காமரசவல்லி





	


	



























	




 




	








 




7:42:46 PM         Saturday, May 02, 2026

காமரசவல்லி

காமரசவல்லி
காமரசவல்லி காமரசவல்லி காமரசவல்லி காமரசவல்லி காமரசவல்லி காமரசவல்லி காமரசவல்லி காமரசவல்லி காமரசவல்லி காமரசவல்லி
Product Code: காமரசவல்லி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                  காமரசவல்லி, கார்க்கொடேசுவரர் 

திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் அருகே காமரசவல்லி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. காமரசவல்லிக்கு திருநல்லூர், கார்க்கொடீஸ்வரம், சதுர்வேதிமங்கலம், ரதிவரபுரம், காமரதிவல்லி என்ற பெயர்களும் உண்டு. 

இறைவன் : கார்க்கொடேசுவரர்

இறைவி : பாலாம்பிகை

தல சிறப்புகள் : இங்கு கிழக்குப் பார்த்த திருக்கோலத்தில் ஈசனும்,தெற்குப் பார்த்த கோலத்தில் அன்னை பாலாம்பிகாவும் அருள்பாலிக்கின்றனர். நாகங்களின் அரசரான கார்க்கோடகன், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவம் இருந்து, ஈசனை பூஜித்த தலம் காமரசவல்லி, கார்க்ககோடகன் பூஜித்த ஈசனான சவுந்தரேஸ்வரர், பின்னாளில் கார்க்கோடேஸ்வரர் ஆனார்.  காஞ்சி மகா பெரியவா 1950 ஆம் ஆண்டில் இந்த ஆலயத்துக்கு வந்து தன் கையாலேயே ஸ்ரீகார்க்கோடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டுச் சென்றிருக்கிறார்.

தல வரலாறு  : அபிமன்யுவின் மகனான பரீட்சித்து பிறப்பதற்கு முன்னரே மாலவனின் அருளைப் பெற்றதாகக் கூறுவர். அவர், காட்டில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரின் கழுத்தில் ஒரு பாம்பை எடுத்துப் போட்டார். கோபமடைந்த முனிவர் ஏழாம் நாளில் பரீட்சித்து சாவார் என சாபமிட்டார். பிற ரிஷிகளின் மூலமாகவும், தன்னுடைய தவ வலிமை மூலமாகவும் சாபத்தைப் பற்றி அறிந்துகொண்டாலும் அதிலிருந்து தப்ப இயலாமல் ஏழாம் நாள் பாம்பு கடித்து இறந்து போனார்.இவரைக் கடித்த பாம்பு கத்திரனின் புதல்வனான கார்க்கோடகன் ஆவார். தன் தந்தை இறந்ததைக் கேள்விப்பட்ட பரீட்சித்துவின் மகன் ஒரு யாகத்தை உண்டாக்கி அனைத்துப் பாம்புகளையும் அதில் இட்டு தீயில் பொசுங்கும்படி செய்தான். இதிலிருந்து தப்பிக்க கார்க்கோடகன் மகாவிஷ்ணுவை அணுக அவர் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினால் அவரும் அவருடைய குடும்பமும் காப்பாற்றப்படும் என்று கூறினார். அவர் சொற்படி கேட்டு நடந்து இறைவன் அருளைப் பெற்றார். ஆதலால் இத்தலத்தில் பாம்பு கடித்து எவரும் இறப்பதில்லை என்பர். 

கோவில் அமைப்பு : இக்கோயில் சுந்தர சோழனால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டுகள் மூலமாக அறியமுடிகிறது. போசள மன்னன் இக்கோயிலின் கட்டுமானப் பணிகளை மேம்படுத்தி உள்ளார். விநாயகர், நந்தி, கார்க்கோடயன் இறைவனுக்கு பூசை செய்த சிற்பம் ஆகிய சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தூண்களில் அதிகமான சிற்பங்கள் காணப்படுகின்றன. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், துர்க்கா, சண்டிகேசுவரர், நவக்கிரகங்கள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர், லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். நடராஜர் மண்டபம் உள்ளது. நாகர் சிற்பங்களும் காணப்படுகின்றன. 

ஆலயத்தில் அமைந்த சுமார் 45 கல்வெட்டுக்களும் காமரசவல்லி ஆலயத்தின் புராதனத்தை நாம் பிரமிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்கின்றன. இங்குள்ள கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில், சுந்தர சோழன் என்கிற ராஜகேசரிவர்மனால் (கி.பி 957-974). கி.பி962 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜசோழனின் தாத்தாவே இந்த ராஜகேசரிவர்மன் ஆவான். கி.பி. 1260 ஆம் ஆண்டில் போசள மன்னன் வீர ராமநாதன் என்பவனின் தளபதி ஸ்ரீரங்க தண்டநாயக்கரால் இந்த ஆலயம் சீர்செய்யப்பட்டது.

சோழர்கள் தவிர பாண்டியர்கள், போசளர்கள் போன்ற மன்னர்கள் வழி வழியாக இந்த ஆலய வழிபாட்டில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள். சுந்தர சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜன் முதலாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் மற்றும் மூன்றாம் குலோத்துங்கன், கடாவர்மன் போன்ற மன்னர்கள் தங்கள் காலத்தில் காமரசவல்லி திருக்கோயிலை நிர்வாகித்து வந்ததாகக் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் நடந்த வேத பாராயண போட்டி பற்றியும், மார்கழி மாதத்தில் நடக்கும் திருவாதிரை விழா பற்றியும், அந்த விழாவில் நடைபெறும் சாக்கக் கூத்து என்கிற கூத்து பற்றியும் கல்வெட்டுகளில் தகவல் இடம் பெற்றுள்ளது. இந்த ஊரில் நடந்த ஒரு நிலத் தகராறு பற்றிய வழக்கை விசாரிக்க கி.பி. 1240-ல் போசள மன்னன் வீரசோமேஸ்வரன் காமரசவல்லிக்கு வந்து தீர்ப்பு வழங்கிய விவரத்தையும் ஒரு கல்வெட்டு சொல்கிறது. ஆலய வழிபாடுகளுக்கு மாலைகள் கட்டுவதற்கு நந்தவனம் அமைத்த பகுதி பிச்சதேவன் நந்தவனம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நந்தவனத்தைப் பராமரித்து வந்தவர்கள் வசிப்பதகென ஒரு பகுதியை இருந்துள்ளது. அது திருத்தொண்டன் தொகையன் வளாகம் என வழக்கப்பட்டுள்ளது. காமரசவல்லியில் திருஞானசம்பந்தர் திருமடமும் இருந்து வந்துள்ளது.

பிரதோஷம், சித்திரை வருடப்பிறப்பு, ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிசேகம், திருவாதிரை உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.

காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரையும்,  மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சிராப்பள்ளி 

அருகிலுள்ள ரயில் நிலையம் : அரியலூர்

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×