ராதா விளாகம்





	


	



























	




 




	








 




3:34:00 PM         Tuesday, April 21, 2026

ராதா விளாகம்

ராதா விளாகம்
ராதா விளாகம் ராதா விளாகம் ராதா விளாகம் ராதா விளாகம் ராதா விளாகம் ராதா விளாகம் ராதா விளாகம்
Product Code: ராதா விளாகம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                 ராதா விளாகம், உத்திராபதி பசுபதியார் 

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் வட்டத்தில்,  ராதா விளாகம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது

இறைவன்  : உத்திராபதி பசுபதியார்

உற்சவர் : சீராளன் 

இறைவி : மாரியம்மன் 

தல விருட்சம் : வில்வம், வேம்பு 

தல தீர்த்தம் : புஷ்கரணி  

தல சிறப்புகள் :  சித்திரை, வைகாசி மாதங்களில் சூரியன் கதிர்கள் காலை நேரங்களில் சிவலிங்க மீது விழுவது சிறப்பு. பிச்சவரம் ஜமின்தர்களை காண வந்த ராதா ருக்மணி நீண்ட காலம் குடிருந்ததால்  ராதா வாளகம் என பெயர் பெற்றது. கிழக்கு பக்க நுழைவாயிலில் கருவறையின் மீது ஒரு கலசம் உள்ளது. பலிபீடம், நந்தி ஈசனை வணங்கிய நிலையில் அமர்ந்துள்ளது. அர்த்த மண்டபத்தின் இடது பக்கத்தில் பால விநாயகர், வலது பக்கம் முருகன் அருள் பாலிக்கிறார். மாரியம்மன் தனி சன்னதி கொண்டு சிரிச்ச முகத்துடன் காட்சி தருகிறாள். கோவிலின் பின்பக்கம் தல விருட்சங்களாக வில்வம், வேம்பு இரு கண்களாக அமைந்துள்ளது. 

200 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த கோவிந்தராஜ செட்டியார் மண் பாண்டம் செய்யும் தொழிலை செய்து வந்தனர். இவரும், இவரது மனைவியும் சிவ பக்தர்களாக  விளங்கினர். அவர்களது கனவில் எனக்கு ஒரு கோவில் கட்டும் மாறு சொல்லி கைகளில் ஒரு சிறிய கற்ஒன்றை கொடுத்து விட்டு மறைந்தார். அந்த கல் லிங்க வடிவில் இருந்ததால் ஊருக்கு நடுவில் வைத்து வழிபாடு செய்தனர். 1961 ம் ஆண்டு கோவில் கட்டி வழிபட்டனர். புத்திர பாக்கியத்திற்கு சிறந்த கோவிலாக விளங்குகிறது. இப்பகுதி மக்கள் சகல விழாக்களுக்கு அம்மனை வணங்கி செல்கின்றனர். கல்வி, திருமண தடை, புத்திர பாக்கியம் , சகல நோய்களை நீக்கியும் இறைவன் அருள்புரிகிறார்.

காலை 5.30 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை, புதுச்சேரி 

அருகிலுள்ள ரயில் நிலையம் : சிதம்பரம்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×