திருவந்திபுரம், தென்னகங்காபுரிஸ்வர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டியில் எடையார் குப்பத்தில் பிரகன் நாயகி உடனுறை தென்னகங்காபுரிஸ்வர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இறைவன் : தென்னகங்காபுரிஸ்வர்
இறைவி : பிரகன் நாயகி
தல சிறப்புகள் : பௌர்ணமி தோறும் மூலவரின் மீது நிலவின் ஒளி படுகிறது. வெப்ப நோயினை நோக்கி ஆரோக்கியம் தந்த தலம். திருவதிகையில் முப்புரம் அழித்து இறைவனும் இறைவியும் ஓய்வுஎடுத்து சிறந்த மூலிகை தலமாக விளங்குகிறது. கருவறையில் மிக பிரமாண்டமாக இறைவன் உள்ளார்.
14 ம் நூற்றாண்டில் ஆறாம் மாறவர்ம விக்கிரம பாண்டியனின் அமைச்சராக இருந்த அபிமான துங்க பல்லவராயன் இக்கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளார்.ஒரு காலத்தில் மிக பெரிய கோவிலாக இருந்து தற்போது சிதிலமடைந்து நிலையில் உள்ளது. மிக நீளமான நதியானது இப்போது பாழடைந்து உள்ளது. அன்னியரின் படையெடுப்பால் அறந்தாங்கி நல்லூர் மக்கள் புலம் பெயர்ந்து செல்ல தற்போது ஒரு சில வீடுகளே காணப்படுகிறது. கி பி 6ம் மற்றும் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின்னர் அரசு புரிந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நிர்வகித்து வந்தனர். இவ்ஊரின் அழிவிற்கு பின்னர் வீடுகள், மாளிகை அனைத்தும் ஏழு மேடுகளாக மாறியது. நரிகளின் வாழ்விடமாக இருந்ததால் பெரிய நரிமேடு, சின்ன நரிமேடு என்று மாறியது.மாற்றுரு பகுதில் துறவிகளும் முனிவர்களும் இங்கு வந்து தென்கங்காபுரீஸ்வரை வணங்கி வேள்வி நடத்தி வந்ததால் சந்நியாசி பேட்டை என்று அழைக்கப்பட்டது.
கோவில் அமைப்பு : இங்குள்ள மகா கணபதி அமர்ந்த கோலத்தில் மூஷிக வாகனத்தில் தனி சன்னதி கொண்டு அமைந்துள்ளார். கோபுரம் இல்லாமல் சரியாக விமானஅமைப்பில் பலி பீடத்துடன் கோவில் அமைந்துள்ளது.ஆவுடையார் அகண்டும், பாணம் சிறுத்தும் மெலிந்தும் காணப்படுகிறது. அம்பாள் நின்ற கோலத்தில் தனி சந்நந்தியுள்ளார். பாலமுருகன், தட்சணாமூர்த்தி, தீத்தக்குளம் அமைந்துள்ளது.
சிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிசேகம், மார்கழியில் திருவாதிரை உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன. சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை, புதுச்சேரி
அருகிலுள்ள ரயில் நிலையம் : பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு