தேவிகாபுரம்





	


	



























	




 




	








 




9:22:02 PM         Sunday, May 03, 2026

தேவிகாபுரம்

தேவிகாபுரம்
தேவிகாபுரம் தேவிகாபுரம் தேவிகாபுரம் தேவிகாபுரம் தேவிகாபுரம் தேவிகாபுரம் தேவிகாபுரம் தேவிகாபுரம்
Product Code: தேவிகாபுரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                                          தேவிகாபுரம், கனககிரீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையிலிருந்து 48 கி.மீ. தூரத்திலும் வேலூரிலிருந்து 60 கி.மீ. தூரத்திலும் சென்னையிலிருந்து 160 கி.மீ. தூரத்திலும் தேவிகாபுரம் உள்ளது.

 இறைவன் : கனககிரீசுவரர்

இறைவி : பெரியநாயகி

தல விருட்சம் : வில்வம்

தல தீர்த்தம் : சிவதீர்த்தம்

தல சிறப்புகள் : உச்சியில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சுவாமியின் திருநாமம் கனககிரீசுவரர் அல்லது பொன்மலைநாதர் என்று அழைக்கப்படுகின்றது. உள் மண்டபத்தில் தூணில் உள்ள சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக 9 பெண்களின் சிலையை யானை நிற்பதுபோல் வடிவமைத்துள்ளனர். மலையை விட்டு கீழே இறங்கும் வழியில்தேவி தவம் செய்ததாக கருதப்படும் இடத்தில் அன்னையின் பாதம் உள்ளது. மலை அடிவாரத்தில் கோகிலாம்பாள் சமேத காமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் மொத்தமே 9 கல்களால் அமைக்கப்பட்டுள்ளது. மலையில் அம்மன் இல்லாததால் பிரதோஷம் இங்கு நடத்தப்படுகிறது. மலையின் உச்சியில் உள்ள கனககிரீஸ்வரர் திருக்கோவிலில் மூலஸ்தானத்தில் இரண்டு மூலவர்கள் உள்ளனர். 
 
கோவில் அமைப்பு : திருவண்ணமலை மாவட்டத்தில், அண்ணாமலையார் ஆலயத்தை அடுத்து பெரிய ஆலயமாக தேவிகாபுரம் அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஸ்ரீகனககிரீஸ்வரர் ஆலயம் விளங்குகிறது. 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரியநாயகி அம்மன் ஆலயத்திற்கு அருகேயுள்ள சிறிய மலையில் கனககிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயில் இடைக்கால சோழர் ஆட்சிக்கு பின்னர் வந்த விஜயநகர அரசர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். 55 கல்வெட்டுகள் அம்மன் கோயிலிலும், ஒரு கல்வெட்டு மலைக் கோயிலிலும் உள்ளன. கலைநுட்பம் மிகுந்த சிற்பங்களுடன் நிற்கும் ராஜகோபுரம், மதில் சுவர்கள் ஆலயத்தின் சிறப்பு. விஜயநகர மன்னன் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்ட கலை நயம் மிக்க சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய சிவன் கோவில் உள்ளது.
 
கல்வெட்டுகளில் இவ்வூர் ஜெயம்கொண்ட சோழர் மண்டலத்து பல்குன்ற கோட்டது மேல்குன்ற நாட்டு ராசகம்பீர மலையை அடுத்த முருகமங்கலம் பற்றைச் சார்ந்த தேவக்காபுரம் என்று உள்ளது. இது மருவி இப்போது தேவிகாபுரம் என்று அழைக்கப்படுகிறது. கனககிரி மலையில் சுயம்பு மூர்த்தியாக 500 அடி உயரமும் 5 கி.மீ. சுற்றளவும் 302 படிகளையும் கொண்ட கனகாசலம் அல்லது கனககிரி என்றும் பெயருடைய மலை அமைந்துள்ளது. இதன் உச்சியில் சாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இவரை கனககிரீஸ்வரர் என்றும் பொன்மலை நாதர் என்றும் அழைக்கின்றனர். 3 நிலை ராஜகோபுரம், நந்தி, பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்தமாதர், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், அகோர வீரபத்திரர் அருள்பாலிக்கிறார்கள். இங்கு விசாலாட்சி அம்மன் சன்னதியும் உள்ளது. கீழே உள்ள பெரியநாயகி அம்மன் தனி சன்னதி. விஜய நகர கிருஷ்ணதேவராயர் காலத்தில் கோயில் கட்டப்பட்டதாக தெரிகிறது. அழகிய சிற்பங்கள் உள்ள அற்புதமான கோயில் இது.
 
காஞ்சி மாநகரில் அன்னை காமாட்சி தனிபெரும் ஆலயத்தில் எழுந்தருளியிருப்பதுபோல இங்கும் அன்னை ஆதிசக்தி தனி ஆலயத்தில் எழுந்தருளியிருந்து அருளாட்சி புரிந்து வருகிறாள். இந்த அன்னையின் திருநாமம் பெரிய நாச்சியார் என்றும் பெரிய நாயகி என்றும் அழைக்கப்படுகிறது. தேவிக்குரிய இவ்வாலயம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் உள்ள பெரிய நாயகி கோயில் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 7 நிலை ராஜகோபுரம் மற்றும் 3 பிரகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவி இங்கு தவமிருந்து சிவபெருமானிடம் சேர்ந்ததால் திருமணத்தடை உள்ளவர்கள் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. தவத்தை மெச்சி பங்குனி உத்தரத்தின்போது சாமி மலையிலிருந்து கீழே இறங்கி வந்து திருமணம் செய்துகொண்டு போகிறார் என்பது இத்தலத்தின் சிறப்பு.
 
தல வரலாறு : வேடன் ஒருவன் கிழங்கு அகழ்ந்து எடுப்பதற்கு மலை உச்சியில் இரும்பு கம்பியால் ஆன கருவியை கொண்டு தோண்டியபோது குபீரென ரத்தம் கொப்பளித்ததாம். அதை மேலும் தோண்டியபோது அழகிய சிவலிங்க திருமேனி வெளிவந்தது. அன்று முதல் பக்தர்கள் அந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வந்தனர். காயம் ஏற்பட்டதன் காரணமாக வெந்நீரில் அபிஷேகம் செய்தனர். அது இன்றும் மலைமேல் உள்ள சிவபெருமானுக்கு வெந்நீர் அபிஷேகம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுயம்பு லிங்கம் சிறிய அளவில் கண்ணுக்கு தெரியாத அளவில் இருப்பதால் அருகிலேயே காசி விஸ்வநாதர் லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜைகன் நடந்து வருகின்றன.
 
ஒருமுறை இந்த கோவிலின் வழியாக போருக்குச் சென்ற பல்லவ மன்னன் இச்சிவன் கோவிலின் பெருமையை பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றான். பல்லவ மன்னன், தான் போரில் வெற்றி பெற்றால் மலையின் மேல் உள்ள சிவனுக்கு பெரிய கோயில் கட்டி தருவதாக வேண்டிக் கொண்டான். போரில் வெற்றி கண்ட பல்லவ மன்னன் தன் வேண்டுதலை மறந்து விட்டான். பிறகு மன்னனுக்கு பல கஷ்டங்கள் ஏற்பட்டது. அப்போதுதான் ஈசனுக்கு, கோவில் கட்டி தருவதாக சொன்னது நினைவுக்கு வந்தது. பல்லவ மன்னன் சிவனுக்காக கோயிலை கட்டிய போது வேடன் கண்டெடுத்த சுயம்புலிங்கம் திடீரென்று காணாமல் போய்விட்டது. வருத்தத்தில் இருந்த பல்லவ மன்னன் காசியிலிருந்து மற்றொரு லிங்கத்தைக் கொண்டு வந்து அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்தான். கும்பாபிஷேகம் நடந்து முடிந்த மறுகணமே சுயம்புலிங்கம் திரும்பவும் காட்சி தந்தது. கடவுளை மறந்த பல்லவ மன்னனை, ஈசன் மறந்து இருக்கிறார் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. பல்லவ மன்னன் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு கனககிரிஸ்வரர் என்ற பெயர் வைத்து அதே கருவறையில் இரண்டு மூலவர்கள் வைத்து இன்றளவும் வழிபட்டு வருகின்றனர். 
 
ஒரு முறை பிருங்கி முனிவர் சக்தியை விட்டுவிட்டு சிவனை மட்டும் வண்டு ரூபத்தில் வந்து தரிசித்ததன் காரணமாக சக்தி கோபமடைந்து சிவனின் ஒரு பாதியில் தான் கலக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, சக்தியானவள் சிவனை விட்டு பிரிந்து சென்றாள். இதற்காக சிவன் சக்தியிடம், ‘சக்தியான நீ பூலோகத்தில் காஞ்சிபுரம் என்னுமிடத்தில் காஞ்சி காமாட்சியாக தவமிருந்து காத்திரு. காலம் கனிந்து வரும் சமயத்தில் உன்னை மணந்து கொள்கிறேன் என்று வாக்களித்தார். பின்னர் திருவண்ணாமலைக்கு வந்து வழிபாடு செய்யும்போது என் உருவில் இடப்பக்கத்தில் உனக்கு இடம் தருகின்றேன் என்றும் வாக்களித்தார்.’ சிவபெருமான் கூறியபடி சக்தி தேவியும் காஞ்சிபுரத்தில் தவம் இருந்தபோது ஏகாம்பரநாதரை மணந்தார். அடுத்ததாக தேவி திருவண்ணாமலைக்கு செல்லும் வழியில் தேவிகாபுரத்தில் ஒரு மண்டபத்தில் கனககிரீஸ்வரை வணங்கி தவமிருந்தார். இதனால்தான் இந்த தளம் தேவிகாபுரம் என்ற பெயரை பெற்றுள்ளது. இங்கிருந்து திருவண்ணாமலைக்குச் சென்று சிவனின் இடது பக்கத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றது.
 
மலைமீதுள்ள கனககிரிஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படும் வெந்நீரை தீர்த்தமாக உட்கொண்டால் ரத்த சம்பந்தமான நோய்களும் தீராத நோய்களும் தீரும் என்பதும் மனத்துயரம் நீங்கி வாழ்வில் வளமும் நலமும் தருபவராகவும் அருள்பாலிக்கிறார். இங்கு அம்பாள் குழந்தை வரம் கல்யாண வரம் தருபவராகவும் அருள்பாலிக்கிறார். இந்த அம்மனை குழந்தை இல்லாத தம்பதிகள் மனமுருக வேண்டிக்கொண்டு விளக்கேற்றி கோவிலை சுற்று வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் பால், தயிர் இளநீர், எண்ணெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர். 
 
பங்குனி உத்திரப் பெருவிழா, பங்குனி மாதம் கிருத்திகையுடன் கூடிய பஞ்சமி திதியில் கொடியேற்றி, அன்று முதல் பத்து நாட்களுக்கு நடைபெறும். பத்தாவது நாள் உத்திரத்தன்று விழா முடிவடையும் அன்று கொடி இறக்கப்படும். இவ்விழாவில் நாள்தோறும் பஞ்சமூர்த்திகளும் மலைக்குச் சென்று வரும் காட்சி மிகவும் சிறப்புடையதாகும். சித்திரை  நடராஜர் அபிசேகம், புரட்டாசி நவராத்திரி ஐப்பசி மலையின் மீது சுவாமிக்கு அன்னாபிசேகம், கார்த்திகை தீபத்திருவிழா மாசி- மகாசிவராத்திரி இவை தவிர பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் மிகவும் சிறப்புற நடைபெறுகிறது.பிரதோசம் மிக சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். பொங்கல் வைத்தல், மொட்டை அடித்தல், கல்யாண மாலை சாத்துதல் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள். நெய்விளக்கு ஏற்றவும் செய்கிறார்கள். பவுர்ணமி நாட்களில் 3.5 கி.மீ தூரம் உள்ள இந்த மலையை கிரிவலம் வருகிறார்கள். 
திருமணத்தடை உள்ளவர்கள் பௌர்ணமி நாட்களில் கிரிவலம்  வந்தால் திருமணத்தடை நீங்கும்.
 
மலையின் மேல் உள்ள கோயில் காலை 8.00 மணிமுதல் பகல் 10.00 மணிவரை, மலையின் கீழே உள்ள அம்மன் கோயில் காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை, மாலை 5.00 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும் கோவில் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் :  காட்பாடி, வாலாஜா ரோடு, திண்டிவனம் 

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×