நெய்வேலி





	


	



























	




 




	








 




11:17:02 AM         Tuesday, April 21, 2026

நெய்வேலி

நெய்வேலி
நெய்வேலி நெய்வேலி நெய்வேலி நெய்வேலி நெய்வேலி நெய்வேலி நெய்வேலி
Product Code: நெய்வேலி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                     திருவனந்தீசுவரம், நடராசர்

திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தின் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் அமைந்துள்ளது.  

இறைவன் : நடராசர்  (அழகிய திருச்சிற்றம்பலமுடையான்)
 
இறைவி :  சிவகாமி (ஓசை கொடுத்த நாயகி)
 
தல சிறப்புகள் : உலகிலேயே பெரிய நடராஜர் நெய்வேலி திருத்தொண்டர் கோயிலில் அருள்பாலிக்கிறார். நாயன்மார்களுக்காக அமைந்த தனிக் கோயில் இது. திருத்தொண்டர் கோயில் என பெயர் இருந்தாலும் ‘நடராஜர் கோயில்’ என்றே பக்தர்கள் இதனை அழைக்கின்றனர். மூலவர் நடராஜர் சிலை ஐம்பொன்னாலானது. இதன் உயரம் 10 அடி 1 அங்குலம். அகலம் 8 அடி 4 அங்குலம். எடை 2 ஆயிரத்து 420 கிலோ. அருகிலுள்ள சிவகாமி அம்மன் சிலை 7 அடி உயரமும், 750 கிலோ எடையும் கொண்டது.
 
கோவில் அமைப்பு : மாணிக்கவாசகன் சொல்லச் சொல்ல திருவாசகம் எழுதியது திருச்சிற்றம்பலமுடையான்’ என சிதம்பரம் நடராஜரே கையெழுத்திட்ட பெருமை மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கு உண்டு. இதன் அடிப்படையில், இக்கோயிலில் உள்ள நடராஜருக்கு ‘அழகிய திருச்சிற்றம்பலமுடையான்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடராஜரின் நடனத்திற்கேற்ப கையில் தாளத்துடன் சிவகாமி ‘ஓசை கொடுத்த நாயகி’ என்ற பெயருடன் அருள்பாலிக்கிறாள். சுவாமியின் பாதத்தின் கீழ் திருமூலர், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோர் உள்ளனர். தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே’ என அவ்வையார் பாடியது போல தன்னைவிட தன் அடியார்களை வழிபடுவதிலே சிவனுக்கு விருப்பம் அதிகம். அதன் அடிப்படையில் சிவனடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களைக் கொண்ட இந்தக் கோயிலில், ஒன்பது கலசங்கள் உள்ளன. பக்தர்கள் அவரவர் நட்சத்திரத்திற்குரிய நாயன்மாரை வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். விநாயகர், சந்திரசேகரர், பார்வதி, மாணிக்கவாசகர், சேக்கிழார், தொகையடியார் சன்னிதிகளும் உள்ளன. அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், திருமூலர் குருபூஜை இங்கு சிறப்பாக நடக்கிறது.
 
இங்குள்ள செம்பொற்சோதிநாதர் லிங்க வடிவில் இருக்கிறார். இதில் மூன்று கோடுகள் விபூதிப்பட்டை போல் இருப்பதை அபிஷேகத்தின் போது காணலாம். சுற்றுப்பகுதியில் விநாயகர், அறம் வளர்த்த நாயகி, அஷ்டபுஜ துர்க்கை, தென்முகக் கடவுள், அண்ணாமலையார், துர்க்கை, வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், பைரவர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. ஏழு குதிரை பூட்டிய வட்ட வடிவ தேரில் சூரியன் நடுவிலும், மற்ற கிரகங்கள் எட்டுத் திசைகளை பார்த்த நிலையில் தவக்கோலத்திலும் உள்ளன.
 
