ஒண்டிப்புதூர்





	


	



























	




 




	








 




9:31:17 PM         Saturday, May 30, 2026

ஒண்டிப்புதூர்

ஒண்டிப்புதூர்
ஒண்டிப்புதூர் ஒண்டிப்புதூர் ஒண்டிப்புதூர் ஒண்டிப்புதூர் ஒண்டிப்புதூர் ஒண்டிப்புதூர் ஒண்டிப்புதூர் ஒண்டிப்புதூர்
Product Code: ஒண்டிப்புதூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                        ஒண்டிப்புதூர், நீலகண்டேசுவரர் 

திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில்  கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருகூர் அருகே ஒண்டிப்புதூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

இறைவன் : நீலகண்டேசுவரர், சௌந்தரேசுவரர்

இறைவி  : சுயம்வர பார்வதி தேவி, மீனாட்சி

தல சிறப்புகள் :  பங்குனி, சித்திரை, புரட்டாசி, ஐப்பசி ஆகிய மாதங்களில் நீலகண்டேஸ்வரர் மீது மாலைப் பொழுதில் அஸ்தமன சூரிய கதிர்கள் பட்டு, சுவாமியின் திருமேனி ஒளிர்கிறது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நீலகண்டேஸ்வர லிங்கம் சுயம்புவாக தோன்றியது. இலிங்கத்தின் மையத்தில் ஒரு சிறு குழியும், வலப்பக்க நெற்றியில் சிறிய தேய்வும், பின்புறம் சிறிய குடுமியும் உள்ளது. 

தல வரலாறு :  இக்கோயில் கோஉத்தம சோழன் செப்பேடு, மார்க்கண்டேய பண்டிதர் மடம் செப்பேடு ஆகியவற்றின் மூலமாக இருகூரின் பெருமையை அறியமுடிகிறது.   கரிகாற்சோழன் தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கொங்கு நாட்டில் 36 பெரிய சிவன் கோயில்களிலும், 360 சிறிய சிவன் கோயில்களிலும் திருப்பணி செய்ததாக வரலாறு கூறுகிறது. 28வது கோவிலாக சவுந்தரேஸ்வரர் கோயிலில் திருப்பணி செய்துள்ளார். இத்தலம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப் பெற்றது. சங்க காலத்தில் இந்த பகுதி பொன்னூர், மண்ணூர் என இரு பிரிவாக இருந்ததாகவும், அதுவே இருகூர் என்று ஆனது எனவும், இருளர் தலைவன் இருவன் பெயரில் இருவூர் என இருந்து இருகூர் ஆனதாகவும் பெயர்க் காரணம் கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு : மூலவர், இறைவி, ஞான தண்டாயுதபாணி ஆகியோர் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளனர். சௌந்தரேசுவர், மீனாட்சி அம்மன், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் ஆகியோர் கிழக்கு நோக்கி உள்ளனர்.  மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட மார்க்கண்டேசுவர லிங்கம் உள்ளது.  பிரம்மதேவன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். தேன் வண்ண பாணலிங்கமாக கிழக்கு நோக்கி சவுந்திரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இடப்பக்கத்தில் மீனாட்சியம்மன் நான்கு திருக்கரத்துடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். கொங்கு மண்டலத்தில் எங்கும் இல்லாத வகையில் மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட மார்க்கண்டேஸ்வரலிங்கம் உள்ளது. பீடத்தில் அமிர்த கலசம் அமைந்துள்ளது. இங்குள்ள 4 நந்திகளும் வெவ்வேறான வடிவமைப்பில் உள்ளது. 

ஐப்பசி மாதத்தில் நடக்கும் சூரசம்கார விழா மிகவும் பிரசித்தி பெற்றது. தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், நவராத்திரி, கார்த்திகை ஜோதி வழிபாடு, மார்கழி மாத வழிபாடு ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்கள் நடக்கிறது. இங்குள்ள துர்க்கையை வழிபட்டால், இராகு தோஷம் நிவர்த்தியாகி திருமணத் தடைகள் நீங்கும். மாங்கல்ய தோஷம், திருமணத் தடை நீங்க இங்குள்ள சுயம்வர பார்வதியை வழிபட்டு வரம் பெறுகின்றனர். நீண்ட ஆயுளுக்காக 60 வயதானவர்களுக்கு சாந்தி வழிபாடு  செய்யப்படுகிறது.
காலை 6.00 மணிமுதல் பகல் 11.00 மணிவரை, மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் :  கோயம்புத்தூர் 

அருகிலுள்ள ரயில் நிலையம் :   இருகூர், கோயம்புத்தூர்

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : இல்லை 

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×