வசப்புத்தூர்





	


	



























	




 




	








 




1:10:03 AM         Tuesday, April 21, 2026

வசப்புத்தூர்

வசப்புத்தூர்
வசப்புத்தூர் வசப்புத்தூர் வசப்புத்தூர்
Product Code: வசப்புத்தூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                      வசப்புத்தூர், காசி விசுவநாதர் 

திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தின் வசப்புத்தூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

இறைவன் : காசி விசுவநாதர்

இறைவி : விசாலாட்சி

தல சிறப்புகள் : சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செல்பவர்கள் இந்த சிவனையும் வழிபாடு செய்தால் தான் முழுப்பலன் என்பது சிறப்பு.  கருவறையில் ஈசன் சிறிய பாணலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். சனகாதி முனிவர்களோடு உலக மக்களுக்கும் ஞான உபதேசம் செய்யும் பொருட்டு எல்லாம் வல்ல எம்பெருமான் குருவடிவம் பெற்று தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையுடன் காட்சியளிக்கிறார்.

தல வரலாறு: முன்காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தென்பகுதியிலிருந்து வருபவர்கள் சற்று இளைப்பாறி, குளித்து தெம்பாக வருவதற்கு ஒரு கோயிலில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். நாளடைவில் அங்கு காசிவிஸ்வநாதரும், விசாலாட்சியும் அருளாட்சி செய்வதைக்கண்டு, முதலில் இவர்களை வழிபட்டு பின் சிதம்பரம் நடராஜரை வழிபட்டால் முழுபலன் கிடைக்கும் என நம்பினர். பின்னர் இத்தல விஸ்வநாதரை வழிபட்டால் காசியில் உள்ள விஸ்வநாதர், விசாலாட்சியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும், என்பதை உணர்ந்தனர். இக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டபட்டிருக்க வேண்டும். அத்தனை அழகு நிறைந்த இந்த கோயில் முழுவதும் கருங்கல் திருப்பணி. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தியும், கோஷ்டத்தில் சண்டிகேசுவரரும், துர்க்கையும் உள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தென் பகுதியிலிருந்து வருவோர் வருமிடங்களில் சற்று இளைப்பாற கோயிலில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் இவரை வழிபட்டுச் செல்ல ஆரம்பித்தனர்.

பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் கொண்டாப்படுகின்றன. புத்திர தோஷமும், பித்ரு சாபமும் விலக இங்குள்ள இறைவனை வேண்டிக் கொள்கிறார்கள். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள அம்மனை வழிபாடு செய்கின்றனர். சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை, புதுச்சேரி 

அருகிலுள்ள ரயில் நிலையம் : சிதம்பரம்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×