காட்டில் இருந்து பஸ்வசதி குறைவு. ஆரணி  ஆற்காடு நெடுஞ்சாலையில் வளையாத்தூர் கூட்ரோட் நிறுத்தத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. 

இறைவன் :  ஸ்ரீ வளவநாதீஸ்வரர்

 உற்சவர்  : சந்திரசேகரர்

இறைவி :  ஸ்ரீ பெரியநாயகி

தல விருட்சம் : வன்னி

தல தீர்த்தம்  : சிவதீர்த்தம்

தல சிறப்புகள் :சிவபெருமான் சூரியன், சந்திரன், அக்னி என மூவரையும் கண்களாகக் கொண்டவர். வளவநாதீஸ்வரர் சதுர வடிவ பீடத்தில், இடப்புறமாக சற்றே வளைந்த நிலையில், நவாம்ச மூர்த்தியாகக் காட்சி தருவதாக ஐதீகம். இந்த ஒன்பது நிலைகளும் நவக்கிரகங்களைக் குறிப்பதாகவும் சொல்வர். இதனால், கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவர்த்திக்காக வேண்டிக்கொள்கிறார்கள். பெரியநாயகி அம்பாள் நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கிறாள். எனவே, இவளை சிவனாகவே கருதி சிவராத்திரியன்று இரவில் பூஜை செய்வர். இவளது நான்கு கைகளிலுள்ள சுண்டுவிரல்களிலும் மோதிரம் அணிந்திருக்கிறாள். இங்குள்ள சந்திரசேகரர் சுண்டுவிரல்கள் இரண்டில் மோதிரம் அணிந்துள்ளார்.

தல வரலாறு : இப்பகுதியில் வசித்த மன்னர் தீவிர சிவபக்தராக இருந்தார். மக்கள் சிறப்பாக வாழவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி, தம் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் சிவன்கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். ஆனால், அவருக்கு எந்த இடத்தில் கோயில் அமைப்பதெனத் தெரியவில்லை. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய சிவன், ஒரு இடத்தைக் குறிப்பிட்டார். அதன்படி, மன்னர் வளையாத்தூரில் கோயில் எழுப்பினார். விவசாயம் செழித்து மக்கள் வளத்துடன் வாழ்ந்தனர். எனவே சிவனுக்கு 'வளவநாதீஸ்வரர்' என்று பெயர் சூட்டினார். 

தென் தமிழகம் மட்டுமல்லாமல் வடதமிழகத்திலும் சோழர்கள் எண்ணற்ற சிவாலயங்களை நிறுவினார்கள். அவற்றுள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்கள் எண்ணிலடங்காதவை. அவ்வகையில் வளையாத்தூரில் அமைந்துள்ள வளவநாதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகத் திகழ்கிறது. ‘வளவன்’ என்பது சோழ அரசரைக் குறிக்கும் சொல்லாகும். அதனாலேயே இத்தலம் வளவீஸ்வரம் என்றும் தல இறைவர் வளவநாதர் என்றும் போற்றப்படுகின்றார்.‘நல்லூர்’ என்றும் ‘சதுர்வேதி மங்கலம்’ என்றும் அழைக்கப்படும் ஊர்கள் சோழ சாம்ராஜ்ஜியத்தில் வேதம் ஓதும் அந்தணர்களுக்குக் கொடையாக அளிக்கப்பட்ட இடங்களாகும். அவ்வாறு, முதலாம் இராஜராஜ சோழனால் இங்கு வாழ்ந்த வேதியர்களுக்கு இவ்வூர் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வூர் முதலாம் இராஜராஜனின் பட்டப்பெயரால் ‘சிவபாதசேகர நல்லூர்’ என்று அழைக்கப்பட்டுள்ளது.

கோவில் அமைப்பு :  கி.பி. 11ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பெற்ற வளவநாதர் ஆலயம், பின்னர் இந்த தொண்டை மண்டலத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்த பல்லவர்கள் காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கியுள்ளது. அதன்பின்னர் 13ம் நூற்றாண்டில் சம்புவராயர் ஆட்சிக்காலத்தில் முதலாம் இராஜநாராயணச் சம்புவராயரால் இக்கோயில் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. பின்னர், விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் செங்கற்களால் விமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அமைதியான அழகிய கிராமம். அதன் ஈசான திக்கில் கீழ்திசை நோக்கி எழிலாய் அமைந்துள்ளது ஆலயம். பிரமாண்டமான கருங்கல் சுற்றுமதில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. முதலில் தென்முக வாயிலுள் நுழைந்திட, நேராக அம்பாள் சந்நதி தென்படுகிறது.