நடராஜருக்கு சிதம்பரத்தில் பொற்சபை, மதுரையில் வெள்ளி சபை, திருவாலங்காட்டில் ரத்தினசபை, குற்றாலத்தில் சித்திரசபை, திருநெல்வேலியில் தாமிரசபை என பஞ்ச சபைகள் இருக்கின்றன. இங்குள்ள நடராஜர் சபை, பளிங்கு கற்களால் ஆனதால் ‘பளிங்கு சபை’ எனப்படுகிறது. கோயில் நுழைவுவாயிலின் கிழக்கே ஆராய்ச்சி மணியும், மனுநீதி முறைப்பெட்டியும் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் விருப்பத்தை எழுதி இந்தப் பெட்டியில் செலுத்தி விட்டு, மூன்று முறை மணியை ஒலிக்கிறார்கள். இந்த மனுக்கள் காலை பூஜையின் போது அர்ச்சகரால் நடராஜர் முன் ரகசியமாக படிக்கப்படும். விருப்பம் நிறைவேறியதும், நன்றிக் கடிதத்தை பக்தர்கள் செலுத்துகின்றனர்.
நடராஜர் சன்னதியின் மேற்கே செம்பொற்சோதி நாதர் சன்னதி உள்ளது. இதன் நெற்றியில் மூன்று கோடுகள் விபூதிப் பட்டை போல் அமைந்திருப்பதை, அபிஷேகத்தின் போது காணலாம். சுற்றுப்பகுதியில் விநாயகர், அறம்வளர்த்த நாயகி, அஷ்டபுஜ துர்க்கை, தென்முகக்கடவுள், அண்ணாமலையார், துர்க்கை, வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர். இங்குள்ள நவக்கிரக மண்டபம் வித்தியாசமாக அமைந்துள்ளது. ஒரே கல்லால் ஆன வட்டவடிவத் தேரில் சூரியன் நடுவில் தாமரை வடிவிலும், மற்ற கிரகங்கள் எட்டுத்திசையை பார்த்தபடி, அமர்ந்த தவக்கோலத்திலும் உள்ளனர். இந்த தேரை தேர்ப்பாகன் ஓட்ட, ஏழு குதிரைகள் இழுத்த நிலையில் உள்ளது. தேரைச்சுற்றி அஷ்டதிக் பாலகர்கள் உள்ளனர். கோயில் நுழைவு வாயிலின் கிழக்கே ஆராய்ச்சி மணியும், மனுநீதி முறைப்பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் தேவைகளை எழுதி, பூஜை நேரத்தின் போது பெட்டியில் போட்டு பின் மூன்று முறை மணியை ஒலிக்கச்செய்கிறார்கள். இந்த மனுக்கள், தினமும் காலை பூஜையின் போது, தீட்சிதரால் நடராஜர் முன் ரகசியமாக படிக்கப்பட்டு பின் எரிக்கப்படுகிறது. கோரிக்கை நிறைவேறியதும், மீண்டும் நன்றிக்கடிதம் எழுதி பெட்டியில் போட்டு செல்கின்றனர். போகர் நான்காயிரத்தில் கூறப்பட்ட விதிகளின்படி பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தி, ஐம்பொன்னால் இந்த நடராஜர் சிலையை வடித்ததாகச் சொல்கின்றனர். சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில் புரியும் திரிமூர்த்தி வடிவம், கோயில் முகப்பில் உள்ளது. நடராஜர் கோயில் அமைக்கப்பட்ட பின் இப்பகுதி “சிவபுரம்‘ என அழைக்கப்படுகிறது. 
 
சித்திரை முதல் நாளில் இறைவனும், இறைவியும் 63 நாயன்மார்களுடனும், 12 திருமுறைகளுடனும் உலா வரும் விழா இங்கு நடைபெறுகிறது. மனிதர்களுக்கு பணக்கஷ்டம், மனக்கஷ்டம், நோய், வறுமை என பலவகையான கஷ்டங்கள் ஏற்படும். எல்லாம் விதிப்படி நடக்கிறது என நொந்து கொள்வார்கள். ஒவ்வொரு வரும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபட, அவற்றிற்குரிய பதிகங்களை பாடினால் பலன் கிடைக்கும். இதற்கு வசதியாக சம்பந்தப்பட்ட பதிகங்கள், அவரவர் ராசிக்கேற்ப கோயில் பிரகாரச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு கிழக்கே அமைந்துள்ள திருமுறை அரங்கத்தில், மாதத்தின் முதல் ஞாயிற்றுகிழமைகளில் திருவாவடுதுறை ஆதினத்தின் சார்பில் சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி, இலவச தேவார வகுப்புகள், திருமுறை விளக்க வகுப்புகள் நடத்தப் படுகிறது. தமிழை ஆராய்ச்சி செய்பவர்களும் இங்கு வருகின்றனர்.  திங்கள்கிழமைகளில், மாலை 5.30 மணிக்கு நடராஜர் முன்பு கூட்டு பிரார்த்தனை செய்து, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரசாதம் தரப்படுகிறது. நாயன்மார்களின் குருபூஜை தினத்தன்று அபிஷேகமும், அன்றிரவு நாயன்மார் புறப்பாடும், அவர்களது வாழ்க்கை வரலாறு குறித்த சொற்பொழிவும் நடக்கிறது.
 
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
 
அருகிலுள்ள விமானதளம் : சென்னை, புதுச்சேரி 
 
அருகிலுள்ள ரயில் நிலையம் : விருத்தாச்சலம், பண்ருட்டி, சிதம்பரம் 
 
பேருந்து வசதி : உண்டு
 
தங்கும் வசதி : உண்டு
 
உணவு வசதி : உண்டு
 
Mail this page Printable view
×
×
×
×
×
×
×