சேத்தூர்





	


	



























	




 




	








 




4:37:56 AM         Friday, May 01, 2026

சேத்தூர்

சேத்தூர்
சேத்தூர் சேத்தூர் சேத்தூர் சேத்தூர் சேத்தூர் சேத்தூர்
Product Code: சேத்தூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                              சேத்தூர், கண்ணீஸ்வரர் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் ராஜபாளையம் செங்கோட்டை ரோட்டில் 10 கி.மீ. தொலைவிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 

இறைவன் :  கண்ணீஸ்வரர் 

தலச் சிறப்புகள் :  இங்கு பூர்ணகலா, புஷ்கலாவுடன் அய்யனார் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். சபரிமலை பக்தர்கள் இந்த சன்னிதியில் இருமுடி கட்டி புறப்படுகின்றனர். ஆஞ்சநேயரும் புடைப்பு சிற்பமாக தெற்கு பார்த்து உள்ளார். வியாபாரம் செழிக்கவும், குடும்ப பிரச்னை தீரவும் இவருக்கு சனிக்கிழமைகளில் பூஜை செய்கின்றனர். செவ்வாய் தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்து திருமணத்தை நடத்தி வைக்க  சேத்தூர் கண்ணீஸ்வரர் கோயில் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யலாம்.

தல வரலாறு: வீரபாகு பாண்டியனுக்கும், விக்கிரம சோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்தது. விக்கிரமசோழன், பாண்டியன் மீது பலமுறை போர் தொடுத்தும், அவனை வெல்ல முடியவில்லை. எனவே பாண்டியனைக் கொல்ல பலமுறை சதி செய்தான். தொடர்ந்து சதி செய்ததால் ஏற்பட்ட பாவத்தால், விக்கிரம சோழன் பார்வை இழந்தான். தவறை உணர்ந்து, தனக்கு மீண்டும் பார்வை கிடைக்க தேவதானம் என்ற ஊரிலுள்ள சிவனை வழிபட்டான். அங்கு அவனுக்கு ஒரு கண் பார்வை மட்டும் கிடைத்தது. மற்றொரு கண்ணுக்கு பார்வை கிடைக்க அருள்புரிய வேண்டும் என்று சோழன் வேண்டினான். சிவன் அவன் கனவில் தோன்றி, “தனக்கு ஒரு கோயில் கட்டினால், பார்வை கிடைக்கும்,” என்று கூறி மறைந்தார். அதன்படி சேத்தூரில் அவன் கோயில் கட்டி பார்வை பெற்றான், கண் தந்த சிவனுக்கு 'திருக்கண்ணீஸ்வரர்' என்று பெயரிட்டான்.

கண் பார்வை பிரச்னை உள்ளவர்கள், திருக்கண்ணீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரையில் நடராஜருக்கு அபிஷேகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, பங்குனி போன்ற சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள ரயில் நிலையம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×