சிவன் சன்னதி எதிரே வாசல் கிடையாது. கல் ஜன்னல் மட்டுமே உள்ளது. கோயிலில் நுழைந்ததும் முதலில் அம்பாளைத்தான் தரிசனம் செய்கின்றனர். சிவன் சன்னதி முகப்பில் நின்ற விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானையுடன் சண்முகர் உள்ளனர். இந்த முருகன் கையில் சிவனுக்குரிய சின்முத்திரை காட்டியபடி இருப்பது விசேஷமான அமைப்பு.தென்திசை பார்த்து நின்ற வண்ணம் அருள் சிந்துகின்றாள். பிரஹன் நாயகி எனும் பெரிய நாயகி. இந்த அம்பிகைக்கு ஒரு சிறப்பு உள்ளது. இந்த அம்பாளின் நெற்றியில் சிவனுக்கு உள்ளதுபோல் நெற்றிக்கண் உள்ளது. மாங்கல்ய வரபிரசாதியாகத் திகழ்கின்றாள் இந்த அருள் வல்ல நாயகி. பின், மேற்கே திரும்பிட, மகாமண்டபம், இடைமண்டபம், கடந்து அந்தராளம் அடைந்து, அப்பனை இருகரம் கூப்பி, வணங்கி மகிழ்கின்றோம். கருவறையுள் சதுர ஆவுடையாருடன் அற்புதமாக அருள்பாலிக்கின்றார் வளவநாதீஸ்வரர். இவருக்கு காவல்புரியும் துவார பாலகர்களின் சிற்பம் ஓர் அற்புதக் கலை படைப்பு. நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் சோழ சாம்ராஜ்ஜிய சிற்பக் கலைஞர்களின் கைத்திறனை எண்ணி பிரமிப்படைய வைக்கின்றது.

மகா மண்டபத்தில் பைரவரோடு பிரதோஷ நாயகரையும் தரிசனம் செய்கின்றோம். ஆலய வலம் வருகையில் உடைந்த பழங்கால கருங்கல் சிற்பங்களையும் கண்ணுறுகின்றோம். நிருதி மூலையில் சப்த மாதர்கள் உள்ளனர். வேம்பு மற்றும் அரச மரத்தின் கீழே நாகர் சிலைகள் காணப்படுகின்றன. ஈசான திசையில் பிரதான பைரவர் சந்நதியும், நவகிரக சந்நதியும் அமையப் பெற்றுள்ளன. முன்புறம் நந்தி மண்டபம் உள்ளது. அக்னி மூலையில் தலவிருட்சமான வன்னிமரம் கிளைகள் பல பரப்பி, விரிந்துள்ளது. அதன்கீழ் வன்னியடி விநாயகர் அற்புதமாக வீற்றிருக்கின்றார். சோழர் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக கொற்றவை எனப்படும் துர்க்கை ஆளுயரத்தில் செதுக்கப்பட்டு, கோயிலுக்கு முன்பாகத் தனியாகக் காட்சியளிக்கின்றது. இவ்வாலயத்தில் நான்கு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். பிரகாரத்தில் சூரியன், பைரவர், விநாயகர், சண்டிகேஸ்வரர் மற்றும் நவக்கிரகங்கள் உள்ளனர்.

கி.பி.1260 ஆம் ஆண்டு இராஜநாராயண சம்புவராயர் கல்வெட்டில், இவ்வூர் கலவைப் பற்றில் இருந்துள்ளமையையும், இக்கலவைப் பற்றில் இருந்த பல கோயில்களை புணரமைத்ததாகவும் இம்மன்னன் தனது 7வது ஆட்சி ஆண்டில் குறிப்பிட்டுள்ளான். இக்கல்வெட்டின் மூலம் கோயில் விளைநிலங்களுக்கு வரிகளை நீக்கி, அந்த வருவாயைக் கொண்டு பல கோயில்களை புணரமைத்ததாகவும் மேலும் அறிகின்றோம். பின், சகல லோக வென்று மண் கொண்ட சம்புவராயர் கல்வெட்டில் இவ்வாலயத்திற்கு வழங்கிய நிலக்கொடைகள் பற்றி குறிக்கப் பெற்றுள்ளன. கி.பி.1538 ஆம் ஆண்டு அச்சுதப்ப தேவராயரின் தெலுங்கு மொழி கல்வெட்டில் ‘ஆலம்பூண்டி’ என்னும் ஊரை வளவநாயனார் ஆலயத்திற்கு வழங்கிய குறிப்பு காணப்படுகின்றது. கி.பி.1539 ஆம் ஆண்டு கல்வெட்டில் ‘வேட்டைதாங்கள்’ என்ற ஊரையும் வளவீஸ்வர நாயனார் ஆலயத்திற்கு தானமாக வழங்கப்பட்ட செய்தியும் காணப்பெறுகின்றது.

இவ்வாலயத்தில் பிரதோஷம், தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், சங்கடஹர சதுர்த்தி, அன்னாபிஷேகம், ஆருத்ரா, சிவராத்திரி, நவராத்திரி போன்ற விசேடங்கள் விமரிசையாக நடத்தப்படுகின்றன. தினசரி இங்கு இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன.  நாடி ஜோதிடத்தில் இவ்வாலயம் சிறந்த பரிகாரத்தலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாமி  அம்பாள்  சுப்ரமணியருக்கு பால் மற்றும் இளநீர் அபிஷேகம் செய்தும், பைரவருக்கு முந்திரிப் பருப்பு மாலை அணிவித்தும் பிரார்த்தனை செய்ய, திருமண பாக்கியம் கைகூடும். இத்தலத்தின் விருட்சமான வன்னி மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்ள குழந்தைப்பேறு கிட்டும். திருக்கார்த்திகையன்று கோயிலில் லட்சதீபம் ஏற்றுவர். இங்குள்ள சப்தகன்னியரின் பீடத்தில் அவர்களுக்குரிய வாகனங்கள் வடிக்கப்பட்டுள்ளது சிறப்பான அமைப்பு. வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

அருகிலுள்ள  நிலையம்   :  வாலாஜா ரோடு, காட்பாடி, அரக்கோணம்

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×