வீரபாண்டி, அதுல்யநாதேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் திருவண்ணாமலை வழியில் 32 கி.மீ. தொலைவில் வேட்டவலம் உள்ளது. அங்கிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள அதுல்யநாதேஸ்வரரை தரிசிக்கலாம்.
இறைவர் : அதுல்யநாதேஸ்வரர்
தலமரம் : வன்னி மரம், கொன்றை மரம்
தலச் சிறப்புகள் : வீரபத்திரர் தவமிருந்து சிவனை வழிபட இறைவன் ரிஷப ரூடராக காட்சி தந்த தலம். கோஷ்டத்தில் தட்சணாமூர்த்தி, துர்க்கை சன்னதி உள்ளது. தென்பெண்ணை அற்றன்கரையில் அமைந்துள்ளது. ஸ்வாமியும் அம்பிகையும் கிழக்கு பார்த்து காட்சி தருகின்றனர். சர்வ ஐஸ்வர்யங்களும் பெருகி, சீரும், சிறப்புடனும் வாழ வகை செய்யும் இறைவனே அதுல்யநாதேஸ்வர சுவாமி என்கின்றார் பொய்யாமொழியார். இத்திருத்தலத்தில் உறையும் தல விருட்சங்களான வன்னி மரமும், கொன்றை மரமும் ஆவியின் தொல்லைகளில் இருந்து விடுபட்டு இன்புற்று வாழ இத்திருத்தலத்து தல விருட்சத்தை தொழ சிறப்பாகும்.
தல வரலாறு : ஜைனிமுனிவர் தென்பெண்ணையாற்றங்கரையில் வன்னி மரங்களும், கொன்றை மரங்களும் சூழ்ந்த வனப்பகுதியில் சிவபெருமானை மனமுருகி பூஜித்து வர, சிவனருளால் சாமகான வேதத்தை தொகுத்து அமைத்தார். வீர பத்திரரும், முனிவரும் சிவனை வழிபட்டதால் மன்னர்கள், மக்கள், செல்வந்தர்கள் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டுள்னனர். இந்த தல நாயகியை செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வந்து அர்ச்சனை செய்தால் சகல ஐஸ்வர்யங்கள் பெருகும். கன்னிமார்களுக்கு நல்ல கணவர்கள் அமைவார்கள். மேலும் குழந்தைகள் கல்விகளில் சிறந்து விளங்குவார்கள். தைமாதம் 5ம் தேதி கங்கை நீரானது தென் பெண்ணையாற்றின் கலப்பதாக ஐதீகம். அன்று சுவாமி பல்லாக்கி வீதி உலா வந்து கரையில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. வைகாசி மாத அஷ்டமி தினத்தில் துர்கை சன்னதி எதிரே சண்டி யாமம் விமர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. வீரபத்திர சுவாமி வணங்க மனதில் உள்ள பயம் நீங்கி தைரியம் பெறலாம்.
முன்னொரு சமயம் தட்சன் என்ற மன்னன், ஒரு யாகம் நடத்தி, யாவரையும் அழைத்துவிட்டு, உலகாளும் நாயகனும், தனது மாப்பிள்ளையுமான சிவபெருமானை மட்டும் அழையாது புறக்கணித்தான். சிவபெருமானின் கோபத்தில் கண்கள் சிவக்க, கடும் உக்கிரத்துடன் உருவாக்கிய திருவடிவுதான் வீரபத்திரர் சுவாமி. சிவனாரின் மொத்த சக்தியையும் ஒருங்கே கொண்ட வீரபத்திரர், தட்சனின் யாகத்தை சீர் குலைத்து, தட்சனையும் அழித்து ஒழித்தார். வீரபத்திர சுவாமியை வணங்கினால், மனதில் தோன்றும் எண்ணிலாத பயங்கள் அழியும். தைரியம் விருத்தியுண்டாகும். சிவபெருமானின் அருளைப் பெற நினைப்பவர்கள், வீரபத்திர சுவாமியை வணங்க சிவனருள் கிட்டும். தட்சனை அழிக்க வீரபத்திரசுவாமி தவமிருந்த புண்ணியத்தலமிது.
சவுந்தர்ய கனகாம்பிகை தொழுதால் பெண்களுக்கு அழகு கூடும். கணவன் மாற்று மங்கை மேல் பிரியம் கொள்ள மாட்டான். தொழுவார் தம் குலத்து, கொலை களவு போன்றன நடவாது அம்மை காப்பாள் என்கின்றார் அழகுணி சித்தர். இத்திருக்கோயிலின் கோஷ்டத்தில் உள்ள அஷ்டபுஜதுர்க்கை, மாறாத மச்சத்தை போக்குவாள். பெண்களுக்கு முகத்தில் கேசம் முளைப்பதைத் தடுப்பாள். வேதங்கள் கற்றுத்தேற விரும்புவோர்க்கும் மந்திர தந்திர மாந்த்ரீக வேலைகளில் தேர்ச்சி பெற விரும்புபவரும் ஓடி வந்து தொழுதுயெழ வேண்டிய புண்ணிய மூர்த்தியே இந்த அதுல்யநாதேஸ்வரர் என்கின்றார் அகத்தியர். கங்கை நீரானது தென் பெண்ணை ஆற்றில் கலக்கிறது. செவ்வாய், வெள்ளியில் இந்நதியில் மூழ்கி ஒப்பிலாமணீஸ்வரனைத் தொழ போதும் போதும் என்று சொல்லும் அளவு செல்வம் சேரும். பிரதோஷம், சிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் பிரார்த்தனை செய்கின்றனர்.
காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : விழுப்புரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு