பாலவநத்தம் சிவசந்தநாதசுவாமி





	


	



























	




 




	








 




5:10:25 PM         Friday, May 01, 2026

பாலவநத்தம் சிவசந்தநாதசுவாமி

பாலவநத்தம் சிவசந்தநாதசுவாமி
பாலவநத்தம் சிவசந்தநாதசுவாமி பாலவநத்தம் சிவசந்தநாதசுவாமி பாலவநத்தம் சிவசந்தநாதசுவாமி பாலவநத்தம் சிவசந்தநாதசுவாமி பாலவநத்தம் சிவசந்தநாதசுவாமி பாலவநத்தம் சிவசந்தநாதசுவாமி
Product Code: பாலவநத்தம் சிவசந்தநாதசுவாமி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                       பாலவநத்தம், சிவசந்தநாதசுவாமி 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில், அமைந்துள்ள கிராமங்களில் பாலவநத்தம் முக்கிய நகரமான அருப்புக்கோட்டையிலிருந்து 12 கி.மீ தூரத்திலும், விருதுநகரிலிருந்து 9 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. கோவில்பட்டியில் இருந்து 23 கி.மீ தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. 

இறைவன் : சிவசந்தநாதசுவாமி சிவபரிபூர்ண அம்மாள்

தலச் சிறப்புகள் : இங்கு மூலவருக்கு உருவம் இல்லை. ஊஞ்சலில் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்குத்தான் பூஜை செய்யப்படுகிறது. விநாயகர், அன்னபூரணி, முருகர், நாகர், ஆஞ்சனேயர், இருளப்பசாமி சன்னதிகள் உள்ளது.

தல வரலாறு : கி பி 19ம் நூற்றாண்டில் கட்டப்பதாக கூறப்படுகிறது. செட்டியார் வகையின மக்கள் அருப்புக்கோட்டையிலிருந்து கொல்லிமலை சென்ற போது வெள்ளம் மழை ஏற்பட்டது. செட்டியார் இன மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வந்த மூன்று பெட்டிகள் கரை ஒதுங்கின. பெட்டியை எடுத்து இரவு முழுவதும் தங்கினார் அவர்களது கனவில் சர்ப்பம் தோன்றி என்னை வழிபட சகல பாக்கியத்தை தருவேன் என்றும் பெட்டியினை தரையில் வைக்க கூடாது எனவும் சொல்லி மறைந்தது. பெட்டியினை மரத்தில் கட்டி வைத்து விட்டு வியாபாரதிருக்காக கொல்லி மலை சென்றனர். மேலும் கொல்லி மலை தீர்த்தத்தை எடுத்து பெட்டிமேல் தெளித்து வழிபாடு நடத்தினர். பிறகு பெட்டி கட்டிருந்த  மரத்தை சுற்றி கோவில் கட்டி வழிபாடு செய்தனர். அப்போது பாலவநத்த பகுதியில் ஐயர் வாழ்ந்த பகுதியாக இருந்ததால் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். அன்று இரவு அனைவரது வீடும் தீப்பற்றி எரிய மக்கள், கோவில் கட்ட தனமாக இடத்தை கொடுத்தனர். அன்றுமுதல் செட்டியார் வகையினர் பல்வேறு பகுதியில் வாழந்தாலும் குல தெய்வமாக கருதுகின்றனர்.

காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள ரயில் நிலையம் : விருதுநகர்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×