திருமானூர், கைலாசநாதர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டத்தில்
இறைவன் : கைலாசநாதர்
இறைவி : காமாட்சியம்மன்
தல தீர்த்தம் : கொள்ளிடம்
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : அம்மனையும் ஸ்வாமியும் ஒரே இடத்தில் இருந்து தரிசனம் செய்ய கூடிய சிறப்புடையது. தட்சணாமூர்த்தி சின்முத்திரை ஜெபமாலை ஓலைச்சுவடி உடுக்கை ஆகியவை தனது கைகளில் ஏந்தி காலடியில் முயலகனின் மீது காலடி பதித்துள்ளார். முயலகனின் கையில் கத்தி கேடயம் இல்லாமல் பாம்பு உள்ளது. எனவே நாகதோஷ மூர்த்தியாக உள்ளார். கோயிலின் வடமேற்கு மூலையில் ஜேஷ்ட தேவி, வராகி, சாயாதேவி காட்சி தருகிறார்கள்.
கோவில் அமைப்பு சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு ஆலயத்தை கட்டப்பட்டுள்ளது.2.5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் இரண்டு பிரகாரமும் இரண்டு வாசல்களும் உள்ளன. கிழக்கு வாசல் முன்பு பலிபீடமும், நந்திகேஸ்வரர் உள்ளது. செற்ப்பு திருமேனி சோழர்கள் கலைஅம்மசத்தோடு உள்ளது. 1791 ம் ஆண்டு அரியலூர் ஜமீன்தார் ஒப்பில்லாத மழவழையார் என்பவர் பல திருப்பணிகள் செய்துள்ளார். சோழ மாமன்னர் கண்டராதித சோழ மன்னனின் மனைவியான மாதேவியரால் கட்டப்பட்டது
பிற்காலத்தில் பாண்டிய மன்னரால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்த இந்த தலம் திருமாநல்லூர் என்றாகி திருமானுர் என்றானது. அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. வருடப்பிறப்பு, பிரதோஷம், வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடிப்பூரம், நவராத்திரி, தீபாவளி, அன்னாபிஷகம், திருக்கார்த்திகை, திருவாதிரை, சக்ராந்தி, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் போன்றவை சிறப்பாக கொண்டப்படுகிறது.
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : தஞ்சாவூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு